மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன், செல்பி எடுத்து மகிழ்ந்த காங்கிரஸ் மகளிர் அணி

பிரியங்கா காந்தியை வரவேற்க காத்திருந்தவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக தகவல்.
நிர்மலா சீதாராமனுடன்,காங்கிரஸ் மகளிர் அணியினர்
நிர்மலா சீதாராமனுடன்,காங்கிரஸ் மகளிர் அணியினர்
Published on

சிம்லா:

இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவுடைந்தது. இந்நிலையில் கடைசிநாள் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்க தலைநகர் சிம்லாவில் உள்ள மால் சாலையில் காங்கிரஸ் மகளிர் அணியினர் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காரில் சென்றார். அவரை கண்ட காங்கிரஸ் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் கை அசைத்தனர். இதை கண்ட நிதி மந்திரி, காரை நிறுத்தி சொல்லி கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதை சமூக வளைதளங்களில் அவர்கள் பகிர்ந்தனர். நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக இமாச்சல் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com