என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்
- 60 எம்எல்ஏக்களை பெற்றிட வேண்டும்
- பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தனியார் மண்டபத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் தமிழைக் காக்க வேண்டிய அனைத்து பகுதிகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், கட்சியில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக கிளை அமைக்க வேண்டும் 2024 இல் 10 எம் பிக் களும், 2026 இல் சட்டமன்ற தேர்தலில் 60 எம்எல்ஏக்கள் கொண்டுவர வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதற்கு அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைப்பு சிறப்பாக கட்சியை வளர்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது இதில் மாற்று கட்சிகளில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் டி எம் டி திருமாவளவன் பேசும்போது குழுமூர் அனிதா மணிரத்தினம் என்பவர் பாமக நிறுவனர் மற்றும் தலைவரைப் பற்றி அவதூராக பதிவு செய்துள்ளார் அதற்கு எவ்வளவு பேர் கொதித்தெழுந்தீர்கள் அதற்கு என்ன மாதிரியான போராட்டங்கள் நடத்தினார்கள் என தெரியவில்லை அதேபோல் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயரை சூட்டியுள்ளார்கள் அதனை கண்டித்து ஒரு நோட்டீசோ அல்லது போராட்டமோ நடத்தி இருந்தால் இந்த மாதிரியான பதிவுகள் தற்போது வந்திருக்காது ஐயாவையும் சின்னையாவையும் பத்தி பேச மணிரத்தினத்திற்கு என்ன தகுதி இருக்கிறது அவரை ஓட ஓட விரட்டி வெட்ட வேண்டாமா. இவ்வாறு செய்திருந்தால் இந்த மாவட்டத்தில் அவன் நடமாட முடியுமா வன்னியர்களின் உணர்வுகள் அனைத்தும் செத்துப் போச்சா ஜாதிங்கிற உணர்வும் செத்துப்போச்சா எனவே அனைவரும் இனிமேலாவது விழிப்பா இருங்கள் என பேசினார்
---






