என் மலர்tooltip icon

    கேரளா

    • ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றினார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்ணை, கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி காப்பாற்றினார்.

    ரெயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த விரைவு ரெயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்டபோது இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை, அவ்வழியே சென்ற ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

    இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • வீடியோ காட்சிகள் சமூக லவைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள், சாலை மோசமான நிலையில் உள்ளதாலேயே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்.

    இன்றைய காலக்கட்டத்தில் சாலைகளில் பயணிப்போர் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல், குண்டு குழியுமான சாலை, விபத்து போன்றவற்றை காண நேரிடுகிறது. நாம் எவ்வளவுதான் கவனமாக சென்றாலும் நமக்கு முன்னாலும், பின்னாலும் வருபவர்களால் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.

    அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு வீடியோ காண்போரின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது.

    கேரளா மாநிலம் கண்ணூரில் சாலையில் பள்ளம் இருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த கார் நின்றதால், பின்னால் ஸ்கூட்டரில் வந்த நபரும் நிறுத்தினார். இதனை தொடர்ந்து பின்னால் வந்த கார் நின்றிருந்த ஸ்கூட்டர் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்டார். இதில் அந்நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் இரு சக்கர வாகனம் சேதம் அடைந்தது.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள், சாலை மோசமான நிலையில் உள்ளதாலேயே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர். 


    • செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
    • சபரிமலையின் புனிதத்தை மீறியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவிலில் சன்னிதானத்திற்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரி, காலில் காலணி அணிந்துகொண்டு நின்றார். இதனை செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள் சிலர், அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

    சபரிமலையின் புனிதத்தை மீறியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. அதுகுறித்து சபரிமலை காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜித் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் போலீஸ் அதிகாரி ராஜேஷ் சன்னிதான பகுதியில் காலணி அறிந்து நின்றது உறுதியானது. இதையடுத்து அவர் சபரிமலை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து முகாம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார்.

    • 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.
    • நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    கேரள நடிகர் சங்கமான 'AMMA' அமைப்புக்கான தேர்தல் இன்று கொச்சியில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார்.

    இதன் மூலம் 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.

    சமீபத்தில் நிதி ஆதாயத்திற்காக ஆபாசத் திரைப்படங்களில் நடித்ததாக ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இடைக் காலத் தடை வாங்கியிருந்தார்.

    இந்நிலையில் கேரள திரையுலகில் சர்ச்சைக்கு மத்தியில அவர் நடிகர் சங்கத் தலைவர் ஆகியுள்ளார். முன்னதாக நடிகர் மோகன்லால் அந்த பதவியில் இருந்தார்.

    கேரள திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது 'AMMA' சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுள்ளது.

    • கடை ஒன்றில் கேக்கிற்கு நாயின் பெயர் 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.
    • 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து எல்தோ என்ற தெருநாய் வாழ்ந்துள்ளது.

    டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த உத்தரவை வரவேற்றுள்ள நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கேரளா மாநிலம் கொழிவெட்டும்வெலி பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த எல்தோ என்ற தெருநாய்க்கு ஊர் மக்கள் சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக இந்த நாய்க்கு பாலில் செய்த கேக் மிகவும் பிடிக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கேக்கிற்கு 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.

    • உள்ளூர் வாட்சப் குழுக்களில் செயின் பற்றிய அடையாளங்களை போலீசார் பகிர்ந்திருந்தனர்.
    • நான் அதை கையில் இந்திய போதெல்லாம், எனக்கு ஒரு மோசமான உணர்வும், லேசான நடுக்கமும் ஏற்பட்டது.

    கேரளாவில் மேலபரம்பா பகுதியில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு கணவருடன் பஸ்ஸில் சென்ற கீதா என்ற பெண்ணின் தங்க செயின் திருடு போனது. இதுபற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதை தொடர்ந்து உள்ளூர் வாட்சப் குழுக்களில் செயின் பற்றிய அடையாளங்களை போலீசார் பகிர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் வாட்ஸப்பில் கீதாவின் செயின் அவரது திருமண நகை என்ற தகவலை அறிந்து மனம் வருந்திய திருடன் அதை திரும்ப ஒப்படைத்துள்ளான். கீதாவின் வீட்டின் முன் திருடன் அந்த நகையை வைத்து விட்டு ஒரு மன்னிப்பு கடிதத்தையும் விட்டுச் சென்றான்.

    திருடன் தனது கடிதத்தில், "இந்தச் செயின் என் வசம் வந்து ஒன்பது நாட்கள் ஆகின்றன. முதலில், நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நான் அதை கையில் இந்திய போதெல்லாம், எனக்கு ஒரு மோசமான உணர்வும், லேசான நடுக்கமும் ஏற்பட்டது.

    அதை என்ன செய்வது என்று நீண்ட நேரம் யோசித்தேன். பின்னர் அது திருமண நகை என்று ஒரு வாட்ஸ்அப் செய்தியைக் கவனித்தேன். வேறு யாரும் வருந்துவதை நான் விரும்பவில்லை.

    என் அடையாளத்தையும் நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. இவ்வளவு நாட்கள் அதை வைத்திருந்ததற்கும் உங்களுக்கு வலியை ஏற்படுத்தியதற்கும் மன்னிக்கவும்" என்று எழுதியுள்ளான். 

    • ரமீஸ், சோனாவை அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தினார்.
    • வழக்குப் பதிந்த போலீசார் ரமீஸை கைது விசாரித்து வருகின்றனர்.

    கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் 23 வயது ஆசிரியர் பயிற்சி மாணவி சோனா எல்டோஸ்.

