என் மலர்tooltip icon

    அரியலூர்

    • 60 எம்எல்ஏக்களை பெற்றிட வேண்டும்
    • பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தனியார் மண்டபத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் தமிழைக் காக்க வேண்டிய அனைத்து பகுதிகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், கட்சியில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக கிளை அமைக்க வேண்டும் 2024 இல் 10 எம் பிக் களும், 2026 இல் சட்டமன்ற தேர்தலில் 60 எம்எல்ஏக்கள் கொண்டுவர வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதற்கு அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைப்பு சிறப்பாக கட்சியை வளர்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது இதில் மாற்று கட்சிகளில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் டி எம் டி திருமாவளவன் பேசும்போது குழுமூர் அனிதா மணிரத்தினம் என்பவர் பாமக நிறுவனர் மற்றும் தலைவரைப் பற்றி அவதூராக பதிவு செய்துள்ளார் அதற்கு எவ்வளவு பேர் கொதித்தெழுந்தீர்கள் அதற்கு என்ன மாதிரியான போராட்டங்கள் நடத்தினார்கள் என தெரியவில்லை அதேபோல் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயரை சூட்டியுள்ளார்கள் அதனை கண்டித்து ஒரு நோட்டீசோ அல்லது போராட்டமோ நடத்தி இருந்தால் இந்த மாதிரியான பதிவுகள் தற்போது வந்திருக்காது ஐயாவையும் சின்னையாவையும் பத்தி பேச மணிரத்தினத்திற்கு என்ன தகுதி இருக்கிறது அவரை ஓட ஓட விரட்டி வெட்ட வேண்டாமா. இவ்வாறு செய்திருந்தால் இந்த மாவட்டத்தில் அவன் நடமாட முடியுமா வன்னியர்களின் உணர்வுகள் அனைத்தும் செத்துப் போச்சா ஜாதிங்கிற உணர்வும் செத்துப்போச்சா எனவே அனைவரும் இனிமேலாவது விழிப்பா இருங்கள் என பேசினார்

    ---

    • எப்படி வந்தது என்று பொதுமக்கள் கேள்வி
    • போலியாக அச்சிடப்பட்டவையா என்று அதிர்ச்சி

    ஜெயங்கொண்டம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில் டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் அரசு பேருந்து கிழித்து வழங்கப்படும் பயண சீட்டு ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சேலம் மற்றும் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. 220 ரூபாய் பயண சீட்டிலிருந்து ஒரு ரூபாய் பயண சீட்டு வரை 300-க்கும் மேற்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் எவ்வாறு கிடைக்கிறது என்பது மர்மமாக உள்ளது போக்குவரத்து கழகத்திலிருந்து டிக்கெட்டுகளை நடத்துனர்களுக்கு வழங்கும் போது டிக்கெட்டின் எண்கள் உள்ளிட்டவற்றை குறித்துக் கொண்டே நடத்துனருக்கு வழங்கப்படுகிறது மேலும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் கணக்கை ஒப்படைக்கும் போது டிக்கெட்டுகளின் எண்களின் அடிப்படையில் கணக்கை ஒப்படைக்க வேண்டும் எனவே அரசின் சார்பில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள் பேருந்துகளில் வழங்குவதற்காக போலியாக டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு இவ்வாறு சிதறி கிடக்கின்றனவா என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது அப்பகுதி மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புதியபேருந்து நிலையம் கட்ட ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு
    • தற்காலிக பேருந்து நிலையம் குறித்த அறிவிப்பு இல்லை

    அரியலூர், 

    தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்று. இருப்பினும் தமிழக அரசுக்கு கனிம வளங்களின் மூலமாகவும், விவசாய விளைபொருட்கள் மூலமாகவும் வருமானத்தை அள்ளித்தருகின்ற மாவட்டமாக திகழ்கிறது. சுண்ணாம்பு கற்களை கொண்ட பூமியான அரியலூரில் பிரபல சிமெண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட அரியலூர் மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அரியலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஆயிரம் மக்கள்தொகையை கொண்ட இந்த அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    அதன் பிறகு 2 முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு 47 ஆண்டுகள் ஆனதால் கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்தன. பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கியது. இந்த பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்து தருமாறு நகராட்சி நிர்வாகம் பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், நேரில் வந்து கூறியும் யாரும் கடைகளை காலி செய்யவில்லை. இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின. இடிந்துவிடும் நிலையில் உள்ள சமுதாய கூடத்தை பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடிக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து கட்டுமான பணிகளுக்காக இரும்பு கம்பிகள், சிமெண்டு மூட்டைகள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.ஆனால் தற்காலிக பஸ் நிலையம் எந்த இடத்தில் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், மாணவ-மாணவிகள் தாங்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் எங்கிருந்து செல்வது, பஸ்கள் எங்கு நிற்கும் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். மேலும் பஸ் நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் மீண்டும் இதே பஸ் நிலையத்திற்கே பஸ்கள் வந்து சென்றால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைவில் தற்காலிக பஸ் நிலையம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், புதிய பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • வான் நோக்கும் நிகழ்வினை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்களுக்கு பாராட்டு

