என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு சசி தரூர் வாழ்த்து
    X

    கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 'பாஜக'வுக்கு சசி தரூர் வாழ்த்து

    • 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
    • திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் பாராட்ட விரும்புகிறேன்.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து திருவனந்தபுரம் எம்.பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.

    பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்றகாங்கிரசின் UDF -க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும், மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையும் ஆகும்.

    கடின உழைப்பு, ஒரு வலுவான செய்தி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அனைத்தும் 2020-ஐ விட மிகச் சிறந்த முடிவை அடைய உதவியுள்ளன.

    திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மேலும் நகர மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும். 45 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சிக்கு ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன், ஆனால் வாக்காளர்கள் இறுதியில் ஆட்சியமைப்பில் ஒரு தெளிவான மாற்றத்தை விரும்பிய மற்றொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனர்.

    அதுதான் ஜனநாயகத்தின் அழகு. ஒட்டுமொத்தமாக UDF-ஆக இருந்தாலும் சரி, அல்லது எனது தொகுதியில் பாஜக-வாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

    கேரளாவின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்!" என்று தெரிவித்துள்ளார். அணமைக் காலமாக சசி தரூர் பாஜக மற்றும் மோடியை புகழ்ந்து வருவது காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது.

    Next Story
    ×