என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுப்பு நிலக்கரி திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
- பாமகவினர் அப்பகுதி பொதுமக்களை சந்தித்தனர்
- பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி கிராமத்தை தலைமை இடமாகக் கொண்டு 14 சதுர கிலோமீட்டர் சுற்றளவிற்கு மூன்று கிராமங்களில் பழுப்பு நிலக்கரி திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இத்திட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்டா மாவட்டங்களை திட்டத்திலிருந்து நீக்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்ட மைக்கல்பட்டி உள்ளிட்ட 3 கிராம மக்களை பா.ம.க. வழக்கறிஞர் பாலு தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். அப்போது இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக பா.ம.க. இருக்கும் என தெரிவித்தார்.பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான விளம்பரத்திலிருந்து மட்டுமே தற்காலிகமாக மத்திய அரசு நீக்கி உள்ளது. அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நிலக்கரி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டதற்கு தங்களது நன்றியை கிராம மக்கள் தெரிவித்தனர் என வழக்கறிஞர் பாலு கூறினார்.






