டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரிப்பு

டாலருக்கு நிகரான நேற்றைய ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக இருந்தது.ரூபாயின் மதிப்பு இன்று 9 காசுகள் அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாய்
இந்திய ரூபாய்
Published on

மும்பை:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடைசியாக கடந்த 24-ம் தேதி 30 காசுகள் சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் 58 காசுகள் வீழ்ச்சியடைந்தது. அதன்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக சரிந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும்.

கடந்த 4 நாட்களில் 193 காசுகள் சரிந்திருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.58 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com