என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local bodies election"

    • 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
    • பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்புரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-

    திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக- என்டிஏ கூட்டணி வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். கேரள மாநில மக்களின் விருப்பம், வளர்ச்சியை எங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம் போன்ற துடிப்பான நகரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. #KarnatakaCivicPoll
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தன்னை விட குறைவான இடங்களை பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவளித்தது. 

    இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக கர்நாடகம் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  

    29 மாநகராட்சிகள், 53 நகராட்சிகள் மற்றும் 23 நகர பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட 105 இடங்களுக்கு முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 36 லட்ச்ம வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் தற்போதுள்ள ஆட்சியில் இடம் பிடித்துள்ள கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிக்கும் நோடா பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KarnatakaCivicPoll
    ×