search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி
    X

    ஜெயங்கொண்டம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி

    • ஜெயங்கொண்டம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    • நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் முக்கிய வீதி உள்ளிட்ட இடங்களில் தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையாக முன்னதாக வாரியங்காவல் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு விட்டது. இரண்டாம் கட்டமாக நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.மேலும் அவர் பேசுகையில் தொடர்ந்து குற்ற செயல் நடைபெற்று வருவதாகவும் அதை தடுத்து நிறுத்த அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த பட வேண்டும்.

    அப்படி பொருத்தினால் தான் குற்றங்களை நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தி வருவதாக அவர் பேசினார்.முன்னதாக உடையார்பாளையம் ஆய்வாளர் வேலுச்சாமி வரவேற்று பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, நாகல் குழி நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் வீரமணி, செயலாளர் கார்த்திக், பொருளாளர் சின்னமணி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×