என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மாநில பொதுச்செயலாளர் கலந்து கொண்டு பேசினார்
    • ஓய்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டு நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தென்னிந்தியாவின் மூத்த ஆசிரியர்கள் சங்கம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டாரம் சார்பில் இயக்க பவள விழா, பொதுச்செயலாளா; பாராட்டு விழா, ஓய்வுபெற்ற பொறுப்பாளர்கள் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது, வட்டாரதலைவர் அருள்ஜோதி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாக்கியம், மகளிர் அமைப்பாளர்அம்சவள்ளி முன்னிலையில் மாவட்ட துணைதலைவர், வட்டாரசெயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநிலதுணைதலைவர், மாவட்ட செயலாளராகிய எழில், மாவட்டபொருளாளர் தங்கசிவமூர்த்தி, மாநிலசெயற்குழு உறுப்பினர் வேலுமணி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற பொறுப்பாளர்களை பாராட்டினார்கள், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன், மாநிலதுணை பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்கள், விழா முடிவில் வட்டாரப்பொருளாளர் நன்றி கூறினார்.

    • கல்லங்குறிச்சி குறைதீர்க்கும் குமரன் கோயிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது
    • பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் முருகனுக்கு நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி சாலையிலுள்ள குறைதீர்க்கும் குமரன் கோயிலில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், தீருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் கோயிலில் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துணிகரம்
    • சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலு–வலகம் எதிரே வசிப்பவர் செல்லம் கடம்பன். இவர் செந்துறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரு–கிறார். இவரது வீட்டுக்கு கத்தி, அரிவாள்மனை உள்ளிட்ட ஆயுதங்களை சாணை பிடிக்க வந்துள்ளார்.பின்னர் அவர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கத்தி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சாணை பிடித்து விட்டு வீட்டை நோட்டமிட்டுள்ளார். வீட்டில் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது மகள் மட்டுமே இருப்பதை அறிந்த அந்த நபர் மீண்டும் மாலை நேரத்தில் வந்துள்ளார்.அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைந்திருந்த சைக்கிளை லாவகமாக திருடி சென்றார். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதே போன்று அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்த மின் கேபிள்கள் மற்றும் எல்இடி விளக்கு போன்றவை கடந்த மாதம் திருடு போனது.மேலும் முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் இதே போன்று பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். கடந்த வாரம் ஆதிகுடிக்காடு மற்றும் நந்தையன்குடிக்காடு கிராமங்களில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.பகலில் பெண்கள் மட் டுமே தனியாக இருப்பதை அறிந்து இதுபோன்ற பகு–திகளை நோட்டமிட்டு அந்த மர்ம நபர் மற்ற இடங்க–ளிலும் கைவரிசை காட்டி உள்ளாரா என்பது குறித்து செந்துறை போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெறும் நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணி–கரமான திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.

    • இளைஞர்கள் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு
    • மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல்மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசு பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞரகளுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்காலியிடங்களுக்கான, தேர்வில் கலந்து கொள்வதற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று(4ம்தேதி) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் பயோடேடடா எடுத்து வரவேண்டும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
    • முக்கிய கடைவீதிகளில் பேரணி நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூரில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேரணி நடைபெற்றது. காமராஜர் திடலில் இருந்து, மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் தொடங்கிய இந்த பேரணியானது, முக்கிய கடைவிதி வழியாக அண்ணா சிலை அருகில் முடிவடைந்தது. பேரணி கோரிக்கைகள் குறித்து கலந்து கொண்டவர்கள் கூறும்போது, உறுப்பின ர்கள் கொடுத்த கட ன்கள் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளநடவ டிக்கைகளை முழுமை யாக விலக்கிக் கொள்ள ப்படவேண்டும்கடன் தள்ளுபடி அனுமதி க்கப்பட்ட பயிர்கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன்கள் அனைத்துக்கும் உரிய தெகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டு நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். தவணை தவறிய நகைக்கடன்கள் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தில் ஏற்பட்டுள்ள இழப்புத் தொகைக்கு சங்கச்செய லாளர்கள் மற்றும்ப ணியா ளர்கள் பொறு ப்பாக்கப்பட்டு, ஓய்வு கால நிதி பயனை நிறுத்தி வைக்கும் தவறான நடவடிக்கையை உடனடியாக கைவிடப்பட்டு, இழப்புத் தொகையை நட்ட கணக்குக்கு எடுத்துச் செல்ல நிபந்தனையற்ற தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 31.12.2021 முடிவடைந்து விட்ட நிலையில், 01.01.2022 முதல் புதிய ஊதியம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளம் மாநிலத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல், அதே போன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துனர். மாவட்ட செயலாளர் தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