    அரியலூர்,

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் வான் நோக்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர்ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களால் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் வானில் அற்புதங்களைக் காணும் வான்நோக்கும் நிகழ்வு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஓபன் ஸ்பேஷ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தொலைநோக்கி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வானின் அற்புதங்களைக் காணும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பினை இப்பள்ளிக் குழந்தைகள் பெற்றுள்ளனர். தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே இதுகுறித்து அறிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் வருங்காலங்களில் மேதகு டாக்டர்.அப்துல் கலாம் அவர்களை போல விஞ்ஞானிகளாக உருவாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர் கூறினார்.

    • பொதுமக்களிடம் இருந்து 275 மனுக்கள் பெறப்பட்டன
    • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 275 கோரிக்கை மனு வரப்பெற்றன.கூட்டத்துக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் எஸ்.முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • திருமானூர் பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது
    • மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் தண்ணீர் பந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், ஒன்றிய குழு துணை உறுப்பினர் அம்பிகா ராஜேந்திரன், அவைத்தலைவர் அன்பழகன், மகாலட்சுமி கருணாநிதி, கோவிலூர் சரவணன், ராஜேஸ்வரி ஜம்புலிங்கம், ரவி, சதாசிவம், டி.வி.கார்த்திக், ஜே கே கார்த்திக், குருவாடி முருகேசன், அரசு ராஜேந்திரன், சபரிநாதன், சௌந்தர், முரளிதரன், டி.எம்.ராஜா, அயோத்தி, அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் வாட்டர் ஹீட்டர் பொருத்த கோரிக்கை
    • கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. அப்போது சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான செ.சுகுமார், மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, விடுதிக்கு வந்து சுடுநீரில் குளிப்பது அல்லது கைகால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது வழக்கம். இதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.இதில், அரியலூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மட்டும் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்கள் விடுதியில் பொருத்தப்படவில்லை. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும், அக்கல்லூரி முதன்மையர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவியர்கள் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவ மனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு கிசிச்சை அளிப்பதில்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    உடையார்பாளையம்,

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா சிறுவஞ்சிப்பட்டு மேட்டுத்தெருவில் வசித்து வரும் ரமாமணி - சேட்டு தம்பதியின் மகள் சுரேகா(வயது 21). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ேபஸ் புக் மூலம் பழக்கமான பொன்பரப்பி, கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரை காதலித்து திருமணம் செய்து ெகாண்டார். இவர்களுக்கு தன்சிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரமாமணி கூறுகையில், மருமகனும்,மகளும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மகளுக்கு பதினோரு பவுன் நகை செய்துள்ளேன். கடந்த வாரம் மருமகன் அஜித் போன் மூலம் உங்கள் மகள் செய்வது சரியில்லை எனக் கூறினார். அதன் பிறகு எனது மகள் தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக எனது மூத்த மகள் சரண்யாவிற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர் என்று கூறினார். இது குறித்து அவர் செந்துறை காவல் நிலையத்தில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். 

    • மீன் பிடிக்க நீர் இறைத்தபோது வெளியே வந்தது
    • தீயணைப்பு வீரர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே உள்ள குருவாடி கிராமத்தில் குளத்தில் மீன் பிடிக்க நீர் இறைத்த போது முதலை சிக்கியது.உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மயக்க ஊசி செலுத்தி முதலையை பிடித்து கட்டப்பட்டுள்ளது.இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.கொள்ளிம் ஆற்றில் இருந்து குளத்திற்கு முதலை வந்திருக்கலாம் என அந்த பகுதி நம்புகிறார்கள். 

