என் மலர்
அரியலூர்
- திருமானூரில் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
- அரியலூர் தொகுதி மேற்பார்வையாளர் கவிஞர் சல்மா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
உடையாளர்பாளையம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் தி.மு.க. செயல் வீர கூட்டங்கள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அரியலூர் தொகுதி மேற்பார்வையாளர் கவிஞர் சல்மா, திருமானூரில் பஸ் நிலையத்தில் புதிய உறுப்பினர் ஒருவருக்கு உறுப்பினர் படிவம் கொடுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் கென்னடி, மாவட்ட அவை தலைவர் மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர், பொதுகுழு உறுப்பினர் பாலு, கிழக்கு மாவட்ட கவுன்சிலர் கீதா, மாவட்ட பிரதிநிதி முத்தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து மேற்குஒன்றிய சார்பாக கீழப்பழுவூர் தனியார் மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் அசோக சக்கரவர்த்தி தலைமையிலும் ஒன்றிய துணைச் செயலாளர் ரவி வரவேற்பு உரையாற்ற நகர செயலாளர் ரவி நன்றி கூறினார்.
- இ-சேவை மையம் மூலம் ஆதரவற்ற விதவை சான்றுகள் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்
- தற்போது செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஆதரவற்ற சான்றுகள் இணையவழி மூலம் வழங்கப்பட்டு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டங்களில் ஆதரவற்ற விதவை சான்று வழங்கிட கோரி நேரடியாக பொதுமக்களால் அளிக்கப்படும் மனுக்களை விசாரணை செய்து வருவாய் கோட்டாட்சியர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஆதரவற்ற சான்றுகள் இணையவழி மூலம் வழங்கப்பட்டு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அத்திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி இணையவழி மூலம் மட்டுமே ஆதரவற்ற சான்றுகள் வழங்கப்பட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இனிவரும் காலங்களில் ஆதரவற்ற விதவை சான்று வழங்கிட பொது சேவை மையம் மற்றும் இ.சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து ஆதரவற்ற சான்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் பேரவை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் கீழப்பழுர் தனியார் மண்டபத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் அமைப்பு நிலை பேரவை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை 6ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், தொழிலாளர்களின் மருத்துவ சலவை வாரியமே ஏற்க வேண்டும், மேலும் திருமானூர் பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் பாதியிலேயே நிறைவடைந்து திருமானூர் காந்திநகர் வரை செல்வதற்கு கழிவு நீர் வாய்க்கால் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- செல்போனில் பேசிக்கொண்டே சென்ற சத்தியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
- கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக உறவினர்கள் புகார்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆலவாய் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி சத்தியா (வயது 28). இந்த தம்பதிக்கு வேதா (9) என்ற மகளும், சாரதி (3) என்ற மகனும் உள்ளனர். கொளஞ்சி கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சத்தியா தனது குழந்தைகளுடன் ஆலவாய் கிராமத்தில் வசித்து வந்தார்.இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்தியாவுக்கு தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவர் கோவையில் வேலை பார்த்து வரும் நிலையில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அவரது உறவினர்கள் பலமுறை கண்டித்தும் சத்தியா திருந்தவில்லை.
இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்தியா தனது குழந்தைகளை தவிக்கவிட்டு திருப்பூருக்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து செந்துறை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சத்தியாவின் தாய்மாமா பெரியசாமியின் மனைவி சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். தன்னுடன் தங்க வைத்து தகுந்த அறிவுரைகள் கூறி அதே பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலையும் வாங்கி கொடுத்தார்.இதனை அறிந்த கள்ளக்காதலன் அவ்வப்போது சத்தியாவை தனிமையில் சந்தித்து வந்தார். அப்போது அவருக்கும், கள்ளக்காதலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிள்ளைகள் தாயுடன் வசித்தால் அவர்களுடைய வாழ்க்கை பாழாகி விடும் என்று கருதி, சத்தியாவின் கணவர் கொளஞ்சி தனது மகனை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார். மகள் மட்டும் ஆலவாய் கிராமத்தில் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இந்த நிலையில் சத்தியாவுக்கு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய கள்ளக்காதலன் அவரை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து செல்போனில் பேசிக்கொண்டே சென்ற சத்தியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இன்று காலை செந்துறையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேக்கு மரத்தோப்பில் ஒரு மரத்தில் சேலையில் சத்தியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது அங்கு திரண்ட உறவினர்கள் சத்தியாவின் கள்ளக்காதலன் தான் இரவில் தனியாக வரச்சொல்லி அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என்று பரபரப்பு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியா
- வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு திரும்பிய கணவர் அதிர்ச்சி
- புகாரின் பேரில் தேடி வரும் போலீசார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமம் அரிச்சனத் தெருவை சேர்ந்தவர் வீரமணி.வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.தற்பொழுது விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி ராணி (வயது40). வீட்டில் இருந்த இவர் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி அக்கம் பக்கத்தில், உறவினர்கள், தோழிகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராணியை தேடி விசாரித்து வருகின்றனர்.
