என் மலர்
உத்தரப் பிரதேசம்
- மோதலில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, இந்த தகவல் வெளியானது.
திருமண நிகழ்ச்சி, சுபமுகூர்த்த நிகழ்ச்சி என்றால் அங்கு சுவையான உணவு வகைகள் பரிமாறப்படும். உணவு வகைகளுடன் இனிப்பு போன்ற பலகாரங்கள் வழங்கப்படும்.
முதல் பந்தியில் அனைத்து வகை பலகாரங்கள் வைக்கப்படும். நேரம் செல்லசெல்ல தட்டுப்பாடு ஏற்பட்டு பந்திக்கு வரும் பலகாரங்கள் குறைந்து போகும். இவ்வாறு வரவில்லை என்றால் அதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கே பலகாரம் இல்லையா... பெண் வீட்டாருக்கே இல்லையா... நான் யார் தெரியுமா... என சண்டையை வலுக்கட்டாக இழுக்கும் நபர்களும் உண்டு.
இதேபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேச மாநில ஆக்ராவில் நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிறு இரவு ஷாம்சாபாத் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஒருவர் கூற, அது திருமண நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் தீயாக பரவியது.
எப்படி ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்படலாம் என வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபிறகு ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோதலில் 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சேடகான்-மிடார் சாலையில் இன்று அதிகாலையில் பிக்-அப் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 8 மணியளவில் வாகனம் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (நைனிடால்) பிரஹலாத் நாராயண் மீனா தெரிவித்தார்.
எதிர்திசையில் வந்த மோட்டார் பைக்கை இடிக்காமல் செல்ல முயன்றபோது வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு தம்பதியும் அவர்களது மகனும் ஆவர்.
விபத்தில் காயமடைந்த இருவர் ஓகல்கண்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் இருந்து ஹல்த்வானியில் உள்ள உயர் மருத்துவ வசதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது.
- ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
உத்தரப்பிரதசேம் மாநிலம் எட்டாவா பகுதி அருகே புதுடெல்லி- தார்பாங்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 4 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அவை தீக்காயங்களாக இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எட்டாவா போலீஸ் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
மேலும் , தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், "டெல்லியில் இருந்து பீகார் சென்றுக் கொண்டிருந்த ரெயிலில் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் வழங்கப்படும்" என்றார்.
ஆனால், ஒரு பெட்டியில் மட்டுமே தீப்பிடித்ததாக வட மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், "புது டெல்லி- தர்பங்கா சிறப்பு விரைவு வண்டி எண் எஸ்1ல் இருந்து எட்டாவா அருகே சராய் போபட் சந்திப்பில் உள்ள காவலர் புகை வெளியேறுவதைக் கவனித்தார்.
பின்னர், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது வரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை," என்றார்.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது.
குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக நீண்ட காலம் இருந்த அமேதி தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்வானார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதிஇரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் போட்டியிடுவார் என உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் கூறியிருந்தார். அதே நேரம் ஸ்மிருதிஇரானியும் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அமேதி தொகுதி மக்களுக்கு ஸ்மிருதிஇரானியும், ராகுல்காந்தியும் போட்டி போட்டு தீபாவளி பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். ஸ்மிருதிஇரானி அமேதி தொகுதி மக்களுக்கு செல்போன்கள், சுவர் கடிகாரங்கள், சேலைகள் வழங்கியுள்ளார்.
இதேபோல ராகுல் காந்தி தனது பங்கிற்கு அமேதி தொகுதி மக்களுக்காக பேண்ட், சட்டைகள் மற்றும் இனிப்புகள் என பரிசுகளை வழங்கியுள்ளார்.
ஸ்மிருதிஇரானி தரப்பில் தீபாவளி பரிசு வழங்கியதை உறுதிபடுத்திய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கோவிந்த்சவுகான் கூறுகையில், ஸ்மிருதி இரானியின் பரிசுகள் சமூகத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுகள் தேவைப்படுபவர்களை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார்.
இதேபோல பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஸ்மிருதிக்கு வாக்களித்து பரிசுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
- மதம், சாதி, இனம், உலகத்தில் உள்ள எந்தவொரு நாடு என எங்கேயும் குழந்தைகள் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு காதுகள்,
- இரண்டு கண்கள், இரண்டு துளை உள்ள மூக்கு ஆகியவற்றுடன்தான் பிறக்கின்றன. ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.
சமாஜ்வாடி கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி மாட்டிக்கொள்வது உண்டு. முன்னதாக பத்ரிநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
தற்போது கடவுள் லட்சுமி தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இவருடைய பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து, கட்சிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் பேசுவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
சுவாமி பிரசாத் மவுரியா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் "மதம், சாதி, இனம், உலகத்தில் உள்ள எந்தவொரு நாடு என எங்கேயும் குழந்தைகள் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு காதுகள், இரண்டு கண்கள், இரண்டு துளை உள்ள மூக்கு ஆகியவற்றுடன்தான் பிறக்கின்றன. ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.