    • அரியலூரில் மாவட்ட மதிமுக நிர்வாகி தேர்தலுக்கு விண்ணப்பம் விநியோகம் நடைபெற்றது
    • எம்எல்ஏ சின்னப்பா விநியோகிகத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் அவைத் தலைவர், மாவட்டச் செயலர், துணைச் செயலர், பொருளாளர், ஒன்றியச் செயலர், துணைச் செயலர் உள்பட அனைத்து கிளை பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று மதிமுக தலைமை அலுவலகம் அறிவித்தது. அதன்படி, இதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி அரியலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கு.சின்னப்பா தலைமை வகித்து, ஜனநாயக முறையில் நடைபெறும் இந்த தேர்தலில், மாவட்ட செயலர் உள்பட அனைத்து பதவிக்கும் போட்டியிட கட்சியினர் அனைவருக்கும் தகுதியுண்டு. இனிவரும் காலங்களில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை என்றார். தொடர்ந்து அக்கட்சியின் மாநில மாணவரணி அமைப்பாளர் சசிகுமார், போட்டியிடும் நிர்வாகிகளுக்கு வேட்புமனு படிவத்தை வழங்கினார். போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக தலா ரூ.25 செலுத்தி படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் வாரணவாசி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் அடிப்படை திட்டங்களை நிலை குறித்து விரிவாக ஆய்வு
    • நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது

    அரியலூர்

    அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் டாக்டர் தரேஸ் அகமது தலைமை தாங்கினார். பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தரேஸ் அகமது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை கட்டமைப்புகள், 14, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் அடிப்படை திட்டங்களை நிரைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை, நிலுவைக்கான காரணம் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் தரேஷ் அகமது ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் மருதையாற்றின் குறுக்கே ரூ.613.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலத்தையும், திம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினையும், கொளத்தூர் பகுதியில் அருணகிரிமங்கலம் முதல் கொளத்தூர் வரை உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.126.28 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளையும், காரை கிராமத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.5.80 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட குளத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.342.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடத்தினையும், நாரணமங்கலம் கிராமத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து நர்சரி அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள் லலிதா (பெரம்பலூர்), ஈஸ்வரன் (அரியலூர்), ஊரக வளர்ச்சி துறை பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பணி முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது பரிதாபம்
    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்

    உடையார்பாளையம்,

    திருச்சி பொன்மலை ெரயில்வே குடியிருப்பை சேர்ந்த முருகன்(வயது39). இவர் திருச்சி பொன்மலை ெரயில்வேயில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முருகன் பணியை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து மாமனார் வீட்டுக்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் நோக்கி அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றார். உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமம் அருகே சிதம்பரம் சாலையில் வரும் போது நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க சாலையின் இடது புறம் திரும்பிய போது ஓரத்தில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விடுப்பில் இருந்து வந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் அரியலூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த தொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 37). இவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுப்பில் இருந்த இவர், தொட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடைக்கல அன்னை ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது
    • ஓசன்னா கீதங்கள் பாடியபடி கைகளில் குருத்தோலை ஏந்தி பவனி நடைபெற்றது