- பொது மக்கள் சாலை மறியல்
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
அரியலூர்,
அரியலூர் அருகேயுள்ள அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது65). கூலித்தொழிலாளியான இவர், காலை வீட்டின் அருகேயுள்ள அரியலூர் - செந்துறை சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு தனியார் சிமென்ட் ஆலைக்குச் சென்ற மினி லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் உயிரிழந்தார்.தகவலறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மினிலாரி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தை அறிந்த அரியலூர் காவல் துறையினர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மணக்கோலத்தில் நூலகம் வந்தனர்
- 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழன்குறிச்சி கிராமத்தில் நேற்று திருமணம் செய்துகொண்ட மணமக்கள் திருநாவுக்கரசு-பவளக்கொடி தம்பதியினர் மணக் கோலத்தில் நூலகத்திற்கு சென்றனர். அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை த.சோழன்குறிச்சி நூலகத்திற்கு வழங்கினர்.
- கீழப்பலூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- பொதுமக்களுக்கு பழங்கள் விநியோகம்
திருமானூர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.இந் நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பளிகாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அக்பர் ஷரீஃப், தனசெல்வி சக்திவேல், தனலட்சுமி மருதமுத்து, கமலக்கண்ணன், மலர்விழி நல்லதம்பி, சேட் ராஜேந்திரன், தவமணி, செந்தில்குமார், மலர்விழி நல்ல தம்பி, பாவேந்தன், இளையராஜா, மணிவேல், சித்ரா உதயகுமார், அய்யாக்கண்ணு, இலந்தை தேவர், தில்லை திருவாசகம் மணி, சரவணன், முருகேசன், சௌந்தர், சபரிநாதன், மாரியப்பன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொடர்கள் கலந்து கொண்டனர்.
- திருமானூர் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
- சமூக ஆர்வலர் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டத்தல் வலியுறுத்தல்
திருமானூர்,
திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் சமூக ஆர்வலர் வரதராஜன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கரை சாலையை உடனே சரி செய்ய வேண்டும். திருமானூர் பகுதி கழிவு நீர்கள் நேரடியாக கொள்ளிட ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஞாயிறு தோறும் பொதுமக்களுக்கு இடையூறாக ஞாயிற்றுக் கிழமைகளில் திருமானூர் சாலையில் செயல்படும் மீன் கடைகளை அகற்ற வேண்டும். திருமானூர் கொள்ளிடம் படித்துறைகள் சரி செய்ய வேண்டும். கொள்ளிடம் கரை பகுதிகள் அரிப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்திருமானூர் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள பஸ் நிலையங்களில் நிழல் குடைகள் அமைக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சியின் நிறைவில் தங்க ஜெயபாலன் நன்றி உரை கூறினார். கூட்டத்தில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாளை திருநாவுக்கரசு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- கத்தியைகாட்டி மிரட்டி வழிபறி
- புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்
உடையாளர் பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் மகன் ராமதாஸ். இவர் சம்பவத்தன்று தா பழூர் திரௌபதி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்மநபர் ஒருவர் ராமதாசிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயத்தில் ராமதாஸ் சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக ராமதாஸ் தா பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் கணக்கு கேட்டபோது தகராறு
- அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது65). இவர் அப்பகுதியில் நாட்டார் ஆக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கோவில்கள் அருகில் மகாலிங்கம் பணி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் பூமிநாதன், கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல் ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு, அருகில் இருந்த கருங்கல்லால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயம் அடைந்த மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இச்சம்பவம் குறித்து மகாலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது
- பால்,வேலை காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வாணதிரய ன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான இடையார், பிலிச்சிகுழி, ஒக்கநத்தம், பருக்கல், உடையார்பாளையம், சில கால், பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பலவகையான காவடிகள்எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக முருகன் வள்ளி தெய்வானைக்கு திரவியப்பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் ஆன சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. காவடி திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்திடவும் வானதிராயன்பட்டிணம் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர். விழாவி ற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் விழா கமிட்டியினர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.






