என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்
- வரதராஜன்பேட்டையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்
ஜெயங்கொண்டம்,
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அ.தி.மு.க. சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறந்து மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டையில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, நொங்கு ஆகியவற்வைறை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மருதமுத்து, ராமச்சந்திரன், வரதராஜன் பேட்டை நகர செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