    திருமானூர்,

    இயசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிர்நீத்த தினம் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பாஸ்கா விழாவில் பங்கேற்க பெத்தலஹோம் நகரில் நுழைந்த இயேசுவை, யூதர்களின் ராஜாவாக அறிவித்து, அவரை மக்கள் கைகளில் ஆலிவ் இலை ஏந்தி வரவேற்றனர். இந்நாளை நினைவு கூரும் வகையில் குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.அதன்படி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காவலூர் என்று அழைக்கப்பட்ட ஏலாக்கு றிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள தேவாலயங்களில் தவக்காலமான கடைசி ஞாயிறு குருத்தோலை பவணி ஊர்வலம் நடைபெற்றது.அப்போது குருத்தோலைகளை கைகளில ஏந்தியவாறு ஓசானா பாடல் பாடிவாறு கிறிஸ்தவர்கள் சென்றனர். ஏலாக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்தில் ஒரு குருத்தோலைகள் மந்திரிக்கப்பட்ட ஜெபம் செய்து ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தனர். இந்த நாளை ஒட்டி திருமானூர் மற்றும் ஏலாக்குறிச்சி ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குதந்தை அதிபர் தங்கசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தினர் கலந்துகொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகளைப் பாடி பவனியாக வீதி உலா வந்தனர்தவக்காலத்தின் முக்கிய நாட்களான பெரிய வியாழன் வரும் 6-ந் தேதியும், புனித வெள்ளி வரும் 7-ந் தேதியும் கடைப்பிடி பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

    • அரியலூரில் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழ் படைப்பாளிகள் விழா
    • பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

    அரியலூர், அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு, பல்துறை நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சிவபாண்டியன் தலைமை தாங்கினார்.விழாவில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கலந்துகொண்டு பேசியதாவது:-மனிதனுக்கு மனிதன் கூறிய ஒரே நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். திருக்குறள் பெரும்பாலான இந்திய மொழிகளிலும் 170-க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் நூலுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு. திருக்குறள் நூலானது உலக மக்களுக்காக இயற்றப்பட்டது.

    அதனால் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களையும் படித்து அதனுடைய கருத்தை தெரிந்துக்கொண்டு வாழ்வை சிறப்பாக பயணியுங்கள். மேலும் தமிழர்கள் ஒவ்வொருவர் இல்லங்களிலும் தமிழ் வழியில் குடும்ப நிகழ்வுகளை நடத்த வேண்டும். பட்டி, தொட்டி எல்லாம் திருக்குறளின் புகழை தமிழர்கள் பரப்ப வேண்டும் என்றார்.சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா பேசுகையில், திருக்குறளை ஒவ்வொரு குடும்பத்தினரும் பின்பற்றி நடக்க வேண்டும் . திருக்குறளில் சொல்லப்படாத அறநெறிகள் இல்லை. திருக்குறளை ஒருவன் தெளிவாக கற்றால் வாழ்நாளில் எத்தகைய துன்பமும் நேராது. பள்ளி குழந்தைகள் திருக்குறளை விரும்பி கற்று அதன் பொருள் உணர்ந்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.விழாவில் மாநில பொதுச் செயலர் ஆதிலிங்கம், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பிச்சி ஆதிலிங்கம், மண்டல தலைவர்கள் சின்னதுரை, இளங்கோ, சந்திரன், செவ்வேல், சுப்பிரமணியன், செல்ல பாண்டியன், இளவரசன், ஷோபனா மற்றும் காவல் ஆய்வாளர்கள் அனிதாமேரி, செல்வகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும், பல்துறை நிபுணர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தர்ராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்டச் செயலர் நாகமுத்து நன்றி கூறினார்.

    • கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார்
    • அரசு அலுவலர்களுடன் ஆேலாசனையும் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கு கனரக வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-கல்லங்குறிச்சி சாலை, அரியலூர்-செந்துறை சாலை ஆகிய சாலைகளில் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைப்பதற்காக, சிமெண்டு காரிடர் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரியலூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் அறிவித்தார்.இதைத்தொடர்ந்து 3 சாலைகளை இணைக்கும் விதமாக அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் இருந்து கயர்லாபாத், கல்லங்குறிச்சி, அமீனாபாத், அரியலூர் வடக்கு வழியாக சிமெண்டு நிறுவனங்களில் இருந்து செல்லும் கனரக வாகனங்களுக்கு தனி மாற்று பாதை அமைப்பது தொடர்பாக கலெக்டர் ரமணசரஸ்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதையில் முக்கிய சாலைகளின் இணைப்புகளில் ரவுண்டானா அமைப்பது குறித்தும், தேவையான இடங்களில் இடம் கையகப்படுத்துவது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.

    ×