என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்

    • ராகுல் எம்பி பதவி பறிப்பு கண்டித்து போராட்டம்
    • மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 37 பேர் கைது

    அரியலூர்,

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி அரியலூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் காங்கிரஸ் கட்சியினர் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சங்கர், நகர தலைவர் சிவகுமார், மாநில பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி மாரியம்மாள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரசார், மகிளா காங்கிரசார் மற்றும் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக் கொண்டதின் பேரில், அனுமதிக்கப்பட் 10 பேர், சென்னை-குருவாயூர் விரைவுரெயிலை ஒரு நிமிடம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 37 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×