என் மலர்
அரியலூர்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது
- ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தேளூரில், ஊர் நாட்டாரும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் தலைவருமாகிய கோவிந்தசாமி குடும்பத்தினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ 1.85லட்சம் மதிப்பீட்டில் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி மற்றும் போர்வெல் உடன் மோட்டார் அமைத்து கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர் எழில் வரவேற்றார். அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுந்தரவடிவேல்,ஊராட்சி மன்ற தலைவி அழகம்மாள் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஏகேம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கதிர் கணேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து மாணவர்களுக்கு குடிநீரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவி கள்,நல்லாசிரியர் விளாங்குடி தியாகராஜன் ,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ்.ஐ. நடேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.கைகாட்டி திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த வீரமணி மகன் மணிகண்டன்(31) என்பவர் கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகே சுடுகாடு பகுதியிலும், அஸ்தினாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் கல்வி(54) அவரது வீட்டின் பின்புறமும் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- அரசு பஸ்சை சிறை பிடித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அரியலூர்:
காயம் கடலூர் மாவட்டம் தொழுதூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர், குடிகாடு, பரவாய் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக அரியலூருக்கும், மீண்டும் இங்கிருந்து அதே வழித்தடத்தில் தொழுதூருக்கும் காலை, மாலை என இருவேளையும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பஸ்சில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழுதூரில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். பஸ் பரவாய் கிராமம் சுடுகாடு அருகே சென்றுகொண்டு இருந்தபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய வேகத்தடையில் வேகமாக சென்று ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் நிலைதடுமாறி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும், கம்பியில் இடித்துக்கொண்டும் லேசான காயங்கள் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவ-மாணவிகள் பரவாய் கிராமத்திலேயே இறங்கினர். பின்னர் மாலை வீடு திரும்பி மாணவ-மாணவிகள் நடந்த விவரத்தை தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அரசு பஸ் இதுபோன்று இயக்கப்பட்டால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அதே அரசு பஸ் நேற்று வழக்கம்போல் அரியலூரில் இருந்து தொழுதூருக்கு சென்றபோது பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கூறுகையில், இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறாது என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்
- 2 ேபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
அரியலூர்:
அரியலூர் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள ஆயிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் செந்தில். இவரது வீட்டில் நடைபெற்ற ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகில் உள்ள சிறுகாட்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் தீரன்(31) என்பவர் வந்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் தீரன் அவரது ஊருக்கு செல்வதற்காக செந்திலுடன் சேர்ந்து பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஆயிப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் வெளியூர் காரருக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட செந்தில் தனது வீட்டு விசேஷத்திற்கு வந்து விட்டு திரும்பி சென்று கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அப்போது திடீரென்று அருகில் இருந்த கல்லை எடுத்து தீரனை, ஜெயபிரகாஷ் தாக்கியதில் தலைப்பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்த வந்தபோது தடுத்ததால் தீரனின் இடது கன்னத்தில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது தீரனை ஜெயப்பிரகாஷ் கத்தியை காட்டி மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தீரன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர்
இச்சம்பவம் குறித்து தீரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரகாசை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மேலும் சம்பவத்தில் ஜெயபிரகாஷோடு ஈடுபட்ட மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
பைரவாஷ்டமியை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, நெல்லி முள்ளி பொடி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள், பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்தனர். பின்னர் பைரவருக்கு ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற்றது. பைரவருக்கு சிவபுராணம் பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
- நகர்மன்ற சாதாரண அவசர கூட்டம் நடந்தது
- அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் நிராகரித்தனர்
அரியலூர்:
அரியலூர் ஜெயங்கொண்டத்தில் நகர்மன்ற சாதாரண அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் சட்டமன்ற அறிவிப்பில் ஜெயங்கொண்டம் நகராட்சி 2-ம் நிலை நகராட்சியில் இருந்து முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தமைக்கு நகர்மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை நிராகரித்து விட்டனர். மேலும் இதுகுறித்து சில கவுன்சிலர்களிடம் கேட்டபோது, கூட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக அழைப்பு கொடுக்காமல் கூட்டம் நடக்கும் அன்று அழைப்பு விடுத்ததால் வரவில்லை என தெரிவித்தனர்.
- கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்
அரியலூர்:
கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கல்லாத்தூர் பாப்பாக்குடி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த கடலூர் மாவட்டம் வள்ளியம் பகுதியை சேர்ந்த வீரமணி(வயது 29), வேட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை(28) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பாமகவினர் அப்பகுதி பொதுமக்களை சந்தித்தனர்
- பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி கிராமத்தை தலைமை இடமாகக் கொண்டு 14 சதுர கிலோமீட்டர் சுற்றளவிற்கு மூன்று கிராமங்களில் பழுப்பு நிலக்கரி திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இத்திட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்டா மாவட்டங்களை திட்டத்திலிருந்து நீக்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்ட மைக்கல்பட்டி உள்ளிட்ட 3 கிராம மக்களை பா.ம.க. வழக்கறிஞர் பாலு தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். அப்போது இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக பா.ம.க. இருக்கும் என தெரிவித்தார்.பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான விளம்பரத்திலிருந்து மட்டுமே தற்காலிகமாக மத்திய அரசு நீக்கி உள்ளது. அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நிலக்கரி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டதற்கு தங்களது நன்றியை கிராம மக்கள் தெரிவித்தனர் என வழக்கறிஞர் பாலு கூறினார்.
- நான்கு பேர் மீது வழக்கு பதிவு
- உடையார்பாளையத்தில் பரபரப்பு
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள கீழகோவிந்தன்புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள்கள் சுகன்யா (21), சுந்தரி (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது உறவினர் செல்வராஜ் (55). இவர்கள் இருவரது குடும்பத்திற்கு இடையே நில சம்மந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராமமூர்த்தியின் பம்ப் செட்டிற்கு மின்சாரம் வராததால் இது சம்பந்தமாக ராமமூர்த்திக்கும், செல்வராஜுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு ராமமூர்த்தியின் வீட்டிற்கு வந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்களான சௌந்தர்ராஜன், சிவராமகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரும் ராமமூர்த்தி எங்கே என்று கேட்டுள்ளனர்.ராமமூர்த்தி வீட்டில் இல்லை என்று சுந்தரி கூறியுள்ளார். பின்பு ராமமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்போது சுந்தரி மற்றும் அவரது அக்கா சுகன்யா ஆகிய இருவரும் ஏன் எங்களது தந்தையை ஏன் திட்டுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சுந்தரி, சுகன்யா ஆகிய இருவரையும் செல்வராஜ், சௌந்தர்ராஜன், சிவராமகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த சுந்தரி மற்றும் சுகன்யா இருவரும் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் சுந்தரி அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மலரழகன் 2 பெண்களை தாக்கிய செல்வராஜ் உள்ளிட்ட நான்கு பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மாயமானார்
- போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச்சேர்ந்த காமராசு என்பவரது மகள் கலைமதி (வயது 23). இவருக்கும், பாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அன்பு செல்வன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.இந்நிலையில் பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலைமதி குவாகம் கிராமத்தில் தந்தை காமராசு வீட்டில் தங்கி ஜெயங்கொண்டம் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் ஜெயங்கொண்டம் ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால், பா.ம.க. மாவட்ட செயலாளர் ரவிசங்கர் மற்றும் நகர செயலாளர் பரசுராமன் ஆகியோருடன் சென்று பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரிடம் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் மாயமான கலைமதியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். திருமணமான ஓராண்டில் இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெயங்கொண்டம் மருதூர் கிராமத்தில் விபத்து நடந்தது
- காயமடைந்த மகளுக்கு தொடர் சிகிச்சை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமம் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா. இவர் தனது மகள் பவித்ராவை மொபட்டின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு கண்டியங்கொல்லை கிராமத்திலுள்ள எள்ளு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டிருந்தார்.தண்ணீர் பந்தல் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, மருதூர் மேலத்தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மொபட் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காயமடைந்த 3 பேரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கவிதா செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகள் பவித்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார். வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூர் காவல்துறை சார்பில் திறக்கப்பட்டது
- மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்
உடையார்பாளையம்,
அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக கோடை காலத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தண்ணீர் பந்தலை அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் பொது மக்களுக்கு அவர், நீர்மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை கண்காணிப்பாளர்கள் சங்கர் கணேஷ், வெங்கடேசன் , அரியலூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.






