என் மலர்
ஒடிசா
- பூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுசரிதா மொகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
- எனது சீட்டை திருப்பி கொடுத்து விட்டேன்.நான் மக்கள் சார்ந்த பிரசாரத்தை விரும்பினேன்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 21 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. வருகிற 13-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை அங்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
அங்குள்ள பூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுசரிதா மொகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் அருப் பட்நாயக்கும், பா.ஜனதா சார்பில் சம்பித் பத்ராவும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி தன்னிடம் இல்லை என்றும், இதனால் சீட்டை திருப்பி கொடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுசரிதா மொகந்தி கூறியதாவது:-
எனக்கு கட்சியில் இருந்து நிதி மறுக்கப்பட்டது. சட்டசபை தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. பா.ஜனதாவும், பிஜு ஜனதா தளமும் பண மழையில் நனைந்துள்ளன. எங்கும் செல்வமாக காணப்படுகிறது. பிரசார செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் நான் போட்டியிட விரும்பவில்லை. எனது சீட்டை திருப்பி கொடுத்து விட்டேன்.
நான் மக்கள் சார்ந்த பிரசாரத்தை விரும்பினேன். ஆனால் நிதி பற்றாக்குறையால் அதுவும் முடியவில்லை. இதற்கு கட்சி பொறுப்பல்ல. பா.ஜ.க. அரசு கட்சியை முடக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.
- முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு.
புவனேசுவரம்:
ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் வி,கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்தவரான இவர், முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவரது அழைப்பின்பேரில், விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். தற்போது நவீன்பட்நாயக்கின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.
தற்போது ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் வி.கே.பாண்டியன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நேற்று புவனேசுவரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரி நவீன்பட்நாயக் எனது குரு. நான் அவருடை சீடன். கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. சாதாரண வீரன்தான். ஒடிசா மக்களுக்காக நவீன்பட்நாயக் சிறப்பான சேவையாற்றி வருகிறார். அவருக்கு கீழ் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு. பா.ஜனதாவினர் அரசியல் காரணங்களுக்காக என்னை அந்நியன் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒடிசா மக்கள் என்னை அப்படி சொல்லவில்லை. நான் ஒடிசாவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒடிசா மக்கள் என்னையும் அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். மிகவும் நேசிக்கிறார்கள். என்னை பலவீனப்படுத்த பா.ஜனதாவினர் இதுபோன்று கூறுகிறார்கள்.
இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறினார்.
- ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
- பல அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
புவனேஸ்வர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஒடிசாவில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
ஒடிசா மாநில ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதி வேட்பாளராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
- ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
புவனேஸ்வர்:
பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், சூப்பர்சானிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் இந்திய கடற்படை திறனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
- சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
- பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
புவனேஷ்வரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், விமானம் சேதமடைந்தது.
சேதமடைந்த விமானத்தில் 169 பேர் பயணித்த நிலையில், புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் பத்தே நிமிடங்களில் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஆலங்கட்டி மழை பெய்ததில் விமானத்தின் வின்ட்ஷீல்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
- ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
- ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது.
ஒடிசா மாநிலத்தில், வரும் மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.
இந்நிலையில், ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஒடிசாவின் பெருமையும் கண்ணியமும் அழிக்கப்பட்டு வருவதாகவும், மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியிடம், ஒடிசாவில் பிஜேடி உடனான பாஜகவின் உறவு குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரச்சினைகளின் அடிப்படையின் மத்தியில் பிஜேடி எங்களுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும் பல கட்சிகளும் எங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளன.
ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது. ஒடியா மக்கள் இதை நீண்ட காலம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒடிசாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. அது இன்று நாட்டின் பணக்கார மாநிலமாக மாறியிருக்கலாம்.
ஒடிசாவை பணக்கார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு ஒடியாவிற்கும் உள்ளது" என்றார்.
- இரவு 9 மணியளவில் பஸ் ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாரபதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
- திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புரியில் இருந்து நேற்று ஒரு பஸ் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். இரவு 9 மணியளவில் அந்த பஸ் ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாரபதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
- நாடு முழுவதும் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
- வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ஒடிசாவில் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.
புவனேஸ்வர்:
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 8 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசாவின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மிஸ்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒடிசாவில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்த வெப்பம் தொடர்பாக வெப்பச் சோர்வு, உஷ்ணப் பிடிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்.
அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவர்களுக்கான பயிற்சியை சமீபத்தில் நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.
- ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
- சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இங்கு மே மாதம் 13-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 4 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஒடிசா மாநிலத்தை பொறுத்தவரை அம்மாநில முதல்-மந்திரியும், பிஜூ ஜனதாதள கட்சி தலைவருமான நவீன்பட்நாயக் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். தொடர்ந்து 5-வது முறையாக அவர் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
இந்த தேர்தலில் பிஜூ ஜனதாதளமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் இரு கட்சிகள் இடையே உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என அம்மாநில தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து அம்மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வரும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் 15 பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் மற்றும் 72 சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
இதில் நவீன்பட்நாயக் தொடர்ந்து 6-வது முறையாக ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே இவர் 5 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ச்சியாக 5-வது தடவையாக முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். நீண்ட நாள் முதல்-மந்திரியாக இருந்து வருபவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
தற்போது மீண்டும் அவர் ஹிஞ்சிலி தொகுதியில் களம் இறங்கி இருக்கிறார்.
இக்கட்சி சார்பில் கட்டாக் தொகுதியில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் முன்னாள் மனிதவள தலைவராக இருந்த சாண்ட்ரூப் மிஸ்ரா போட்டியிடுகிறார். விருப்ப ஓய்வு பெற்ற அவர் பிஜூ ஜனதாதள கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 3 முறை எம்.எல்.ஏவாகவும், மந்திரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் பூரி தொகுதியிலும், காங்கிரஸ் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் ரவுத்ரே மகன் மன்மத் ரவுத்ரே புவனேஸ்வர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்துவருகிறார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.
புவனேஸ்வரம்:
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமையும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார். பிஜு ஜனதா தள கட்சியின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகள் மற்றும் சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார்.
- ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
- பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அரிந்தம் ராய் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 மதிப்பூதியம் அளிக்கப்பட உள்ளது.
புவனேஸ்வர்:
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் பத்ம ஸ்ரீ, 11 பேர் பத்ம பூஷண் மற்றும் 4 பேர் பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தெலுங்கானா அரசு பத்ம விருது பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






