என் மலர்
மகாராஷ்டிரா
- பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட விரும்புகிறார்.
- பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
மும்பை :
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், மராட்டிய முன்னாள் மந்திரியுமான பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாகவும், அவர் கட்சி மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே பேசியது, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட விரும்புகிறார். நானும் குடும்ப அரசியலின் அடையாளம் தான். ஆனால் உங்கள்(மக்கள்) இதயங்களில் நான் ஆட்சி செய்வதால், பிரதமர் நரேந்திர மோடி கூட என்னை வீழ்த்த முடியாது" என்றார்.
முண்டேவின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து தனது பேச்சு குறித்து பங்கஜா முண்டே வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக எனது உரை இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது.
பரபரப்பான செய்திகளுக்கு மத்தியில் நேரமிருந்தால் நீங்கள் முழு வீடியோவையும் பார்க்க வேண்டும்.
சாதி அல்லது பண பலத்தை பயன்படுத்தாமல், புதிய பாணி அரசியலில் மக்கள் தங்கள் இடத்தை பிடிக்க வேண்டும். நமக்கு நல்ல அரசியில் கலாசாரம் தேவை என்று குழந்தைகளிடம் நான் குறிப்பிட்டேன். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டினேன்" என்றார்.
மேலும் கலாசார விவகாரங்கள் மற்றும் வனத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார், "முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த அதிருப்தியும் இல்லை. அவரது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது" என்றார்.
- டாலருக்கு நிகரான நேற்றைய ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக இருந்தது.
- ரூபாயின் மதிப்பு இன்று 9 காசுகள் அதிகரித்துள்ளது.
மும்பை:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடைசியாக கடந்த 24-ம் தேதி 30 காசுகள் சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் 58 காசுகள் வீழ்ச்சியடைந்தது. அதன்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக சரிந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும்.
கடந்த 4 நாட்களில் 193 காசுகள் சரிந்திருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.58 ஆக உயர்ந்துள்ளது.
- இந்த ஆண்டுக்கான நவராத்திரி வழிபாடு நேற்று தொடங்கியது.
- நவராத்திரி ஊர்வலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.
மும்பை :
தானே தெம்பி நாக்கா பகுதியில் நவராத்திரி வழிபாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இங்கு நவராத்திரி மண்டல் ஆரம்பத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் அரசியல் குருவான ஆனந்த் திகேவால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி வழிபாடு நேற்று தொடங்கியது. முன்னதாக நடந்த நவராத்திரி ஊர்வலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். மேலும் அவர் தேவி சிலையை வரவேற்றார்.
பின்னர் ஏக்நாத் ஷிண்டேயிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது சிவசேனாவில் இருந்து மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உங்கள் அணியில் சேர இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் யார்-யார்? எங்கள் அணியில் சேருகிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது" என்றார்.
- இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது.
மும்பை :
வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8-ந் தேதி ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ், அனில் அம்பானி வேண்டும் என்றே சுவீஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் அனில் அம்பானி மீது கருப்பு பண ஒழிப்பு தடுப்பு சட்டம் பிரிவு 50, 51 கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அனில் அம்பானி அவர் மீதான வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல், "அனில் அம்பானிக்கு எதிரான சட்டப்பிரிவு 2015-ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11-ம் ஆண்டு நடந்தவை. எனவே குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என கூறினார்.
இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
- கடந்த 24-ந்தேதி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது.
- ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4 நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
மும்பை :
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது.
இது நேற்று மீண்டும் 58 காசுகள் வீழ்ச்சியடைந்தது. அதன்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக சரிந்து உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும்.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4 நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த 4 நாட்களில் 193 காசுகள் சரிந்திருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 90 ரன் அடித்தது.
- ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.
நாக்பூர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இரு அணிகளுக்கும் இடையே 2-வது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் அடித்தது.

கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன் அடித்தார். அதிகபட்சமாக மேத்யூ வாட் 43 ரன் குவித்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
விராத் கோலி 11 ரன்னும், பாண்ட்யா 9 ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன் அடித்தார். 7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது.
- நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
இந்த போட்டியில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு தற்போது டாஸ் போடப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.
- ஆடுகளத்தை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
இந்த நிலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் தற்போது பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது.
இதை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்த பிறகு டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூரில் இன்று 64 சதவீதம் மேக மூட்டம் கானப்படும் என்றும், வெப்பநிலையானது 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் மழையால், ஆட்டம் பெரிதும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றது.
- பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.239.61 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மும்பை :
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் ரூ.79.96 ஆக முடிவடைந்தது.
நேற்று சந்தையில் ரூபாய் மதிப்பு ரூ.80.27 என்ற அளவில் தொடங்கியது. அது மேலும் வீழ்ச்சி அடைந்து ரூ.80.95 அளவுக்கு சென்றது. இறுதியாக, ரூ.80.86 என்ற அளவில் முடிவடைந்தது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இது 90 காசுகள் அதிகம். ஒரே நாளில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முன்எப்போதும் இல்லாத வீழ்ச்சி ஆகும்.
அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது மூன்றாவது உயர்வாகும்.
மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் 3 லட்சம் வீரர்களை திரட்டப் போவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இந்த காரணங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றது. அதனால், ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணயங்கள் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்துள்ளது என்று அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதுபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.239.61 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.239.50 ஆக இருந்தது.
நேற்றைய சந்தையின் தொடக்கத்தில், ரூ.241 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக மதிப்பு உயர்ந்து, இறுதியில், ரூ.239.61 ஆக நிறைவடைந்தது.
- கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- குடியிருப்பு கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று அதிகாரி தெரிவித்தார்
தானே:
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
30 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், 5 குடும்பங்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
- உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- கவுதம் அதானி முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து பேசினார்.
மும்பை:
சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் என இரண்டு பிரிவாக கட்சி உடைந்துள்ளது.
இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்துள்ளது. இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் அதானி - உத்தவ் தாக்கரே சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Sanjay Rawat received Rs 2 lakh monthly from Pravin Rawat Woman statement in ED
- சஞ்சய் ராவத் கூறுவதன் பேரில் தான் பிரவின் ராவத் செயல்பட்டார்.
மும்பை :
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பத்ரா சால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளது. அதில், சஞ்சய் ராவத்திற்கு எதிராக சாட்சி அளித்த அவரின் முன்னாள் தொழில் கூட்டாளியான சுவப்னா பட்கர் என்ற பெண்ணின் வாக்குமூலம் சேர்க்கப்பட்டு உள்ளது.
அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சஞ்சய் ராவத் குடும்பத்தினர் பெயரில் தொடங்கப்பட்ட ஷெல் நிறுவனங்கள் மூலம் கணக்கில் வராத பணத்தை கையாண்டார். சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் தயாரிப்பு நிறுவனம் தாக்கரே என்ற பெயரில் படத்தை வெளியிட்டது. அந்த திரைப்பட நிறுவனம் மூலம் கணக்கில் வராத பணத்தை படம் தயாரிக்க சஞ்சய் ராவத் பயன்படுத்தினார்.
கடந்த 2015-ல் நான் 'பால்கடு' என்ற படத்தை தயாரித்தேன். அந்த படத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் லாபத்தை சஞ்சய் ராவத் என்னிடம் இருந்து அபகரித்தார்.
அலிபாக்கில் ரூ.9 முதல் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை, ரூ.51 லட்சம் என குறைந்த மதிப்பு காட்டி ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கினார். 2008 முதல் 2014 வரை 2 முறை சாம்னா அலுவலகத்தில் பத்ரா சால் வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரவின் ராவத்தின் ஊழியர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் சஞ்சய் ராவத்திற்கு பணம் கொடுத்தனர்.
எனக்கு தெரிந்தவரை சஞ்சய் ராவத் கூறுவதன் பேரில் தான் பிரவின் ராவத் செயல்பட்டார். அவர் மாதந்தோறும் ரூ.2 லட்சத்தை சஞ்சய் ராவத்துக்கு கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






