search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "firecracker shop"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    லக்னோ:

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துகளும் ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோபால்பக் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 26 பட்டாசு கடைகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் 9 பேரின் நிலையை கவலைக்கிடமாக உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை போலீசார் அறிவுறுத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் சுகவனம் பேசுகையில் குழந்தை தொழிலாளர்களை கடையில் ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசுகள் தீப்பற்றாத கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள உரிமம் பெற்ற தொழிற்சாலையில் இருந்து பட்டாசுகளை வாங்க வேண்டும். பட்டாசு இருப்பு விவரங்களை அதிகாரிகள் கேட்கும் போது பதிவுகளை காண்பிக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது
    • உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் காவல்துறை சார்பில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமை வகித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.எஸ்.பி லாமெக் பேசுகையில், கடையின் உரிமம், வெடி இருப்பு பதிவேடு ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.

    உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்ககூடாது.

    பட்டாசு கடை களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும்.

    பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார்.

    இதில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    • நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும்

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம் ஏ.இ.5-ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். உரிம கட்டணம் ரூ.1,200 ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட வேண்டும். அதில் மனுதாரர் தனது கையொப்பம் இட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது இணைக்க வேண்டும்.

    வாடகை கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டிட உரிமையாளருடன் ரூ.20 மதிப்புக்கு குறையாத முத்திரைத்தாளில் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தம் ஆவணம் இணைக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருந்தால் அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்க வேண்டும்.

    பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய கட்டிட உரிம கட்டணம் செலுத்திய ரசீது இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் அடுத்த மாதம் 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பெறாத விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு இன்றி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.
    • வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு கடை அமைக்க வியா பாரிகள் உரிய அனுமதியை பெற தேவை யான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு கடை அமைக்க அனுமதிப்பது குறித்து தீயணைப்பு, போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    கடந்த மாதம் 30-ந் தேதி பட்டாசு கடை வைக்க அனுமதி கேட்போர் விண்ணப்பிக்க கால அவகாசம் வருவாய் துறை யினரால் அளிக்கப்பட்டு இருந்தது. பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.

    விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளது. அந்தந்த தீய ணைப்பு நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்றினை நிலைய தீயணைப்பு அலுவலர்கள் முழுமையான ஆய்வுக்கு பின் வழங்குவர்.

    குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்துவர். தடையின்மை சான்று கோரி தினமும் விண்ண ப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை உடனு க்குடன் அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது நிலைய தீயணைப்பு அலுவலர்களுக்கே நன்கு தெரியும். எனவே விதிமுறை களை பின்பற்றியே தடை யின்மை சான்று வழங்குவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • பொது சேவை மூலமாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மிக முக்கிய பண்டிகையான தீபாவளியை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    எனவே உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

    எனவே நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட சார் ஆட்சியர், கோட்டாட்சியர் மூலம் தங்கள் உரிமத்தினை புதுப்பிக்க வேண்டும்.

    தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை செய்ய விரும்பும் ெபாதுமக்கள், வணிகர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மூலமாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • மதுைர நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் என போலீஸ் கமிஷனர் தகவல் தெரிவித்தார்.
    • வருகிற 9-ந் தேதி மதியம் 1 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்.

    இதற்காக இணையத்தில் AE-5 படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    இத்துடன் தீயணைப்பு துறை தடையில்லா சான்று, 2 வழிகளுடன் கூடிய கடையின் வரைபடம், கடையை சுற்றி 50 மீட்டர் அருகில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம், கடையின் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை, ரூ.900 விண்ணப்ப உரிமம் கட்டணம் மற்றும் பிற விவரங்களை இணைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருகிற 9-ந் தேதி மதியம் 1 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    முழுமையான விண்ண ப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும், சம்பந்தப்பட்ட இடங்களை போலீசார் பார்வையிட்டு, திருப்தி அடையும் பட்சத்தில்

    ×