என் மலர்tooltip icon

    டெல்லி

    • பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
    • பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.

    புதுடெல்லி:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பாரீசில் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது.

    இதையடுத்து, பதக்கம் வென்ற இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

     

    இதற்கிடையே, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்து கவுரவித்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர் சென்றனர். அவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை மறுநாள் (செப்.14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. 

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இது குறித்த பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றார். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.



    "சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், பின்தொடர்வோருடனும் உள்ளன, ஓம் சாந்தி," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

    • சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், " சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். நமது நீண்ட உரையாடல்களை மிஸ் செய்வேன்.

    இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்," சீதாராம் யெச்சூரி காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரை நான் அறிவேன். அவருடைய மறைவு தேசிய அரசியலுக்கு இழப்பாகும்.

    அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    "திமுக தலைவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர் சீதாராம் யெச்சூரி. தமிழ் சிறப்பாக பேச கூடியவர் சீதாராம் யெச்சூரி. என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    "சீதாராம் யெச்சூரி மறைவு வருத்தம் அளிக்கிறது" என்றார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். 

    கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 

    • குழு பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று தெரிவித்துள்ளனர்.
    • அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவு.

    தமிழகம் - கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு விவகாரம் பல ஆண்டுகளாக பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் தண்ணீர் கேட்பதும், கர்நாடகா மறுப்பதும் வாடிக்கையாகி கொண்டிருக்கிறது.

    பின்னர், டெல்லி சென்று காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றிடம் முறையிட்டு நீதி பெற வேண்டிய சூழல் உள்ளது. இவர்கள் பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை மாதந்தோறும் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தி உள்ளது.

    அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

    • தலைமை நீதிபதி மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.
    • மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய். சந்திரசூட். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார். அத்துடன் பூஜை செய்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்தநிலையில் சமூக ஆர்வலரான பிரசாந்த் பூஷன், பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்குச் சென்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் கூறியதாவது:-

    தலைமை நீதிபதி சந்திரசூட் மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. தலைமை நீதிபதி பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுவும் மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த சந்திப்பு குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால்தான் நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். எனது பார்வையில் இந்த சந்திப்பு நீதிபதிகளுக்கான விதிமுறையை மீறியதாகவும்.

    இவ்வாறு பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவை விட்டு வெளியேறிய அவரை லண்டன் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்து உள்ளனர்.
    • வங்கி டெபாசிட்டுகள், நிலம் மற்றும் கட்டிடம் போன்றவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இந்த மெகா மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்தியாவை விட்டு வெளியேறிய அவரை லண்டன் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்து உள்ளனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    நிரவ் மோடி மீதான விசாரணைகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், அவரது சொத்துகளை அமலாக்கத்துறை அடுத்தடுத்து முடக்கி வருகிறது. அந்தவகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள ரூ.2,596 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் சொத்துகளை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருந்தது.

    மேலும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.692.90 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. மேலும் கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் அதன் கூட்டமைப்பு வங்கிகள் ரூ.1,052.42 கோடி மதிப்பிலான சொத்துகளை எடுத்துக்கொண்டன.

    இந்த நிலையில் நிரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ.29.75 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி இருக்கிறது. நிதி மோசடி சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்து உள்ளது. இதில் வங்கி டெபாசிட்டுகள், நிலம் மற்றும் கட்டிடம் போன்றவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜை நடைபெற்றது.
    • இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் இன்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    • கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
    • ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.

    தேசிய காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா" (AB PM-JAY) திட்டத்தின் கீழ் ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "இந்த ஒப்புதலுடன், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் AB PM-JAY திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியான மூத்த குடிமக்களுக்கு AB PM திட்டத்தின் கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும்," என்று அரசு சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே AB PM-JAY திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), மற்றும் ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஏற்கனவே உள்ள காப்பீடு திட்டம் அல்லது புதிய காப்பீடு திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

    மத்திய அரசு அறிவிக்கையின் படி AB PM-JAY திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.

    • ராகுல் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வந்து விட்டன.
    • பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது.

    புதுடெல்லி:

    பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்தார்.

    இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துக்களை தெரிவிப்பதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகி விட்டது. ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தேச விரோத மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுத் தளங்களில் இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகள் செய்வதாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தி எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து உணர்வுகளைப் புண்படுத்துகிறார்.

    பிராந்தியவாதம், மதம் மற்றும் மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரசின் அரசியலை ராகுல் காந்தியின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

    நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வந்து விட்டன.

    பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    ×