என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • தேர்தலில் முதல்வர் வேட்பாளரின் பெயரை பா.ஜ.க. அறிவிக்காமலே போட்டியிட்டது
    • 1990ல் அரசியலில் நுழைந்த சாய், நீண்ட கால அரசியல் அனுபவம் உடையவர்

    கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17 தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரசும் நேருக்கு நேர் தீவிரமாக களமிறங்கின.

    தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. இதில் பா.ஜ.க., பதிவான வாக்குகளில் 46.27 சதவீதம் பெற்று 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையை பெற்றது.

    தேர்தல் அறிக்கையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் சாதனைகளும் மட்டுமே தேர்தலில் பா.ஜ.க.வினரால் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளரின் பெயர் அப்போது அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம் வெளியான முடிவுகளில் கட்சி அபாரமாக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் வேட்பாளர் குறித்து பல யூகங்கள் நிலவி வந்தன.

    இன்று சத்தீஸ்கர் மாநில ராய்பூரில், 54 எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் ராமன் சிங்கிற்கு நெருக்கமானவரும், பா.ஜ.க.வின் தேசிய செயல் கமிட்டியின் உறுப்பினருமான 59 வயதான விஷ்ணு தியோ சாய் (Vishnu Deo Sai), முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1990ல் அரசியலில் ஆர்வத்துடன் நுழைந்தவர் சாய்.

    2006ல் பா.ஜ.க.வின் சத்தீஸ்கர் மாநில தலைமை பொறுப்பை ஏற்ற சாய், நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர்.

    2023 நவம்பர் தேர்தலில் சாய், சத்தீஸ்கரில் உள்ள குன்குரி (Kunkuri) தொகுதியில் 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்ற சாய், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட சுமார் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.

    2014ல் பிரதமராக மோடி பதவியேற்ற பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவையில், சாய் எக்கு துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.
    • சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ராய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட் சியை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.

    இந்நிலையில் சத்தீஸ்கர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, சர் பானந்தா சோனவால் மற்றும் பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட 54 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று புதிய முதல்வரை தேர்வு செய்கிறார்கள். ஒருமித்த கருத்துடன் முதல்-மந்திரி தேர்வு நடைபெறும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராமன்சிங், ரேணுகாசிங், அருண்சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 35 இடங்களில் பின்தங்கியுள்ளது.
    • பா.ஜனதா 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் தலா 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. தொடர்ந்து பா.ஜனதா முன்னிலை பெற்றதுடன், ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களையும் தாண்டி முன்னணி பெற்றது. பா.ஜனதா 54 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்தது.

    ராய்ப்பூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் அதிரடியாக ஆடிய இந்தியா 20 ஓவரில் 174 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும். 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

    முன்னதாக, பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளைப் பெற்றிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா தொடர் வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    • மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
    • வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

    சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா டுடே: பாஜக 36-40, காங்கிரஸ் 40-50

    இந்தியா டிவி: பாஜக 30-40, காங்கிரஸ் 46-56

    ஆஜ் தக்: பாஜக 36-46, காங்கிரஸ் 40-50

    ஜன் டிவி பாஜக: 34-45 காங்கிரஸ் 42-53

    இதையடுத்து, சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலைப் பிடித்துள்ளது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 38.22 சதவீத வாக்குகள் பதிவு.
    • பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு 55.31 சதவீத வாக்குகள் பதிவு.

    சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    அதன்படி இன்று பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 38.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, சத்தீஸ்கரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு 55.31 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் 2ம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது.

    • காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.
    • காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, "பா.ஜனதா என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா என்றால் வளர்ச்சிக்கான அரசு, பெண்களுக்கான அதிகாரம், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பவர் என்று அர்த்தம். காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்" என்றார்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாளைமறுநாள் (நவம்பர் 17-ந்தேதி) 70 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

    • தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது.
    • காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரை கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 7-ந்தேதி முடிவடைந்தது. 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இதனையொட்டி பிரதமர் மோடி சத்தீஸ்கரில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அவர் இன்று மதியம் முங்கெலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாகவது:-

    தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து சில பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்னிடம் சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் அவர் தொகுதியிலேயே தோற்கடிக்கபடுவார் என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை கடந்த பல மாதங்களாக அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர்.

    ஓ.பி.சி. சமூகத்தினரை அவர்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது. அம்பேத்கரின் அரசியலுக்கு முடிவு கட்ட சதி செய்தது காங்கிரஸ். வாக்கு வங்கிற்காகவும், சமரசம் செய்து கொள்வதற்காகவும் காங்கிரஸ் எதை வேண்டுமென்றாலும் செய்யும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
    • பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளராக ED செயல்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பைகுந்த்பூர் மற்றும் கத்கோரா பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    பைகுந்த்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்கே, பா.ஜ.க., பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தொகுதியை மாற்ற முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்பட நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து கத்கோராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளர்களாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன.

    கடந்த செவ்வாய் கிழமை மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இம்மாத இறுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது
    • மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

    முதல் கட்டமாக நடந்த தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.

    இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் உள்ளவை ஆகும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் இடையே கடும் போட்டி உள்ளது. முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
    • காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2-வது கட்டத்தேர்தல் 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் சர்குஜா பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.

    பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா?

    நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள்.

    காங்கிரஸ் ஆட்சியில் மனித கடத்தல், போதைப்பொருள் தொழில் சர்குஜா பகுதியில் அதிகமாக இருந்தது.

    காங்கிரசின் சமரசம் செய்துகொள்ளும் கொள்கையால், சத்தீஸ்கரின் சர்குஜா பகுதியில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினமாகிவிட்டது.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஐந்து ஆண்டுகளில் நக்சலிசம் பெருமளவு பின்வாங்கியுள்ளது- பூபேஷ் பாகெல்
    • பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்- ராமன் சிங்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஃஎப் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பா.ஜனதா தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறுகையில் ''முதற்கட்ட தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 14 இடங்களில் வெற்றிபெறும். இரண்டு கட்ட தேர்தலும் சிறப்பாக அமையும். முழு மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்'' என்றார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கூறுகையில் ''கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் முயற்சியால் நக்சலிசம்

    பெருமளவு பின்வாங்கியுள்ளது. இதனால் கிராமத்திற்கு உள்ளே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் மக்கள் தானாக முன்வந்து வாக்களிப்பார்கள். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

    ×