என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமானூர் மங்கள அன்னை கோவில் 88ம் ஆண்டு தேர் திருவிழா
- ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தூய மங்கள அன்னை ஆலயம் 88ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலியும், நவநாள் ஜெபமும் நடைபெற்று வந்தது. 15ம் தேதி புள்ளம்பாடி மங்கலமாதா மின்அலங்கார ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் 5 தேர்கள் வலம் வந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. அவருடன் பங்குதந்தை ரெஜிஸ் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார். திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






