search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழியிட்ட முட்டையின் எடை 210 கிராம்- இந்தியாவிலேயே மிகப்பெரியது
    X

    கோழியிட்ட முட்டையின் எடை 210 கிராம்- இந்தியாவிலேயே மிகப்பெரியது

    • லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எடை உள்ள கோழி முட்டையை பொறுத்தவரை 162 கிராம் எடை உள்ளது.
    • பஞ்சாப்பில் உள்ள ஒரு கோழியால் இடப்பட்டது. தற்போது 210 கிராம் எடை உள்ள இந்த முட்டையில் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கோலாப்பூர்:

    பொதுவாக கோழி முட்டைகள் 54 முதல் 100 கிராம் வரை இருக்கும். சில அரிதான சந்தர்ப்பங்களில் முட்டைகள் 140 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கோழி 210 கிராம் எடையில் முட்டை இட்டுள்ளது. அம்மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள தால்சாண்டே கிராமத்தில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் உள்ள ஹைலைன் டபிள்யூ-80 இனத்தை சேர்ந்த ஒரு கோழி 210 கிராம் எடையுள்ள முட்டையிட்டுள்ளது.

    இது கோழி இடும் முட்டைகளில் நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது. இதுவரை லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எடை உள்ள கோழி முட்டையை பொறுத்தவரை 162 கிராம் எடை உள்ளது. இது பஞ்சாப்பில் உள்ள ஒரு கோழியால் இடப்பட்டது. தற்போது 210 கிராம் எடை உள்ள இந்த முட்டையில் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து கோழிப்பண்ணையின் உரிமையாளர் திலீப்சவான் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எனது பண்ணையில் ராட்சத முட்டையை பார்த்தேன். இந்த முட்டை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நான் கடந்த 40 வருடங்களாக கோழி வியாபாரம் செய்து வருகிறேன். ஆனால் இவளவு பெரிய முட்டையை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என்றார்.

    Next Story
    ×