என் மலர்
பீகார்
- ராமதயாலு ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசை பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
- 7 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முசாபர்பூர்:
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் ராமதயாலு ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசை பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுமிகள் உடல் கருகி பலியானார்கள். அவர்களுக்கு 3 முதல் 12 வயதாகிறது. மேலும் 7 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
- மகேந்திர பாண்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பீகார் மாநிலம் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர பாண்டே. 40 வயதான அவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்திருக்கிறார்.
இந்த கடனை அந்த பெண் நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த பெண்ணின் 11 வயது மகளை அவர் திருமணம் செய்துக் கொண்டார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். தனது 11 வயது மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
மகேந்திர பாண்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.
- ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.
லக்னோ:
சமீப காலங்களாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுபவமில்லாத கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள்.
இவர்களை போன்று அனுபவம் இல்லாதவர்களுக்கு பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக் கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 4-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.39.58 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தான் இந்த புதுமையான பள்ளிக் கூடம் பற்றிய தகவல் கிடைத்தது.
கைதான ஏ.டி.எம். கொள்ளையன் நீரஜ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.
வெளி மாநிலங்களை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை சுதிர் மிஸ்ரா அளித்துள்ளார். இதனால் அவர் ஏ.டி.எம். பாபா என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஏ.டி.எம். அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன் பிறகு 15 நிமிடங்களுக்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்து உள்ளார். பயிற்சி முடித்தவர்களுக்கு 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகிறார்கள்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் கொள்ளையர்களுக்கு பயிற்சி அளித்த ஏ.டி.எம். பாபா சுதிர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவை சந்தித்தார்.
- தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.
பாட்னா:
வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை நிதிஷ்குமார் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் கொல்கத்தா செல்கிறார். அங்கு அவர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மதியம் 2 மணியளவில் சந்திக்க உள்ளார். பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மணல் மாபியா கும்பல் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அதிகாரிகளை தாக்கியது.
- 2 பெண் அதிகாரிகளை அந்த கும்பல் இழுத்து சென்று பயங்கரமாக தாக்கியது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாட்னா அருகே உள்ள பிஹ்டாவில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாகவும், மணல் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பெண்கள் அதிகாரிகள் தலைமையில் குழு அங்கு சென்று சட்ட விரோதமாக மணல் அகற்றுவதை தடுத்து அப்போது ஒரு கும்பல் பெண் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கியது. 2 பெண் அதிகாரிகளை அந்த கும்பல் இழுத்து சென்று பயங்கரமாக தாக்கியது.
மணல் மாபியா கும்பல் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அதிகாரிகளை தாக்கியது.
பெண் அதிகாரியை இழுத்து சென்று தாக்கிய வீடியோவாக வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். மணல் மாபியா கும்பலிடம் இருந்து அதிகாரிகளை போலீசார் மீட்டனர். தாக்குதலால் பெண் அதிகாரிகளான அமியா குமாரி. பர்ஹீன் மற்றும் மாவட்ட சுரங்க அதிகாரி கவுரவ் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- போலி மதுபானம் அருந்திய நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி பிரச்சனையை எழுப்பியது.
பாட்னா:
மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மதுவிற்பனை நடைபெறுகிறது. அத்துடன் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர்ப்பலியும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி பகுதியில் போலி மதுபானம் அருந்திய நபர்களில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக சட்டசபையில் கடும் விவாதம் நடைபெற்றது. சரண் மாவட்டத்தில் 40 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி இந்த பிரச்சனையை எழுப்பியது. அப்போது எதிர்க்கட்சி மீது கோபத்தை வெளிப்படுத்திய முதல்வர் நிதிஷ் குமார், பிற மாநிலங்களில்கூட போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கூறினார்.
- ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாட்னா:
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
இதேபோல் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக பீகார் மாநிலம் பாட்னாவிலும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஏப்ரல் 12ம் தேதி (இன்று) ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. சூரத் நீதிமன்ற வழக்கில் ராகுல் காந்தியின் சட்டக்குழுவினர் பிசியாக இருப்பதால் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதை உறுதி செய்யும்படி வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிரியா குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மனுதாரர் தரப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது' என்றார்.
- பீகாரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் எனக்கு கவலை அளிக்கிறது.
- நிதிஷ் குமார் பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை.
நவடா :
பீகாரின் நவடா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹிசுவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை கடுமையாக தாக்கி பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இருவரும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பயங்கரவாதம் வளர உதவியது. அதே நேரத்தில் பிரதமர் மோடி காஷ்மீரில் 370-வது அரசியல் சட்டப்பிரிவை ரத்து செய்தார்.
சாதி வெறியை பரப்பும் நிதிஷ் குமார் மற்றும் காட்டாட்சியின் முன்னோடி லாலு பிரசாத் ஆகியோருடன் பா.ஜனதா ஒருபோதும் கைகோர்க்க முடியாது. பீகார் முதல்-மந்திரிக்கு பா.ஜனதாவின் கதவுகள் எப்போதும் முடியே இருக்கும்.
பிரதமராகும் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நிதிஷ் குமார் கடந்த ஆண்டு லாலு பிரசாத் யாதவுடன் கரம் கோர்த்து, பா.ஜனதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
ஆனால் 2024-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கான இடம் காலியில்லை. நிதிஷ் குமார் பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை.
