என் மலர்
இமாச்சல பிரதேசம்
- சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான106 வயது ஷியாம் சரண் நேகி காலமானார்.
- 2014ல் இமாச்சல பிரதேச தேர்தல் ஆணையம் நேகியை தேர்தல் விழிப்புணர்வுத் தூதராக அறிவித்தது.
தர்மசாலா:
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி (106), காலமானார். இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னௌர் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான கல்பாவில் நேற்று அவர் இயற்கை எய்தினார்.
கடல்மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கல்பா கிராமத்தில் 1951 அக்டோபர் 25-ம் தேதியன்று முதல் முதலில் நேகி பொதுத்தேர்தலில் வாக்களித்தார்.
கல்பா கிராமத்தை உள்ளடக்கிய அப்போதைய மண்டி- மகசு மக்களவைத் தொகுதியில் கடும் குளிர், பனிப்பொழிவு காரணமாக, முன்கூட்டியே முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் 1952 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. சியாம் சரண் நேகி அப்போது பள்ளி ஆசிரியராக இருந்த நிலையில், கல்பா கிராம வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாகச் சென்று தன் வாக்கைப் பதிவுசெய்தார். ஆனால், தன்னுடைய வாக்குதான் இந்தியாவின் முதல் வாக்கு என அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்போதிருந்து வாக்களிக்க மட்டும் நேகி தவறவே இல்லை.
2014-ம் ஆண்டில் இமாச்சலப்பிரதேச தேர்தல் ஆணையம், நேகியை தேர்தல் விழிப்புணர்வுத் தூதராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது
- காங்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்
- இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும் என பேச்சு
காங்ரா:
இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
இமாச்சல பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையாக சாடிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது என்றும, 63,000 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டிய பிரியங்கா, அதேபோன்று இமாச்சல பிரதேசத்திலும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.
- இமாச்சல பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்து வருகிறது.
- ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.
சிம்லா:
இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. 68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு கடந்த மாதம் 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது, பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து கட்சியிலும் கிரிமினல் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பா.ஜ.க சார்பில் 68 வேட்பாளர்களில் 12 பேரும், ஆம் ஆத்மியில் 12 பேரும், காங்கிரசில் 36 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 2 பேரும், கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் 7 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
இதில் 12 பேர் கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கியவர்களாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரும், கொலை வழக்குகளில் ஈடுபட்ட 3 பேரும், கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 3 பேரும் உள்ளனர்.
மொத்தம் 412 வேட்பாளர்களில் 94 பேர் 23 சதவீதத்தினர் கிரிமினல் வேட்பாளர்களாக உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 338 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 61 வேட்பாளர்கள் 18 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்து வருகிறது.
ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.
ஆம் ஆத்மியும் தற்போது மற்ற கட்சிகளுக்கு இணையாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
- எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் இரையாக வேண்டாம்.
- காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது.
சிம்லா :
இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
லட்சக்கணக்கானோரை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது, நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா அரசுகள்தான். பிரதமர் மோடியின் முயற்சியால், இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
வேறு எந்த நாட்டிலும், எந்த தலைவரும் இத்தகைய சாதனையை செய்தது இல்லை. அதனால், உலக மக்கள் மோடியை பாராட்டுகிறார்கள். முன்பு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்த பொருட்களை எல்லாம், இப்போது நாமே தயாரிக்கிறோம்.
மோடி, களைப்பின்றி நீண்ட நேரம் பணியாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர். இத்தகையவர்தான் நாட்டையும், மாநிலங்களையும் ஆள தேவைப்படுகிறார். 370-வது சட்டப்பிரிவை நீக்கி, காஷ்மீர் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு சேர்த்தோம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2024-ம் ஆண்டு அக்கோவில் திறக்கப்படும். பிரதமர் மோடி பக்திமான் என்பதால், வாரணாசி, கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ஆகியவற்றில் உள்ள இந்து கோவில்களை மறுசீரமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது. பொய்யான முழக்கங்களை எழுப்பி, மக்களை முட்டாளாக்க பார்க்கும். தேர்தல் முடிந்தவுடன் தனது வாக்குறுதிகளை மறந்து விடும். பா.ஜனதா மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும்.
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதற்கு எதிர்காலம் இல்லை. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இந்திய அரசியல் அரங்கில் இருந்தே காங்கிரஸ் வெளியேறி விடும். ராகுல்காந்தி, தனது பாதயாத்திரையை காரணமாக வைத்து, இங்கு வருவதை தவிர்த்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் இரையாக வேண்டாம். உங்கள் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவர்களை நிராகரியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது.
- ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு அது இடிந்து விழுந்துள்ளது.
போபால்:
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததற்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு குறித்து பிரதமர் மோடி குறை கூறியிருந்தார். தற்போது மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.