இந்த தேதிவரை நான்கு கைகள், எட்டு கைகள், பத்து கைகைள், இருபது கைகள், ஆயிரம் கைகள் கொண்ட குழந்தை பிறக்கவில்லை என்கிறபோது, நான்கு கைகளுடன் எப்படி லட்சுமி தேவி பிறக்க முடியும்?" எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீங்கள் கடவும் லட்சுமி தேவியை வழிபட விரும்பினால், கடவுளுக்கு உண்மையான அர்த்தமான உங்களுடைய மனைவிக்கு மரியாதை கொடுங்கள். மனைவியை வழிபடுங்கள். ஏனென்றால் வீட்டின் வளர்ச்சி, மகிழ்ச்சி, உணவு, குடும்பத்தை மிகுந்த பக்தியுடன் பார்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை நிறைவேற்றுகிறார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடவுள் லட்சுமி தேவியை பற்றி குறிப்பிட்டிருந்த அவரது கருத்தை, சமாஜ்வாடி கட்சியில் உள்ளவர்களே விரும்பவில்லை. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஐ.பி. சிங், "கட்சிக்கு தீங்கு விளைவிக்கின்ற இதுபோன்ற கருத்துகளை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு கட்சி பொறுப்பு ஏற்காது. இது அவருடைய தனிப்பட்ட பார்வை. ஐந்து வருடங்களாக பா.ஜனதாவின் கேபினட் மந்திரியாக இருந்தபோது, கடவுள் லட்சுமி தேவி, கடவுள் கணபதி குறித்து அநாகரீகமான கருத்துக்களை கூற நீங்கள் பயந்தீர்கள். கட்சிக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
சுவாமி பிரசாத் மவுரியா கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
லக்னோ:
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துகளும் ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோபால்பக் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 26 பட்டாசு கடைகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் 9 பேரின் நிலையை கவலைக்கிடமாக உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன
- வறுமை எண்ணெயை எடுக்க தள்ளி விட்டதாக அகிலேஷ் தெரிவித்தார்
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீஇராமருக்கான கோயில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் தீபாவளியை குறிக்கும் வகையிலும், ஸ்ரீஇராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டியும், சரயு நதிக்கரையில், 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
கின்னஸ் உலக சாதனை பதிவு நிறுவனம், டிரோன் மூலம் இதனை பதிவு செய்து எண்ணிக்கையை உறுதி செய்து, இதை ஒரு உலக சாதனை என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோவில் நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளில் இருந்து சில குழந்தைகள் எண்ணெயை எடுத்து பாத்திரங்களில் ஊற்றி கொள்கின்றனர்.
இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் கருத்தை பதிவிட்ட யாதவ் தெரிவித்திருப்பதாவது:
பக்தி ஒரு புறம், வறுமை ஒரு புறம். எரியும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை குழந்தைகள் எடுக்கும் நிலைக்கு வறுமை அவர்களை தள்ளி விட்டது. ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளி பெற செய்யும் ஒரு பண்டிகையை நாம் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
- தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ல் பதவியேற்றதும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் 'தீபோத்சவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் முதல் மந்திரி யோகி ஆதித்ய்நாத்திடம் வழங்கப்பட்டது.
- மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தது.
- பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிறந்ததால் காழஞ்சி பிறப்பு உலக அளவில் செய்தியானது.
லக்னோ:
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகமான ஒரு மாதத்துக்குள் ஒரு குழந்தை பிறந்தது.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஒரு வங்கியில் சர்வேஷா தேவி வரிசையில் காத்திருந்தபோது காழஞ்சி நாத் பிறந்தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிறந்ததால் இவனது பிறப்பு உலக அளவில் செய்தியானது. காழஞ்சி என்றால் புதையல் என்று பொருள்.
சின்னஞ்சிறு காழஞ்சி மாநில தேர்தல் பிரசாரத்தில் சுவரொட்டிகளில் இடம் பெற்றான். ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தின் சுவரொட்டியில் குழந்தை இடம்பெற்றது.
குழந்தை பிறந்த பிறகு சர்வேஷா தேவிக்கு வங்கி வரிசையில் காத்திருந்தபோது குழந்தை பிறந்தமைக்காக நிவாரணமாக அரசு 2 லட்சம் ரூபாய் அளித்தது.
இந்நிலையில், லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் காழஞ்சி நாத்தின் பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.
- கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
- இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அந்த வகையில் 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.
இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.
இந்தப் பணிக்காக 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு திரண்டு உள்ளார்கள்.
இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவதே இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக்கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ.3கோடி செலவிடப்படுகிறது.
இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.
- மாணவர்கள் கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
- அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது.
அலகாபாத் பல்கலைக்கழத்தில் புதிய பட்டப்படிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் கொண்ட புதிய பாடத்திட்டத்தில் BBA-MBA படிப்பை மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு படிக்க முடியும். இந்த பட்டப்படிப்பை வர்த்தக பிரிவு ஆசிரியர்கள் துவங்கி உள்ளனர்.
புதிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் மாணவர்கள் பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்ட புராணங்களில் இருந்து கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். கிருஷ்ணர் மட்டுமின்றி ஜெ.ஆர்.டி. டாடா, அசிம் பிரேம்ஜி, திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் மற்றும் பிர்லா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் பற்றியும் நிர்வாக ரீதியிலான பாடங்களை கற்கவுள்ளனர்.
இதோடு அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. தற்போது இந்த ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 26 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள் உள்ளன. புதிய படிப்பில் பல்வேறு வழிமுறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டம் கொண்ட இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாவது ஆண்டில் படிப்பை நிறுத்திக் கொண்டால் டிப்ளோமா படிப்புக்கான சான்றும், மூன்றாவது ஆண்டில் நிறுத்திக் கொண்டால், BBA பட்டமும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்தால் MBA பட்டமும் பெற முடியும்.
- மார்க்கெட்டுகளில் சென்று ஆடைகள் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
- லக்னோ பிரியாணி இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த பிரியாணி என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி சமீபத்தில் மும்பையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததும், அங்குள்ள மார்க்கெட்டுகளில் சென்று ஆடைகள் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பிரியாணியை ருசித்து சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவரது பதிவில் 2 நாட்களாக தொடர்ந்து லக்னோவில் பயணம் செய்து வருகிறேன். லக்னோ பிரியாணி இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த பிரியாணி என பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது லக்னோ பயணத்தின் மற்ற படங்களையும் அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை இணைய பயனர்கள் லைக் செய்து வருகின்றனர்.






