என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பணிக்கான தேர்விற்கு இலவச பயிற்சி
    X

    அரசு பணிக்கான தேர்விற்கு இலவச பயிற்சி

    • இளைஞர்கள் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு
    • மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல்மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசு பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞரகளுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்காலியிடங்களுக்கான, தேர்வில் கலந்து கொள்வதற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று(4ம்தேதி) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் பயோடேடடா எடுத்து வரவேண்டும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×