என் மலர்
உள்ளூர் செய்திகள்

காயம்பட்ட நாய்க்கு சிகிச்சை
- கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது
- நடமா–டும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி செயல்படுவதாக அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் நகரில் தமிழ் நாடு மாவட்ட விளை–யாட்டு மேம்பாட்டு ஆணை–யத்தின் மாவட்ட விளை–யாட்டு அரங்கம் செயல் பட்டு வருகிறது. இங்கு விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கலெக் டர் ரமணசரஸ்வதி அரிய–லூர் மாவட்ட விளையாட் டரங்கில் நடைபயிற்சி மேற்கொண்ட பொழுது மைதானத்தின் அருகில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று காலில் அடிபட்டு காயத்துடன் இருப்பதைக் பார்வையிட்டு உடனடியாக மாவட்ட விளையாட்டு அலு–வலரை தொடர்பு கொண் டார்.காயமடைந்த நாய்க்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க–வும், சம்பந்தப்பட்ட அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் கால்நடை பராம–ரிப்புத் துறையின் நடமாடும் கட்டணமில்லா கால்நடை சிகிச்சை ஊர்தியினை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்திற்கு வரவழைத்தார். பின்னர், நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் காயமடைந்த நாயை பிடித்து கால்நடை மருத்துவர் இளையராஜா சிகிச்சை அளித்தார்.
அந்த நாய்க்கு மருந்து அளித்து கட்டு போடப் பட்டதுடன் தொடர் சிகிச் சைக்காக அரிய–லூர் கால் நடை மருத்துவம–னைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், அங்கு ஓரிரு நாட்கள் தொடர் சிகிச்சை அளித்து காயத்தை முழு–வதுமாக குணப்படுத்த தேவை–யான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமா–டும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி செயல்பட்டு வருகிறது.இந்த ஊர்தியினை 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் தொடர்பு கொண்டு கால் நடைகளுக்கு ஏற்படும் கன்று ஈனாமல் இருத்தல், விபத்து, கிணற்றுக்குள் விழுவதால் ஏற்படும் காயம் உள்ளிட்ட கால்நடைகளுக்கு எதிர்பாராத விதமாக ஏற் படும் பல்வேறு வித–மான காயங்களுக்கு கால்நடை வளர்ப்போரின் இல்லங்க–ளுக்கே நேரடியாக சென்று கால்நடை மருத்துவர் மூலம் எவ்வித கட்டணமில்லாமல் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
எனவே அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கால்நடை–களுக்கு ஏற்படும் எதிர்பாராத நோய்களிலிருந்து பாது–காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் கால்நடை பரா–மரிப்புத் துறையின் நடமா–டும் கால்நடை மருத் துவ சிகிச்சை ஊர்தி சேவை–யினை 1962 என்ற கட்டணமில்லா தொலை–பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.சாலை விபத்தில் அடி–பட்டு கிடந்தால் வேடிக்கை பார்க்கும் இக்கால கட் டத்தில் நாயின் காலில் அடிபட்டு வலியால் துடித்து கத்திக்கொண்டிருந்த நாய்க்கு உடனடியாக சிகிச் சையளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட கலெக்டரின் செயலை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்.