பிரதமர் மோடியை, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்வு செய்ய நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டனர். இதைப்போல பீகார் மக்களும் மாநிலத்தின் 40 இடங்களையும் பா.ஜனதாவுக்கு வெற்றியை உறுதி செய்ய முடிவு செய்து விட்டனர்.
அது நடந்தவுடன், நிதிஷ் குமார் தனது முதல்-மந்திரி பதவியை துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைப்பதாக கொடுத்த வாக்குறுதியை திரும்பப் பெறுவார். ஏனெனில் அவரது பிரதமர் கனவு அப்போது நொறுங்கி இருக்கும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எதிர்த்து வந்தன. ஆனால் ஒரு நல்ல நாளில் பிரதமர் மோடி, வானுயர்ந்த அந்த கோவிலுக்கு அடிக்கல் நாட்டிவிட்டார்.
பீகாரில் நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகள் முடிவுக்கு வந்து இயல்புநிலை திரும்ப நான் பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக மாநில கவர்னரிடம் காலையில் நான் பேசியதற்கு ஐக்கிய ஜனதாதள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் கோபமடைந்தார். நான் ஏன் பீகாரைப்பற்றி கவலைப்படுகிறேன்? என்றும் கேட்டுள்ளார்.
நான் மத்திய உள்துறை மந்திரி. பீகாரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் எனக்கும் கவலை அளிக்கிறது.
நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி அரசு சாசரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டது.
மாநிலத்தில் 2025-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியமைத்தால், இந்த வன்முறையாளர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
இவ்வாறு உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
- நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது.
- குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்னா:
நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. ரோத்தாஸ் மாவட்டம் சசரம் பகுதியில் நடந்த ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவம் நிகழ்ந்தன.
அதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல நாலந்தா மாவட்டம் பீகார்ஷெரீப் பகுதியில் நடந்த ஊர்வலத் தின்போதும் மோதல் ஏற் பட்டது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து கலவரம் நடந்த 2 பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்ட னர். வன்முறை தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பீகார் வன்முறை சம்பவம் தொடர்பாகவும், தற்போதைய நிலவரம் குறித்தும் கவர்னரிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார்.
- இடப்பிரச்சினை காரணமாக இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
- கொலையில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சகர்சா:
பீகார் மாநிலத்தில் உள்ள சோகர்வா கிராம பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே இடப்பிரச்சினை காரணமாக நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் இந்த கைகலப்பு மோதலாக மாறியது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பிஜ்லிதேவி என்ற பெண் மற்றும் பிரபாஸ்குமார், நவல்குமார் ஆகிய 3 பேர் பலியாகினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பதட்டத்தை தணிக்க அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு சுசில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொலை தொடர்பாக இதுவரை 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மோதலுக்கான காரணம் மற்றும் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலையில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
- கலால் சட்டத்தின் கீழ் விதிகளை மீறியது தொடர்பாக 5.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மதுவிலக்கு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 74 சிறப்பு நீதிமன்றங்கள்.
பீகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு விதிக்கப்பட்டது. கலால் சட்டத்தின் கீழ், போதைப்பொருள் உற்பத்தி, மதுபானம் விநியோகம், போக்குவரத்து, சேகரிப்பு, சேமிப்பு, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் அல்லது வாங்குதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநில சட்டசபையில் இதுதொடர்பாக கேட்ட கேள்விக்கு கலால் துறை அமைச்சர் பதில் அளித்தார்.
இதுகுறித்து அம்மாநில கலால் துறை அமைச்சர் சுனில் குமார் கூறியதாவது:-
கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வரை, பீகார் தடை மற்றும் கலால் சட்டத்தின் கீழ் விதிகளை மீறியது தொடர்பாக 5.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், ஜனவரி 2023ம் ஆண்டு வரை மதுவிலக்கு சட்டத்தின் கீழ் மொத்தம் 7,49,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
தண்டனை விகிதம் 21.98% ஆகும். மதுவிலக்கு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 74 சிறப்பு நீதிமன்றங்கள் (கலால்) செயல்படத் தொடங்கியுள்ளன.
தரவுகளின்படி, பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1.54 கோடி லிட்டர் சட்டவிரோத வெளிநாட்டு மதுவும், 96.71 லட்சம் லிட்டர் நாட்டு மதுவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தகவல்.
- விபத்தை தொடர்ந்த நகரின் வான்வழிப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டது. மேலே சென்ற சிறிது நேரத்தில் திடீரென இறங்கிய கிளைடர் குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், விமானி மற்றும் 14 வயது பயணி காயமடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட கிளைடர் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும், உரிய விசாரணைக்கு பின்னரே காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த பயணி பாட்னாவைச் சேர்ந்தவர். அவர் தன்பாத் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். விமானத்தில் இருந்து நகரத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட சிறுவன் கிளைடர் சவாரி செய்துள்ளான். இந்த கிளைடர் சேவை ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இதில், விமானி மற்றும் ஒரு பயணி என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
தன்பாத் நகர மக்கள் பொழுதுபோக்கிற்காக மேலிருந்து நகரத்தை பார்த்து மகிழும் வகையில் இந்த கிளைடர் சேவை தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, நகரின் வான்வழிப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.






