என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலிண்டரில் கசிவு
    • புகை மண்டலம் ஏற்பட்டதால் பரபரப்பு

    ஜெயங்கொண்டம்,

    திருச்சியில் இருந்து 40 கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர்களை ஏற்றி கொண்டு கும்பகோணத்திற்கு ஒரு சரக்கு வாகனம் சென்று கொண்டு இருந்தது. இந்த வாகனத்தை திருச்சியை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி சென்றார். ஜெயங்கொண்டம் கடைவீதியில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த மணி தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார்.அப்போது ஒரு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த சரக்கு வாகனம் கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிபோைதயில் தகராறில் ஈடுபட்டார்
    • புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நீலாம்பாள் (60). இவரது மருமகள் பிரியங்கா (22). இவர்கள் வீட்டில் இருந்தபோது உடையார்பாளையம் காலனி தெருவை சேர்ந்த மதியழகன் மகன் தவசி (19) என்பவர் குடிபோதையில் இருவரையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நீலாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தவசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • ரெயில் நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக தீ தொண்டு வார விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகானந்தம், சரவணன், சிங், செந்தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு செந்துறை ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கினர்.

    • செந்துறை தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியத்தில் பா.ஜ.க அரசுத் தொடர்பு பிரிவு சார்பாக பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு ஒன்றியத் தலைவர் புயல் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கொடியேற்று நிகழ்ச்சிகளில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அரசுத் தொடர்பு பிரிவின் மாவட்டத் தலைவர் தமிழரசன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் பெரியசாமி உள்ளிட்ட பாஜக மாவட்ட , ஒன்றிய அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

    • ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தூய மங்கள அன்னை ஆலயம் 88ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலியும், நவநாள் ஜெபமும் நடைபெற்று வந்தது. 15ம் தேதி புள்ளம்பாடி மங்கலமாதா மின்அலங்கார ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் 5 தேர்கள் வலம் வந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. அவருடன் பங்குதந்தை ரெஜிஸ் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார். திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • சட்டமன்றத்தில் எம்எல்ஏ வக்கீல் சின்னப்பா கோரிக்கை வைத்தார்
    • பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர ரகுபதி பதில்

    அரியலூர், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும் - சட்டமன்றத்தில்வக்கில் கு.சின்னப்பா எம்எல்ஏ கோரிக்கை வைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது,அரியலூரில் சுமார் 150 ஆண்டு காலமாக கோர்ட் செயல்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் அரியலூர் மாவட்டம்உ ருவாக்கப்பட்டது. அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதுநீண்ட நாள் கோரிக்கையா கும். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துகொடுக்க வேண்டும் என கேட்டுக்கொ ள்கிறேன் என எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா பேசினார்,இதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசும்போது, தொகுதி எம்எல்ஏவின் கோரிக்கை வரும் காலத்தில் பரிசிலிக்கப்படும் என பதிலளித்தார்.

    • பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி கர்ப்பம்
    • சிறுமிக்கு கருகலைப்பு செய்த 2 பேர் கைது

    அரியலூர்,

    அரியலூர் மலத்தான்குளம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் முத்துசாமி (வயது 48). கடந்த டிசம்பர் மாதம் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் அச்சிறுமி 4 மாத கர்ப்பமான நிலையில் அவருக்கு கடந்த 13-ந்தேதி, விழுப்பணங்குறிச்சியில் உள்ள மணிமேகலை என்பவர் வீட்டில் கட்டாய கருகலைப்பு மாத்திரை கொடுத்துள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே இது குறித்து அச்சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து அச்சிறுமியை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணியம்மாள் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து முத்துசாமியை கைது செய்தார். மேலும் அவருக்கு துணையாக இருந்து மணிமேகலையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • ராகுல் எம்பி பதவி பறிப்பு கண்டித்து போராட்டம்
    • மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 37 பேர் கைது

    அரியலூர்,

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி அரியலூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் காங்கிரஸ் கட்சியினர் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சங்கர், நகர தலைவர் சிவகுமார், மாநில பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி மாரியம்மாள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரசார், மகிளா காங்கிரசார் மற்றும் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ரெயில்  நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக் கொண்டதின் பேரில், அனுமதிக்கப்பட் 10 பேர், சென்னை-குருவாயூர் விரைவுரெயிலை ஒரு நிமிடம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 37 பேரை கைது செய்தனர்.

    • 10 பேர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தகவல்
    • பைக்குகளை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்த்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாகவே இளைஞர்கள் இரவு நேரங்களில் கே.டி.எம். ரக பைக்குகளை வைத்துக்கொண்டு பைக் ரேஸ் செல்வதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. தமிழ் புத்தாண்டை ஒட்டி திருச்சி- சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே 10 பேர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக பொதுமக்கள் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று பைக்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
    • தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்றது

    அரியலூர்,

    தமிழ் புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுபகிருது ஆண்டு முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டான பெரும்பாலான இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோதண்டராமசாமி திருக்கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷ்ணு கனி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், திருமனூர் ஆலந்துரையார் கோயில், திருமழபாடி வைத்திய நாதசுவாமி திருக்கோயில் மற்றும் செந்துறை, கீழப்பழுவூர், மேலப்பழுவூர், உடையார்பா ளையம்,ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், பொன்பரப்பி, வி.கைகாட்டி, மீன்சுருட்டி, ஆர்.எஸ்.மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோயில், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் மேற்கண்ட கோயில்களில் அன்ன தானமும் வழங்க ப்பட்டன. ஏரளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.பால்குட திருவிழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகர் கோயிலிலிருந்து நூற்றுக்கண க்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அலங்கரிக்கப்பட்ட உத்ஸவர் பெரியநாயகி அம்மனுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. வீடுகள் தோறும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.

    • அம்பேத்கர்சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது

    அரியலூர்,

    அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் அனைத்துக் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையிலும், தி.மு.க. சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர செயலாளர் முருகேசன் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. வக்கில் கு.சின்னப்பா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சின்னதுரை சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கில் செல்வநம்பி தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தா.பழுர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட துணைசெயலாளர் பழனிவேல் தலைமையிலும், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொதுசெயலாளர் தண்டபாணி தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தலைவர் மணிவேல் தலைமையிலும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் செட்டி ஏரிக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • வரதராஜன்பேட்டையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அ.தி.மு.க. சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறந்து மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டையில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, நொங்கு ஆகியவற்வைறை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மருதமுத்து, ராமச்சந்திரன், வரதராஜன் பேட்டை நகர செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×