என் மலர்
அரியலூர்
- விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யபட்டது
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கொள்ளிடம் ஆற்றப்படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்ரீபுரந்தான் அரசு தொடக்கப்பள்ளி அருகே மாட்டு வண்டியை ஓட்டி சென்றவர் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் அந்த மாட்டு வண்டியை போலீசார் சோதனை செய்தபோது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
- அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த பசுபதி மற்றும் ரேவதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (வயது 45). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அண்ணாதுரை மகன் ஆனந்த் (22) என்பவர் மதுபோதையில் ரேவதி வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேவதியின் உறவினரும், தொழிலாளியுமான பசுபதி (42) ஆனந்த்திடம் விசாரித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பசுபதியின் கையில் வெட்டியுள்ளார்.
மேலும் இதனை தடுக்க வந்த ரேவதியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவரது தலையில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் ஆனந்த் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த பசுபதி மற்றும் ரேவதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஆனந்த்தை கைது செய்தார். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
- அரியலூரில் தூய்மைக்கான மக்கள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது
- பேரணியானது, பிரதான கடைவீதி மற்றும் தெரு வழியாகச் சென்று, நகாட்சி அலுவலகத்தில் நிறைவ டைந்தது.
அரியலூர்:
அரியலூரில், தூய்மைத் திருவிழா மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், தூய்மைப் பணியாளர்களின் விழிப்புணர்வுப் பேரணி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பேரணியானது, பிரதான கடைவீதி மற்றும் தெரு வழியாகச் சென்று, நகாட்சி அலுவலகத்தில் நிறைவ டைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்கள், குப்பைகளை பொது வெளியில் கொட்டி உங்களது தெருக்களையும் நகரத்தையும் அசுத்தமாக்க வேண்டாம், நெகிழிப் பொருள்களை சாலையில் போடுவதால் ஏற்படும் பிரச்னைகள், தூய்மையான இடம் இறைவன் குடியிருக்கும் இடமாகும் என்று வலியுறுத்தி விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் தமயந்தி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டினர்
- திருப்பலியை ஆலய பங்கு தந்தை அதிபர் தங்கசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார்.
திருமானூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருக்காவூர் என்னும் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப் பட்ட சுற்றுலா தலங்க–ளில் ஒன்றான அடைக்கிற அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையான இன்று ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா அதிகாலை 12 மணிக்கு நடைபெற்றது.இயேசு கிறிஸ்து சுமார் கி.பி. 33 ஆம் ஆண்டு சிலு–வையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவிலிருந்து உயிர்த்ததை குறிக்கும் வித–மாக கிறிஸ்தவர்கள் கொண் டாடும் இந்த நாள் 40 நாள் தவக்காலத்தில் முடிவில் நடைபெறுகிறது.
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு திருப்பலியை ஆலய பங்கு தந்தை அதிபர் தங்கசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். திரளான கிறிஸ் தவர்கள் மற்றும் மாற்று மதத்தினர் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாளில் வணங்கி அருள் பெற்று சென்றனர். நிகழ்ச்சியை உதவி பங்கு தந்தை ஞான அருள் தாஸ் நன்றி கூறினார் .
- நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து விலக்கு: அரியலூர் மாவட்ட விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- பொதுமக்கள் உற்சா–கமாக கோஷம் எழுப்பி அரசுக்கு நன்றி தெரி–வித்தனர்.
உடையார்பாளையம்
காவிரி டெல்டா மாவட் டங்களில் உள்ள சேத்தி–யாத்தோப்பு, மைக்கேல் பட்டி, வடசேரியில் தனி–யார் மூலம் நிலக்கரி சுரங் கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண் டும் என்று பிரதமர் நரேந் திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அரிய–லூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி திட்ட பகுதியான பருக்கள் கிரா–மத்தில் விவ–சாயிகள் மற்றும் பொது–மக்கள் இத்திட்டத் திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த–னர்.இந்தநிலையில் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய சுரங் கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறி–வித்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பருக்கள் கிராமத்தில் அதனை வரவேற்ற மக்கள் மகிழ்ச்சியாக கொண்டா–டினர்.
மேலும் கிராமத்தின் முக்கிய பகுதியில் ஒன்று கூடிய மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங் கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்ப–டுத்தினர். உற்சா–கமாக கோஷம் எழுப்பி அரசுக்கு நன்றி தெரி–வித்தனர்.இதுகுறித்து விவசாயி புகழேந்தி கூறு–கையில், பருக்கள் கிராமம் முற்றும் முதலுமாக நிலக் கடலை முந்திரி உள்ளிட்ட விவ–சாயிகளை நம்பி பிழைக்கும் கிராமம்.இங்குள்ள மக்களுக்கு விவசா–யத்தை தவிர வேறு எது–வுமே தெரியாது. திடீரென நிலக்கரி சுரங்க ஏழு அறிவிப்பு வெளியா–னதும் மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.
தற்போது மத்திய அமைச்சர் நிலக்கரி ஏல நடைமுறையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு விளக்கு அளித்து அறிவித் திருப்பது எங்கள் பகுதி விவசாயிகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது என்றார். விவசாயி சோமசுந்தரம் கூறுகையில், எங்கள் கிரா–மத்தில் நிலக்கரி திட்டத் திற்கு சுரங்கம் அமைக்க இருப்பதாக தகவல் பரவி–யதை அடுத்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கடந்த மூன்று நாட்களாக நிம்மதி இன்றி என்ன செய்வது என்று எங்கள் கிராமம் மக்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். எங்களுக்கு இந்த கிராமத்தை விட்டு வேறு எங்கு சென்று தங்கு–வதற்கான வாய்ப்பு ஏற்பட்டா–லும் அது நிம்ம–தியை கொடுக்காது. இப் போது அரசு நிலக்கரி திட்ட ஏலத்தை தமிழகத் தில் விளக்கு அளித்து அறிவித்திருப்பது நிச்சயமாக எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார்.
- வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் வசித்து வருபவர் வீரமணி மகன் கவியரசன்(வயது 26). சரக்கு வேன் டிரைவரான இவர் நேற்று வீட்டிற்கு அருகே உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராகுல் எம்.பி.பதவி நீக்கம் கண்டித்து திருமானூரில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார்
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் கண்டித்துதிருமா னூர் பஸ்நிலைம்அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் அ.சங்கர்தலை மை வகித்தார்வட்டார தலைவர்கள் கிழக்கு கங்கா துரை, மேற்கு திருநாவுகரசு, நகரத்தலைவர் வினோத், ராஜசேகர், மாநில பொதுகுழு உறுப்பினர் அரியலூர் தெற்கு வட்டார தலைவர் பாலு, மாவட்ட பொதுச்செயலாளர் சீமான், முன்னாள் மாநில பொதுகுழு உறுப்பினர் சந்தானம்,
சுரேஸ், எஸ்சி.எஸ்டி மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சண்முகம், அமைப்பு சார தொழிலாளர் பிரிவு தலைவர் பாண்டியராஜன், நகர செயலாளர் பாரதி, ஊடகத்துறை மணிபாரதி, முன்னால் மாவட்ட செயலாளர் சங்கர்வேல், பிச்சைபிள்ளை, நாகராஜன்,இராஜீவ் காந்தி, விஜயன், பழனிசாமி, பாலு, தமிழ்வாணன், ரெங்கநாதன், கோவிந்த ராசு, தங்கராசு, ராமசந்திரன், பூமி.சரவணன், பிரம்ம தேவன், பாண்டி யன், நல்லதம்பி,குமணன், முன்னால் ஊடகத்துறை மாவட்ட தலைவர் நிக்கோலஸ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கொண்டனர்.
- ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பெரிய வெள்ளி வழிபாடு நடைபெற்றது
- பங்கு தந்தை அதிபர் தங்கசாமி, உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.
திருமானூர்:
அரியலூர்மாவட்டம் திருமானூர், திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளி வழிபாடு நடைபெற்றது.இயேசு உயிர்விட்ட துக்கநாளான பெரியவெள்ளியான நேற்று மாலை ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அதிபர் தங்கசாமி, உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். அப்போடு, திருச்சிலுவை மரம் இதுவே. இதிலேதான் தொங்கியது. உலகத்தின் ரட்சண்யம் என்று பாடியபடி பாடுபட்ட இயேசுவின் சொரூபத்தை பொதுமக்கள் பார்வைக்கு காட்டினர். இதனை தொடர்ந்து பாடுபட்ட சொரூபத்திற்கு வணக்கம் செலுத்தி இயேசுவின் பாதத்தில் கிறிஸ்தவர்கள் முத்தமிட்டனர். அதன் பின்னர் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பெரிய வெள்ளி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்
- நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் முக்கிய வீதி உள்ளிட்ட இடங்களில் தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையாக முன்னதாக வாரியங்காவல் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு விட்டது. இரண்டாம் கட்டமாக நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.மேலும் அவர் பேசுகையில் தொடர்ந்து குற்ற செயல் நடைபெற்று வருவதாகவும் அதை தடுத்து நிறுத்த அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த பட வேண்டும்.
அப்படி பொருத்தினால் தான் குற்றங்களை நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தி வருவதாக அவர் பேசினார்.முன்னதாக உடையார்பாளையம் ஆய்வாளர் வேலுச்சாமி வரவேற்று பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, நாகல் குழி நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் வீரமணி, செயலாளர் கார்த்திக், பொருளாளர் சின்னமணி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அரியலூர் மாவட்ட கோவில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது
- திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்டத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 186 திருக்கோவில்களில் பணிபுரியும் 186 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுடன் திருக்கோவில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஓய்வூபெற்ற இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் 24 நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், திருக்கோவில் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 42 திருக்கோவில்களில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும், திருக்கோவில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதே போன்று திருக்கோவில் பணியாளர்களுக்கு 2 சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவில்களில் பணிபுரியும் 26 ஆண் பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பணியாளர் என மொத்தம் 27 பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இத்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஏழை, எளிய இணைகளுக்கு இலவச திருமண திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருமணம் நடைபெற்ற 3 இணைகளுக்கும் திருமண நாளன்று ஒவ்வொருவருக்கும் தலா திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டு நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்சி, பூஜைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.இதில் ஒவ்வொரு இணைகளுக்கும் தலா ரூ.50,000 மதிப்பில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆண்டிமடம் ஊராட்சியில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஸ்ரீதேவி வரவேற்று பேசினார். ஒன்றிய அலுவலக கணக்கர் பாக்யராஜ் தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். அதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து உறுப்பினர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) நாராயணசாமி நன்றி தெரிவித்து பேசினார்.
- ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பார்த்திபன் தலைமையில் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடையார்பாளையம்,
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து அரியலூர் நீதிமன்றம் அருகில் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பார்த்திபன் தலைமையில் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மனோகர், கஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் லட்சுமிபதி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் பாலசிவ ஜெயபால், ரமேஷ் குமார், செல்வமணி, கபில்தேவன், பவுன்ராஜ், மணிமாறன், ஆண்டனி தாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்






