தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும்- கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்

குழு பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று தெரிவித்துள்ளனர்.அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவு.
தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும்- கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்
Published on

தமிழகம் - கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு விவகாரம் பல ஆண்டுகளாக பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் தண்ணீர் கேட்பதும், கர்நாடகா மறுப்பதும் வாடிக்கையாகி கொண்டிருக்கிறது.

பின்னர், டெல்லி சென்று காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றிடம் முறையிட்டு நீதி பெற வேண்டிய சூழல் உள்ளது. இவர்கள் பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை மாதந்தோறும் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தி உள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com