    இவர், ரமீஸ் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் ரமீஸ் மற்றும் அவரது உறவினர்கள் சோனாவை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சோனா கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது தற்கொலை குறிப்பில், தனது காதலன் ரமீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் தன்னை மதம் மாற வற்புறுத்தியதாகவும், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோனாவின் தாய் கூறுகையில், சோனா ரமீஸை மிகவும் நேசித்தால் மத மாற சம்மதிதாகவும், ஆனால் ரமீஸ்க்கு ஒரு கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளது என தெரிந்ததும் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறினர்.

    ரமீஸ், சோனாவை அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தினார் என்றும் சோனாவின் தாய் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார் ரமீஸை கைது விசாரித்து வருகின்றனர். 

    • கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கஞ்சாவை பயன்படுத்த செய்திருக்கிறார்.
    • அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபின் அலெக்சாண்டர். இவருக்கும், கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. மகளுக்கு திருமணமாகி மகன் உள்ள நிலையில் அந்த பெண், பிரபினை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    அந்த பெண் தனது மகளுடன் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் தான் அந்த பெண்ணுக்கு பிரபினுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலன் என்ற பெயரில் பெண்ணின் வீட்டில் பிரபின் அடிக்கடி தங்கியிருந்திருக்கிறார்.

    அப்போது அந்த பெண்ணின் பேரனான 14 வயது சிறுவனுக்கு போதை பொருட்களை பயன்படுத்த செய்திருக்கிறார். 9-ம் வகுப்பு படித்து வந்த அவனுக்கு, முதலில் கஞ்சாவை கொடுத்திருக்கிறார். அதனை பயன்படுத்த மறுத்ததால் அடித்து துன்புறுத்தி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கஞ்சாவை பயன்படுத்த செய்திருக்கிறார்.

    பின்பு மதுபானம் மற்றும் ஹாஸிஸ் ஆயில் உள்ளிட்டவைகளையும் சிறுவனுக்கு கொடுத்து பயன்படுத்த செய்து போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி இருக்கிறார். போதைப்பொருட்கள் பயன்படுத்தியதால் தேவையில்லாமல் அதிகமாக கோபப்படுதல் உள்ளிட்ட செயல்களில் சிறுவன் ஈடுபட்டிருக்கிறான்.

    இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தாய் அவனிடம் கேட்டபோது, பாட்டியின் காதலன் வலுக்கட்டாயப்படுத்தி தனக்கு போதைப்பொருட்களை கொடுத்துவந்த தகவலை தெரிவித்தான். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், அதுபற்றி கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரபின் அலெக்சாண்டரை கைது செய்தனர். அவர் மீது சிறார் நீதி சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • புகார் உதவி பெட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாரந்தோறும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடுமையான புகார்களாக இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    கேரளாவில் சமீபகாலமாக குழந்தைகள் மீதான கொடூர தாக்குதல் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. குழந்தையின் ரத்த உறவுகளே இந்த தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றன. ஆலப்புழாவில் 9 வயது சிறுமி கன்னத்தில் காயத்துடன் பள்ளிக்கு வந்துள்ளார். இது பற்றி விசாரித்த போது அவளை, தந்தை மற்றும் மாற்றாந்தாய் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு சிறுமியின் தந்தை மற்றும் மாற்றாந்தாய் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளை பாதுகாக்க கேரள அரசு விரைவில் ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்கும் என கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.

    அதன்படி வீட்டில் உறவினர்களால் துன்புறுத்தப்படும் குழந்தைகள் ரகசிய புகார்களை அளிக்கும் வகையில் பள்ளிகளில் புகார் உதவி பெட்டிகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த பெட்டியில் புகார் தெரிவிக்கும் குழந்தைகள் தங்கள் பெயரை எழுத வேண்டிய அவசியம் இல்லை. புகார் உதவி பெட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாரந்தோறும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான புகார்களாக இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மாற்றாந்தாய் மற்றும் மாற்றாந்தந்தையின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    கடந்த 10 ஆண்டுகளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 43 ஆயிரத்து 474 என்றும், இதில் கொல்லப்பட்ட குழந்தைகள் 282 என்றும், இதில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 13 ஆயிரத்து 825 என்றும் வெளியான புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் பள்ளிகளில் புகார் உதவி பெட்டிகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
    • இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

    இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

    இந்த நடவடிக்கை நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

    இது கேரளத்தின் ஏற்றுமதியாளர்களை, குறிப்பாக கடல் உணவு, மசாலாப் பொருட்கள், தேயிலை மற்றும் தேங்காய் நார் ஏற்றுமதியாளர்களை கடுமையாகப் பாதிக்கும்.

    இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கிறது. இது பன்முகத்தன்மை என்ற கருத்து மீதான தாக்குதலும் கூட.

    நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும், நமது இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும், அழுத்தத்திற்கு அடிபணிய மறுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.   

    • தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
    • இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.

    இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.

    அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 கன்னியாஸ்திரிகளை சத்தீஷ்கர் மாநில போலீசார் கைது செய்தனர்.
    • இந்த சம்பவத்துக்கு கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.

    சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், சத்தீஷ்கர் மாநில நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர்.

    சுக்மான் மண்டாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நியாயமானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் உள்பட பலர் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

    இதனையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளை கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

    சத்தீஸ்கர் பாஜக அரசு கன்னியாஸ்திரிகளை கைது செய்த நிலையில், கேரளா பாஜக தலைவர் அவர்களை நேரில் சென்று வரவேற்ற இரட்டை நிலைப்பாட்டை சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    ×