search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himachal Pradesh Assembly Election"

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா உள்ளது. அதே போல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆர்வத்துடன் இருக்கிறது.

    ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பத்திரமாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தனி பஸ்கள் மூலம் அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் பூபேந்திர சிங்கோடா ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த பணிகளை காங்கிரஸ் மேலிடம் அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார். இன்று பிற்பகல் அவர் சிம்லா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் இம்முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதே சமயம் இந்த வரலாற்றை முறியடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் பாரதிய ஜனதா உள்ளது. இதனால் இமாச்சல பிரசேத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • இமாச்சல பிரதேச வாக்காளர்கள் ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும்.
    • முதல் முறையாக ஓட்டு போட்டுள்ள இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மக்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். இமாச்சல பிரதேச வாக்காளர்கள் ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும். முதல் முறையாக ஓட்டு போட்டுள்ள இளம் வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்துக்காக இமாச்சல பிரதேச மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வேலை வாய்ப்புக்கான வாக்களிப்பாகவும் இருக்கும். மக்கள் அதிகளவில் வந்து தங்களது மதிப்பு மிக்க வாக்குகளை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர்.
    • முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது.

    ஷிம்லா:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது.

    அதன்படி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

    மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது.

    இது தவிர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மற்றவை 45 தொகுயில் நிற்கின்றன. சுயேட்சைகள் 99 பேர் போட்டியிடுகிறார்கள். 412 வேட்பாளர்களில் 24 பேர் பெண்கள் ஆவார்கள்.

    இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது.

    மொத்தம் 7,881 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 157 வாக்குப்பதிவு மையம் பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடியதாகும். கடந்த தேர்தலை விட கூடுதலாக 356 வாக்கு சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை நீண்ட காலமாக ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரசும் போராடி வருகிறது.

    • இமாசல பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    சுல்லா

    இமாசல பிரதேசத்தில் நாளை (சனிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தன.

    இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    காங்ரா மாவட்டத்தின் சுல்லாவில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தனது பிரசாரத்தில் அவர் கூறியதாவது:-

    மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழலை கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் இணைந்த இரட்டை என்ஜின் அரசு, ஐ.ஐ.டி., எய்ம்ஸ், மருத்துவக்கல்லூரிகள் என மாநிலத்தில் வளர்ச்சிக்கான அனைத்து வழிகளையும் திறந்துள்ளன. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது.

    பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீதான சர்ஜிகல் தாக்குதல், அயோத்தியில் ராமர் கோவில், புனித தலங்கள் சீரமைப்பு என ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூலம் காங்கிரஸ் செய்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) எனும் தவறை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு சரி செய்து விட்டார்.

    தற்போது காஷ்மீர் நம்முடையதா இல்லையா? அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதா, இல்லையா?

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் நமது வீரர்களின் தலையை பாகிஸ்தான் துண்டித்து வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் அது குறித்த பேச்சு கூட இல்லை. உரி, புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

    ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், ஒரு எதிர்மறை டுவீட்டை போட்டு விடுவார். ஆனால் மக்கள் அவர்களுக்கு செவிமடுப்பதில்லை.

    பரம்பரை அரசியல் செய்து வரும் ஒரு கட்சியில் (காங்கிரஸ்) கடின உழைப்பை கொடுக்கும் மக்களுக்கு இடமில்லை. அந்த கட்சியில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், புகழ்பெற்ற குடும்பத்தில் நீங்கள் பிறக்க வேண்டும்.

    நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ராஜா-ராணி காலம் ஓய்ந்து விட்டது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
    • பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    புதுடெல்லி:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

    காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அவர் நாளையும், 9-ந்தேதியும் அங்கு பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்த வரை எந்த கட்சியும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. அங்கு பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களம் இறங்குகிறது.

    • எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் இரையாக வேண்டாம்.
    • காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது.

    சிம்லா :

    இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார்.

    தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

    லட்சக்கணக்கானோரை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது, நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா அரசுகள்தான். பிரதமர் மோடியின் முயற்சியால், இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேறு எந்த நாட்டிலும், எந்த தலைவரும் இத்தகைய சாதனையை செய்தது இல்லை. அதனால், உலக மக்கள் மோடியை பாராட்டுகிறார்கள். முன்பு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்த பொருட்களை எல்லாம், இப்போது நாமே தயாரிக்கிறோம்.

    மோடி, களைப்பின்றி நீண்ட நேரம் பணியாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர். இத்தகையவர்தான் நாட்டையும், மாநிலங்களையும் ஆள தேவைப்படுகிறார். 370-வது சட்டப்பிரிவை நீக்கி, காஷ்மீர் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு சேர்த்தோம்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2024-ம் ஆண்டு அக்கோவில் திறக்கப்படும். பிரதமர் மோடி பக்திமான் என்பதால், வாரணாசி, கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ஆகியவற்றில் உள்ள இந்து கோவில்களை மறுசீரமைத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது. பொய்யான முழக்கங்களை எழுப்பி, மக்களை முட்டாளாக்க பார்க்கும். தேர்தல் முடிந்தவுடன் தனது வாக்குறுதிகளை மறந்து விடும். பா.ஜனதா மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

    காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதற்கு எதிர்காலம் இல்லை. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இந்திய அரசியல் அரங்கில் இருந்தே காங்கிரஸ் வெளியேறி விடும். ராகுல்காந்தி, தனது பாதயாத்திரையை காரணமாக வைத்து, இங்கு வருவதை தவிர்த்து வருகிறார்.

    எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் இரையாக வேண்டாம். உங்கள் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவர்களை நிராகரியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×