என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் இளம் பெண் மாயம்
    X

    அரியலூரில் இளம் பெண் மாயம்

    • திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மாயமானார்
    • போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச்சேர்ந்த காமராசு என்பவரது மகள் கலைமதி (வயது 23). இவருக்கும், பாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அன்பு செல்வன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.இந்நிலையில் பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலைமதி குவாகம் கிராமத்தில் தந்தை காமராசு வீட்டில் தங்கி ஜெயங்கொண்டம் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் ஜெயங்கொண்டம் ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால், பா.ம.க. மாவட்ட செயலாளர் ரவிசங்கர் மற்றும் நகர செயலாளர் பரசுராமன் ஆகியோருடன் சென்று பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரிடம் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் மாயமான கலைமதியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். திருமணமான ஓராண்டில் இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×