என் மலர்
நீங்கள் தேடியது "இமாசல் தேர்தல்"
- பா.ஜ.க. ஆளும் இமாச்சலில் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- ஆட்சியை தக்கவைக்க பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
சிம்லா:
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க. தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினர்.
காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரியங்கா கடந்த மாதம் 31-ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். பூபேஷ் பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் உள்பட 26 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் விலகல் இமாச்சலில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.






