search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் பெற்ற தொழிற்சாலையில்இருந்து பட்டாசுகள் வாங்க வேண்டும்
    X

    ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் பட்டாசு கடை வைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    உரிமம் பெற்ற தொழிற்சாலையில்இருந்து பட்டாசுகள் வாங்க வேண்டும்

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை போலீசார் அறிவுறுத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் சுகவனம் பேசுகையில் குழந்தை தொழிலாளர்களை கடையில் ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசுகள் தீப்பற்றாத கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள உரிமம் பெற்ற தொழிற்சாலையில் இருந்து பட்டாசுகளை வாங்க வேண்டும். பட்டாசு இருப்பு விவரங்களை அதிகாரிகள் கேட்கும் போது பதிவுகளை காண்பிக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×