என் மலர்tooltip icon

    குஜராத்

    • தானாக முன்வந்து விதிகளைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினர்.
    • பலர் இது நகரங்களில் போக்குவரத்து குழப்பத்தை மோசமாக்க வழிவகுக்கும் என்று பலர் கூறியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விதிகள் குறித்து குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி பட்டியலிட்டார். அப்போது அவர், அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார். மேலும் இது முதல்வர் பூபேந்திர படேலின் மக்களுக்கு ஆதரவான முடிவு என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், " யாரேனும் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக குஜராத் போலீசார் பூக்கள் கொடுத்து விதிகளை மீற வேண்டாம் என்று வற்புறுத்துவார்கள் என்றும் கூறினார்.

    மேலும், "தீபாவளி என்பது விளக்குகளின் திருவிழா. மேலும் ரங்கோலி வண்ணங்கள், ஏராளமான இனிப்புகள், விளக்குகள் மற்றும் பட்டாசுகள் என உற்சாகத்துடன் வருகிறது.

    இந்தச் சந்தர்ப்பத்தில், முதல்வர் பூபேந்திர படேலின் மக்களுக்கு ஆதரவான முடிவு இது" என்று சங்கவி கூறினார்.

    இவரது இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றனர். மேலும் இது, தானாக முன்வந்து விதிகளைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினர். இருப்பினும், இது நகரங்களில் போக்குவரத்து குழப்பத்தை மோசமாக்க வழிவகுக்கும் என்று பலர் கூறியுள்ளனர்.

    • குஜராத் சென்ற ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

    தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய பயணத்தின் முதல் நாளான நேற்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர், குஜராத் சென்ற ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், குஜராத் மாநில கேவாடியாவில் பிரதமர் மோடியுடன் ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சந்தித்து பேசினார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை, கேவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

    • அன்டோனியோ குட்டெரஸ் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
    • இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.

    அகமதாபாத்:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்திய பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில், குஜராத் சென்றுள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • கண்காட்சி மையத்தில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது.

    குஜராத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பிராசரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக் கைகளில் ஏற்கனவே இறங்கி விட்டன.

    இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் சென்றுள்ளார். அவர் ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    அதன்படி, இன்று காலை 9.45 மணிக்கு காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே வடக்கு குஜராத்தில் உள்ள தீசாவில் புதிய விமான தளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த புதிய விமான தளம் அமைக்கப்படுகிறது.

    பின்னர், நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் முதல் ராணுவ கண்காட்சி இதுவாகும். வடக்கு குஜராத்தில் இருக்கும் தீசாவில் உள்ள புதிய விமானப்படை தளம் நாட்டின் பாதுகாப்பிற்கான சிறந்த மையமாக உருவாகும்.

    இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்ய முடியாத மேலும் 101 பொருட்களின் பட்டியலை பாதுகாப்பு படைகள் வெளியிடும்.

    இதன் மூலம் 411 பாதுகாப்பு தொடர்பான பொருட்களை உள்நாட்டில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். இது இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்ட பயனாளிகள் இந்த சலுகையை பெறுவார்கள்.
    • இயற்கை எரிவாயுவுக்கு 10 சதவீத வாட் வரியை குறைக்க முடிவு

    ஆமதாபாத்:

    குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது.

    இது குறித்து பேசிய அம்மாநில கல்வி அமைச்சர் ஜித்து வகானி, 38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்றார். ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்ட பயனாளிகள் இந்த சலுகையை பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயுவுக்கு (பி.என்.ஜி.) 10 சதவீத வாட் வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார். இது மக்களுக்கு அரசு அளிக்கும் தீபாவளி பரிசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் மாறிவிட்டது.
    • நீதி கிடைப்பதில் தாமதம் என்பது நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும்.

    அகமதாபாத்:

    அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு இன்று காலை குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் தொடங்கியது.

    இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

    மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் மாறிவிட்டது. காணொலி மூலம் விசாரணை இ-பைலிங் போன்ற சட்ட சேவைகளில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்த தொழில் நுட்பங்களை 5 ஜி சேவைகள் மேலும் வலுப்படுத்தும். குஜராத்தில் மாலை நேர கோர்ட்டுகளை தொடங்கினோம். இதில் சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

    இதனால் கோர்ட்டுகள் மீதான சுமை குறைகிறது. சட்டம்-ஒழுங்கு, சமூக முன்னேற்றத்துடன் ஒத்துப்போகும் போது நீதி எளிதாக இருப்பதை உறுதி செய்கிறது.

    பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவது நமக்கு முக்கியம். அப்போது தான் இந்தியா உண்மையான அர்த்தத்தில் முன்னேற முடியும். காலாவதியான சமூக சட்டங்கள் ஒரே மாதிரியாக மாறினால் அவை முன்னேற்றத்துக்கு தடைகள் என்பதை நாம் அறிந்திருப்பதால் நமது சமூகம் அதிலிருந்து விடுபட்டுள்ளது.

    சட்டங்கள் எளிமையான மற்றும் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும். இதனால் அதில் எழுதப்பட்டிருப்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும்.

    நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாகும். நீதி கிடைப்பதில் தாமதம் என்பது நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இம்மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பழமையான, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றுதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், மாநில சட்ட முறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் நடைபெறும்.

    • குஜராத் மைந்தர், நீண்ட காலம் முதல்வராக இருந்து, இரண்டாது முறையாக பிரதமராகி உள்ளார்.
    • சுயலாபத்திற்காக என்னை சந்திக்காத மக்களுக்கு மனதார மரியாதை செலுத்துகிறேன்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற மோடி கல்வி வளாக திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    நான் இங்கு வந்த போது மக்கள் அளித்த வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் தவித்து வந்த மக்கள் தற்போது சுயமுயற்சியில் முன்னேறி வருவது சிறப்பானதாகும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கல்விக்கென ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். அவர்களின் இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் வலிமை சிறப்பு மிக்கதாகும். அவர்களின் பாதை சரியானது. அதன் மூலம், அவர்கள் முன்னேற்றம் அடைவது உறுதி. மக்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பெருமைகுரியது.

    இந்த மண்ணின் மைந்தர் ஒருவர் குஜராத்தின் முதல்வராக நீண்ட காலமும், தற்போது நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையும் இருந்து வருகிறார்.அவருடைய நீண்ட ஆட்சிக் காலத்தில் இந்த பகுதியை சார்ந்த மக்கள் தங்களது சுய லாபத்துக்காக ஒருமுறை கூட அவரை சந்தித்தது கிடையாது. அவர்களுக்கு மனதார மரியாதை செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.
    • சர்தார் படேலின் கனவுத் திட்டமான நர்மதா நதி அணையை முடக்க முயன்றதாக பிரதமர் குற்றச்சாட்டு

    பரூச்:

    குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரண்டாம் நாளான இன்று பரூச் மாவட்டத்தில் மொத்த மருந்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நகர்ப்புற நக்சல்கள் தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டு குஜராத்தில் நுழைய முயற்சிப்பதாகவும், ஆனால் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க அரசு அனுமதிக்காது என்றும் ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாக தாக்கினார்.

    'நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர். அவர்கள் தங்கள் உடைகளை மாற்றியுள்ளனர். அவர்கள் நம் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நம் இளம் தலைமுறையை அழிக்க விடமாட்டோம். நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் ஏஜெண்டுகள். அவர்களிடம் குஜராத் தலை குனியாது, குஜராத் அவர்களை அழித்துவிடும்' என பிரதமர் மோடி பேசினார்.

    மேலும், சர்தார் படேலின் கனவுத் திட்டமான நர்மதா நதி அணையை நகர்ப்புற நக்சல்கள் முடக்க முயன்றதாகவும், பட்டேலின் கனவை நனவாக்க 40-50 ஆண்டுகள் நீதிமன்றங்களில் கழித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

    • 2-வது நாள் பயணமாக இன்று பருஜ் மாவட்டத்தில் உள்ள அமோத்தில் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • ஜாம்புஷர் நகரில் மருந்து உற்பத்தி, சேமிப்புக்கான கட்டிடத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமம் சூரிய மின்சக்தி கிராமமாக மாறியுள்ளது.

