என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பூஜா ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ரூ.2,27,205 மாற்றப்படுவதை தடுத்து பணத்தை மீட்டனர்.

    மும்பை புறநகர் அந்தேரியில் வசிப்பவர் பூஜா ஷா. 49 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் புட் டெலிவரி ஆப் மூலம் இனிப்பு ஆர்டர் செய்துள்ளார்.

    இதற்காக ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பண பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது. இதனால், பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணைக் கண்டுபிடித்து போன் செய்து தொடர்புக் கொண்டார்.

    பண பரிவர்த்தனை ஆகவில்லை என கடைக்காரரிடம் கூறியதை அடுத்து, பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் கார்டு மற்றும் ஓடிபி விவரங்களை பெற்றுள்ளார்.

    பூஜா தனது விவரங்களை கொடுத்த அடுத்த நொடியில், அவரது கணக்கில் இருந்து ரூ.2.4 லட்சம் எடுத்து மோசடி செய்துள்ளனர். தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பூஜா ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ரூ.2,27,205 மாற்றப்படுவதை தடுத்து பணத்தை மீட்டனர்.

    • பாட்டிலில் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது என கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களை கைது செய்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்ணாடி பாட்டிலில் பட்டாசுகளை வைத்து வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவாஜி நகர் பரேக் காம்பவுண்டு அருகில் திறந்த வெளியில் 12 வயது சிறுவன் ஒருவன், கண்ணாடி பாட்டிலுக்குள் பட்டாசுகளை வைத்து வெடித்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த சுனில் நாயுடு (வயது 21) என்ற வாலிபர், சிறுவனிடம் சென்று இப்படி பாட்டிலில் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அந்த சிறுவனுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் சேர, வாக்குவாதம் முற்றியது. சிறுவர்கள் சேர்ந்து சுனில் நாயுடுவை தாக்கி உள்ளனர். 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த சுனில் நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். ஒரு சிறுவனை தேடி வருகின்றனர்.

    • புனே நகரில் பெய்த கனமழையால் மக்கள் நரக வேதனை அனுபவித்தனர்.
    • இதற்காக புனே மக்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இந்த மழையால் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. புனே மாவட்டத்திலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக புனே நகரில் உள்ள மகர்பாடா பகுதியில் 11.6 செ.மீ. மழையும், சிவாஜிநகர் பகுதியில் 10.4 செ.மீ. மழையும் பெய்தது. புனே நகர மக்களுக்கு இந்த மழை நரக வேதனையை கொடுத்தது.

    இந்நிலையில், புனே மாவட்ட பொறுப்பு மந்திரியான சந்திரகாந்த் பாட்டீல் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், புனே நகர் மற்றும் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் பட்ட வேதனைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரிவான திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.

    • நிரவ் மோடியின் 39 சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது.
    • 39 சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நிரவ் மோடியின் 39 சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த 39 சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.

    • மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    • மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டுள்ளன.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியேயான அழைப்பில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என போலீசாருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்துள்ளது. இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தனர்.

    மும்பையில் 2008-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் இன்னும் ஒரு சில நாட்களில் வரவுள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
    • இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

    தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    இதற்கிடையே, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தனது மூன்று நாள் இந்தியா பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் குட்டெரெஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எடை உள்ள கோழி முட்டையை பொறுத்தவரை 162 கிராம் எடை உள்ளது.
    • பஞ்சாப்பில் உள்ள ஒரு கோழியால் இடப்பட்டது. தற்போது 210 கிராம் எடை உள்ள இந்த முட்டையில் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கோலாப்பூர்:

    பொதுவாக கோழி முட்டைகள் 54 முதல் 100 கிராம் வரை இருக்கும். சில அரிதான சந்தர்ப்பங்களில் முட்டைகள் 140 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கோழி 210 கிராம் எடையில் முட்டை இட்டுள்ளது. அம்மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள தால்சாண்டே கிராமத்தில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் உள்ள ஹைலைன் டபிள்யூ-80 இனத்தை சேர்ந்த ஒரு கோழி 210 கிராம் எடையுள்ள முட்டையிட்டுள்ளது.

    இது கோழி இடும் முட்டைகளில் நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது. இதுவரை லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எடை உள்ள கோழி முட்டையை பொறுத்தவரை 162 கிராம் எடை உள்ளது. இது பஞ்சாப்பில் உள்ள ஒரு கோழியால் இடப்பட்டது. தற்போது 210 கிராம் எடை உள்ள இந்த முட்டையில் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து கோழிப்பண்ணையின் உரிமையாளர் திலீப்சவான் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எனது பண்ணையில் ராட்சத முட்டையை பார்த்தேன். இந்த முட்டை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நான் கடந்த 40 வருடங்களாக கோழி வியாபாரம் செய்து வருகிறேன். ஆனால் இவளவு பெரிய முட்டையை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும்
    • இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.

    2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார் ஆனால் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட போட்டி தொடரை நடுநிலையான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • அந்தேரி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது.
    • இந்த விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

    மும்பை:

    அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என பா.ஜ.க. துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.

    இதற்கிடையே, அந்தேரி கிழக்கு தொகுதியில் நிறுத்தி இருந்த வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த முர்ஜி பட்டேல் அதை திரும்ப பெற்றார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு இருப்பது அவசியமாகும். இதுபோன்ற நல்ல கலாச்சாரம் பரவ நவநிர்மாண் சேனா எப்போதும் ஆதரவாக இருக்கும். எனது கோரிக்கைக்கு செவி கொடுத்தற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    • அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

    மும்பை:

    ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடாது. எனவே நீங்களும் இடைத்தேர்தலில் ருதுஜா லட்கேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மறைந்த ரமேஷ் லட்கேவின் அரசியல் பயணம், வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • தானே ரெயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர், மாணவியை மானபங்கம் செய்தார்.
    • போலீசார் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.

    தானே :

    தானே ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை 6.45 மணியளவில் 21 வயது கல்லூரி மாணவி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், மாணவியை மானபங்கம் செய்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி உதவி கேட்டு சத்தம் போட்டார். அப்போது அருகில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார்.

    எனினும் மாணவி டிரைவரின் சட்டை காலரை பிடித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் மாணவியை தர, தர வென இழுத்து கொண்டு ஆட்டோவுக்கு சென்றார். ஆனாலும் மாணவி டிரைவரை விடவில்லை.

    இதையடுத்து அவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, மாணவியை இழுத்து கொண்டே சிறிது தூரம் ஓட்டினார். ஒரு கட்டத்தில் அவர் மாணவியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். இந்தநிலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் ஓடிச்சென்று மாணவிக்கு உதவினர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்து, ஆட்டோவில் இழுத்து சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து மாணவியை மானபங்கம் செய்து ஆட்டோவில் இழுத்து சென்ற டிரைவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

    • உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
    • நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன.

    மும்பை :

    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி நடந்தது. அதில், கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசிய உரை, நேற்று வெளியிடப்பட்டது. அதில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-

    கலவையான அறிகுறிகள் தென்பட்டாலும், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.

    அதையும் மீறி, நடப்பு நிதிஆண்டில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×