என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைபாஸ் ரோட்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள்
- 10 பேர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தகவல்
- பைக்குகளை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்த்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாகவே இளைஞர்கள் இரவு நேரங்களில் கே.டி.எம். ரக பைக்குகளை வைத்துக்கொண்டு பைக் ரேஸ் செல்வதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. தமிழ் புத்தாண்டை ஒட்டி திருச்சி- சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே 10 பேர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக பொதுமக்கள் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று பைக்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