    இந்த கிராமத்தில் நேற்று நடந்த விழாவில் ரூ.3,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அங்குள்ள மோதேஸ்வரி மாதா கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

    2-வது நாள் பயணமாக இன்று பருஜ் மாவட்டத்தில் உள்ள அமோத்தில் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஜாம்புஷர் நகரில் மருந்து உற்பத்தி, சேமிப்புக்கான கட்டிடத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரசாயன துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் தாஹேஜ்ஜில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல தொழில் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான அடிக்கல்நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து அகமாதாபாத் செல்லும் பிரதமர் மோடி அங்கு ஏழை மாணவர்களுக்கான கல்விக்கூடமான மோடி ஷைசானிக் சன்குல்லை திறந்து வைக்க உள்ளார்.

    மேலும் அனந்த் அகமாதாபாத் மாவட்டத்தில் உள்ள வல்லப்வித்யாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாலையில் ஜாம்நகரில் ரூ.1,460 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்கள் நீர்பாசனம், மின்சாரம், நீர்வளங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

    • கெஜ்ரிவால் இந்து மத எதிர்ப்பாளர் என குஜராத்தில் பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
    • பொது கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால் தாம் அனுமன் பக்தன் என்று விளக்கம் அளித்தார்.

    தரம்பூர்:

    குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த மாநில தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் கெஜ்ரிவால் இந்து மத எதிர்ப்பாளர் என குஜராத்தின் பல நகரங்களில் பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

    தரம்பூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் இது குறித்து பேசுகையில், தாம் அனுமன் பக்தன் என்றும், ஜென்மாஷ்டமி நாளில் பிறந்ததால், வீட்டில் கிருஷ்ணா என்பது தனது செல்லப்பெயர் என்றும் விளக்கம் அளித்தார். மேலும் அவர் பேசுகையில், குஜராத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த பல நிர்வாகிகளும், தொண்டர்களும் தன்னை சந்தித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ரகசியமாக ஆதரவளிப்பதாக தெரிவித்ததாகவும், பாஜக தோல்வியை சந்திக்க அவர்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

    பாஜகவை தோற்கடிக்க விரும்பும் அனைத்து பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஆம் ஆத்மிக்கு ரகசியமாக உழைக்குமாறு கூற விரும்புவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். குஜராத் காங்கிரஸ் தொண்டர்கள் பயப்படத் தேவையில்லை என்றும், அந்த கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 

    • மோதேரா கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் அமைந்துள்ளது.
    • இது 1026-27 காலகட்டத்தில் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் சென்றார். மோதேராவில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் ரூ. 3,900 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது மோதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்மூலம் மோதேரா 24 மணி நேரமும் சூரிய சக்தி மின்சாரம் பெறும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 காலகட்டத்தில் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.

    மோதேராவில் உள்ள சூரிய கோவிலுக்கு தொல்லியல் துறையால் பாதுக்காப்படும் 3-டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த 3-டி திட்டத்தை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இதன்மூலம் சூரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதன் வரலாற்றை அறிய உதவும்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோதேரா இப்போது சூரியகிராமம் என்று அழைக்கப்படும். மோதேராவில் உள்ள மக்கள் சூரிய சக்தியைப் பயன்படுத்திய பிறகு மின்சாரக் கட்டணத்தில் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சேமிப்பார்கள். இப்போது பொதுமக்கள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இனி நாம் மின்சாரத்திற்கு பணம் செலுத்த மாட்டோம், ஆனால் அதை விற்று அதிலிருந்து சம்பாதிக்கலாம் என பெருமிதமுடன் குறிப்பிட்டார்.

    • பதக்கப் பட்டியலில் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடம்.
    • 22 தங்கம் பதக்கங்களுடன் தமிழகத்திற்கு 5வது இடம்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.

    தேசிய விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில், சர்வீசஸ் அணி இதுவரை தங்கத்தை 45 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 30 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் உள்பட அரியானா இரண்டாவது இடத்திலும், 28 தங்கம், 28 வெள்ளி, 54 வெண்கல பதக்கத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.

    ×