27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது, ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போதே நர்மதா கால்வாய் உடைந்து விழுந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சிம்லா, ஹமீர்பூர், ஹங்ரா, மண்டி ஆகிய நகரங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
- உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
சிம்லா:
இமாச்சலபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான பா.ஜனதா கட்சியில் பலரும் போட்டி வேட்பாளராக களம் இறங்கி இருப்பதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இமாச்சல பிரதேச்தில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தொடர்ந்து அவர் இமாச்சல பிரதேசத்துக்கு செல்ல இருக்கிறார்.
அங்கு சிம்லா, ஹமீர்பூர், ஹங்ரா, மண்டி ஆகிய நகரங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளார். மேலும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
மத்திய மந்திரிகளும் இமாச்சல பிரதேசத்துக்கு செல்ல உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா ஏற்கனவே தீவிர பிரசாரத்தில் உள்ளார்.
ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கெஜ்ரிவாலும் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதனால் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.
- இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும்.
- டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 46 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சில தினங்களுக்கு முன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 17 பேர் கொண்ட 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
- இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
- முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் ஆம் ஆத்மி என 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முதல் கட்டமாக 46 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 62 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் மகன் சுனில் சர்மா மாண்டி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்படவில்லை.
- பெரும் தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே பாஜக முன்னுரிமை அளிக்கிறது.
- ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து ஒப்புதல் வழங்கப்படும்.
சிம்லா:
இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சோலான் பகுதியில் உள்ள தோடோ மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ்பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து ஒப்புதல் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம்.
மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு பணத்தை வழங்குவது இல்லை. பெரும் தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே பாஜக முன்னுரிமை அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அரசுப் பதவிகள் காலியாக உள்ளன. இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, சோலன் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்.
- 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளின் வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.
- சம்பா பகுதியில் 2 நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கிராம சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் விரைவு ரெயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரெயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
வந்தே பாரத் ரெயிலின் 3-வது ரெயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும், மராட்டியத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் 4-வது ரெயில் சேவையை இமாச்சல பிரதேச மாநிலம் உனா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதேபோல அவர் உனாவில் உள்ள ஐ.ஐ.டி.யை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதோடு மருத்துவ பூங்காவுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 4-வது வந்தே
பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிறகு உனாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இமாச்சல பிரதேசத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பரிசுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மருந்து, கல்வி மற்றும் ரெயில்வே திட்டங்கள் பிராந்தியத்தின் முன்னேற்றத்தால் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மக்களின் தேவைகளை எனது அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளின் வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இதற்கு முந்தைய அரசுகள் மக்களுக்கு வசதிகளை வழங்கவில்லை.
மத்திய அரசும், மாநில அரசும் (இரட்டை என்ஜின் அரசு) மருந்து பூங்காவில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இமாச்சல பிரதேசத்தில் மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி நடைபெறும்போது மருந்துகள் மலிவாகிவிடும்.
இவ்வாறு மோடி பேசினார்.
பின்னர் சம்பா பகுதியில் 2 நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கிராம சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 5 ஆண்டில் பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் சென்றது இது 9-வது முறையாகும்.
வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ள குஜராத், இமாச்சலபிர தேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குறுகிய காலத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
ஹிமாச்சல பிரதேசம் உனே மாவட்டத்தில் உள்ள பெகுபெலா ஹெலிபேடுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வரவேற்றார்.
இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டின் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உனா ரெயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது வெறும் 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். ரெயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், வசதியான மற்றும் வேகமான பயண முறையை வழங்கவும் உதவும்.
புதிய வந்தே பாரத் ரெயில் முந்தைய ரெயில்களுடன் ஒப்பிடும்போது இது மேம்பட்ட பதிப்பாகும். இது மிகவும் இலகுவானது மற்றும் குறுகிய காலத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலை சந்திக்கும் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உனா மற்றும் சம்பா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
- இந்தியா கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தது.
- இந்த ஒப்பந்தங்களில் பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளன.
சிம்லா :
இமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பணிகளை ஆளும் பா.ஜனதா ஏற்கனவே தொடங்கி உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து இந்த பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக தனது சொந்த மாவட்டமான பிலாஸ்பூரில் நேற்று உள் விளையாட்டு அரங்கு ஒன்றை திறந்துவைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார்.
தனது உரையில் அவர் கூறியதாவது:-
இந்தியா கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தது. இந்த ஒப்பந்தங்களில் பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளன.
போபர்ஸ் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் ஊழல் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
ஆனால் இன்று உலகுக்கு இந்தியா ஆயுதங்களை விற்பனை செய்கிறது. தற்போது ஆயுத விற்பனை 6 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதன் மூலம் ஆயுத கொள்முதலில் நிகழ்ந்து வந்த ஊழல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்.
இதைப்போல பிலாஸ்பூர் எய்ம்ஸ் கட்டுமானப்பணி 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கட்டுமானப்பணிகள் நடைபெறாத போதும், ஆஸ்பத்திரி பணிகள் வேகமாக நடந்து முடிந்துள்ளன.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.
இதைப்போல மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும், மாநிலத்தில் ஜெய்ராம் தாக்கூர் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பணிகளை பட்டியலிட்ட அவர், இமாசல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா அரசு தொடர வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.






