என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி
    X

    அரசு பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி

    • வான் நோக்கும் நிகழ்வினை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்களுக்கு பாராட்டு

    அரியலூர்,

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் வான் நோக்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர்ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களால் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் வானில் அற்புதங்களைக் காணும் வான்நோக்கும் நிகழ்வு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஓபன் ஸ்பேஷ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தொலைநோக்கி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வானின் அற்புதங்களைக் காணும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பினை இப்பள்ளிக் குழந்தைகள் பெற்றுள்ளனர். தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே இதுகுறித்து அறிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் வருங்காலங்களில் மேதகு டாக்டர்.அப்துல் கலாம் அவர்களை போல விஞ்ஞானிகளாக உருவாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர் கூறினார்.

    Next Story
    ×