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • பால்குடம், அக்னிசட்டி, தொட்டில், அலகு குத்தி வந்தனர்

    திருமானூர்,

    திருமானூர் கொள்ளிடகரையின் வடபுறரம் அமைந்துள்ள மகாமாரியம்மன் 56 வது ஆண்டு பால்குட திருவிழா அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கறையின் வடபுறம் அமைந்துள்ள மகா மாரியம்மன் 56வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர் .இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகல் பால் குடம் அக்கினி சட்டி.தொட்டில். அலகு குத்தி. முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தகோடிகள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.மேலும் இரவு 7 மணி அளவில் மாவிளக்கு ஏற்றி தீபமஆராதனை கண்டு களித்தனர் அது சமயம் மங்கள இசை மற்றும் வாண வேடிக்கை நடைபெற்றது இரவு 11 மணி அளவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    • வியாபாரம் களைகட்டியது
    • கடைகளுக்கு முன்வைப்பு தொகை கிடையாது என அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையை 2000ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் உழவர் சந்தையை மூடிமறைத்தனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் பயன்பெறும் திட்டமான உழவர் சந்தையை மீண்டும் திறந்தனர்.கடைகளுக்கு முன்வைப்பு தொகை கிடையாது. வாடகை, மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் அனைத்தும் கிடையாது. தினசரி கொண்டு வரும் காய்கறிகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். தராசு படிகற்களும் வழங்கப்படுகின்றது.அரியலூர் வார சந்தை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனையாகும். வாரச்சந்தை கடைகள் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் வாரசந்தை ஞாயிற்றுகிழமை நடைபெறாமல் ஏலம் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.பம்பர் அடித்தது போல் யோகம், உழவர் சந்தை வியாபாரம் களைகட்டி வருகின்றது. தினசரி காய்கறிகள் கொண்டுவருவதால் சர்யான எடையில், சரியான விலையில் விற்பனை நடைபெறுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

    • கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது
    • நடமா–டும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி செயல்படுவதாக அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் நகரில் தமிழ் நாடு மாவட்ட விளை–யாட்டு மேம்பாட்டு ஆணை–யத்தின் மாவட்ட விளை–யாட்டு அரங்கம் செயல் பட்டு வருகிறது. இங்கு விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கலெக் டர் ரமணசரஸ்வதி அரிய–லூர் மாவட்ட விளையாட் டரங்கில் நடைபயிற்சி மேற்கொண்ட பொழுது மைதானத்தின் அருகில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று காலில் அடிபட்டு காயத்துடன் இருப்பதைக் பார்வையிட்டு உடனடியாக மாவட்ட விளையாட்டு அலு–வலரை தொடர்பு கொண் டார்.காயமடைந்த நாய்க்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க–வும், சம்பந்தப்பட்ட அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் கால்நடை பராம–ரிப்புத் துறையின் நடமாடும் கட்டணமில்லா கால்நடை சிகிச்சை ஊர்தியினை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்திற்கு வரவழைத்தார். பின்னர், நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் காயமடைந்த நாயை பிடித்து கால்நடை மருத்துவர் இளையராஜா சிகிச்சை அளித்தார்.

    அந்த நாய்க்கு மருந்து அளித்து கட்டு போடப் பட்டதுடன் தொடர் சிகிச் சைக்காக அரிய–லூர் கால் நடை மருத்துவம–னைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், அங்கு ஓரிரு நாட்கள் தொடர் சிகிச்சை அளித்து காயத்தை முழு–வதுமாக குணப்படுத்த தேவை–யான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமா–டும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி செயல்பட்டு வருகிறது.இந்த ஊர்தியினை 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் தொடர்பு கொண்டு கால் நடைகளுக்கு ஏற்படும் கன்று ஈனாமல் இருத்தல், விபத்து, கிணற்றுக்குள் விழுவதால் ஏற்படும் காயம் உள்ளிட்ட கால்நடைகளுக்கு எதிர்பாராத விதமாக ஏற் படும் பல்வேறு வித–மான காயங்களுக்கு கால்நடை வளர்ப்போரின் இல்லங்க–ளுக்கே நேரடியாக சென்று கால்நடை மருத்துவர் மூலம் எவ்வித கட்டணமில்லாமல் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    எனவே அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கால்நடை–களுக்கு ஏற்படும் எதிர்பாராத நோய்களிலிருந்து பாது–காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் கால்நடை பரா–மரிப்புத் துறையின் நடமா–டும் கால்நடை மருத் துவ சிகிச்சை ஊர்தி சேவை–யினை 1962 என்ற கட்டணமில்லா தொலை–பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.சாலை விபத்தில் அடி–பட்டு கிடந்தால் வேடிக்கை பார்க்கும் இக்கால கட் டத்தில் நாயின் காலில் அடிபட்டு வலியால் துடித்து கத்திக்கொண்டிருந்த நாய்க்கு உடனடியாக சிகிச் சையளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட கலெக்டரின் செயலை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்.

    ×