என் மலர்
நீங்கள் தேடியது "போராட்டம் DEMONSTRATION"
- சுங்கச்சாவடி ஊழியர்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்
- 42-வது நாளான நேற்று போராட்டம் தொடர்ந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறைறறறறயில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 42-வது நாளான நேற்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மண்டியிட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து, எங்களது கஷ்டங்கள் எப்போது தீரும் என்று கேட்பதுபோல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு பஸ்சை சிறை பிடித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அரியலூர்:
காயம் கடலூர் மாவட்டம் தொழுதூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர், குடிகாடு, பரவாய் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக அரியலூருக்கும், மீண்டும் இங்கிருந்து அதே வழித்தடத்தில் தொழுதூருக்கும் காலை, மாலை என இருவேளையும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பஸ்சில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழுதூரில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். பஸ் பரவாய் கிராமம் சுடுகாடு அருகே சென்றுகொண்டு இருந்தபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய வேகத்தடையில் வேகமாக சென்று ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் நிலைதடுமாறி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும், கம்பியில் இடித்துக்கொண்டும் லேசான காயங்கள் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவ-மாணவிகள் பரவாய் கிராமத்திலேயே இறங்கினர். பின்னர் மாலை வீடு திரும்பி மாணவ-மாணவிகள் நடந்த விவரத்தை தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அரசு பஸ் இதுபோன்று இயக்கப்பட்டால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அதே அரசு பஸ் நேற்று வழக்கம்போல் அரியலூரில் இருந்து தொழுதூருக்கு சென்றபோது பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கூறுகையில், இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறாது என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெற்றது
- 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை கிராம ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் ஊராட்சி செயலாளர்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளதாகவும், அவற்றை குறைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுவரை அவர்களது இந்த கோரிக்கைகள் தமிழக அரசால் நிறைவேற்றப்படாததால் நேற்று முதல் நாளை வரை ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 6 ஒன்றியங்களை சேர்ந்த 178 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டம் நடைபெற்றது.
- டார்ச் லைட் அடித்து நடத்தினர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே
கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு சார்பில், மத்திய அரசின் மின் மசோதாவை கண்டித்தும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி படி நெல் குவிண்டாலுக்கு 4000 ரூபாய் வழங்க கோரியும் டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் பவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தேசியக் குழு உறுப்பினர் மு மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் தமிழ்மாறன், ஒன்றிய குழு உறுப்பினர் மாசிலாமணி, அசோகன், கண்ணன், கலைமணி உள்ளிட்ட நகர குழு பங்கேற்போடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது
- வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி
கரூர்:
வாழ்வாதார உரிமையும், வரையறுக்கப்பட்ட ஊதியமும், காலை உணவு திட்டத்தையும் சத்துணவு ஊழியரிடம் வழங்கக்கோரி முதல்வரின் கவனம் ஈர்க்க கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் செல்வராணி நன்றி கூறினார்.
தர்ணாவில், காலை சிற்றுண்டி உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்தி விட்டு அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி திட்டம் சிறப்படைய கட்டமைப்பு வசதியுடன் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிடவேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்.
குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,000 வழங்கிடவேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிடவேண்டும். தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.






