என் மலர்
ஆந்திர பிரதேசம்
- நிலத்திற்கு கொண்டு சென்று மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வதை போல் சாஸ்திர சம்பிரதாயபடி நாய்க்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.
- கடந்த 4 ஆண்டுகளாக நாய் எங்கள் குடும்பத்தினர் மீது காட்டிய அன்பு விலை மதிப்பற்றது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பெடபாலகாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணா. இவர் கடந்த 4 ஆண்டுகளாக செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த நாய் அவரது குடும்பத்தினருடன் மிகுந்த பாசமாக நடந்து கொண்டது.
இந்த நிலையில் வெங்கடகிருஷ்ணா வளர்த்து வந்த நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து வெங்கடகிருஷ்ணன் நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாய் இறந்தது.
இதையடுத்து இறந்த நாயை வீட்டிற்கு வெளியே வைத்து மாலை அணிவித்து வெங்கடகிருஷ்ணா குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாயை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
வழி நெடுகிலும் மலர் தூவிய படி கொண்டு சென்றனர். அவரது நிலத்திற்கு கொண்டு சென்று மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வதை போல் சாஸ்திர சம்பிரதாயபடி நாய்க்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக நாய் எங்கள் குடும்பத்தினர் மீது காட்டிய அன்பு விலை மதிப்பற்றது. அதன் மீது நாங்கள் வைத்திருந்த அன்பை வெளிக்காட்டவே இவ்வாறு இறுதி சடங்கு செய்தோம் என்றார்.
- தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் ரவுடித்தனம் நிச்சயமாக ஒடுக்கப்படும்.
- நான் 1978ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மங்கள கிரியில் தெலுங்கு தேசம் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் செயல்களுக்கு வக்கீல்கள் இரையாக வேண்டாம். இந்த அரசின் அட்டூழியங்கள் வட்டியுடன் திருப்பித்தரப்படும். இந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வக்கீல்கள் சமூகம் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும்.
இந்த அரசைப் போன்ற சர்வாதிகார தலைமை ஆங்கிலேயர்களிடம் கூட இல்லை. தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் ரவுடித்தனம் நிச்சயமாக ஒடுக்கப்படும். இந்த அரசின் பொல்லாத கொள்கைகளுக்கு எதிராக அரசியல் போருடன் சட்டப் போராட்டத்தையும் நடத்த வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.
அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் 47 வக்கீல்களுக்கு சீட் வழங்கியது. நான் 1978ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன்.
ஆனால் மாநிலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை ஒருபோதும் கண்டதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- சுங்க சாவடியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தில்லேஸ்வரராவ், கிருஷ்ணாராவ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பணத்தை வீசி சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தற்போது எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து நரசன்னபேட்டை வழியாக மடபம் சுங்கசாவடி நோக்கி இரவில் ஆட்டோ வேகமாக வந்தது.
அப்போது சுங்க சாவடியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தில்லேஸ்வரராவ், கிருஷ்ணாராவ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதனைக் கண்ட ஆட்டோவில் இருந்தவர்கள் தங்களிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசிவிட்டு ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனைக் கண்ட சுங்க சாவடி ஊழியர்கள் ஆட்டோவை பிடிக்க துரத்திச் சென்றனர்.
ஆனால் ஆட்டோ வேகமாக சென்று இருட்டில் மறைந்தது.500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறி கிடப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று பணத்தை எடுத்தனர்.
இதனைக் கண்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் சாலையில் இருந்த பணத்தையும் வாகன ஓட்டிகள் எடுத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.88 ஆயிரம் இருந்தது.
இதையடுத்து பணத்தை ஸ்ரீ காகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பணத்தை வீசி சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
- பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பல்வேறு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் டைம் ஸ்லாட் முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 டிக்கெட்டுகளும், ஸ்ரீவாணி அறக்கட்டளை ஆயிரம் டிக்கெட்டுகளும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்காரம், சுப்ரபாதம் சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாததால் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய சிரமம் அடைகின்றனர். இதனால் குறுக்கு வழியில் தரிசன டிக்கெட்டுகளை பெற திருப்பதியில் உள்ள புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.
அங்குள்ள புரோக்கர்கள் போலி இணைய தளத்தை உருவாக்கி தரிசன டிக்கெட்களை போலியாக தயார் செய்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில் போலி இணையதளத்தை உருவாக்கிய நபர் ஒருவர் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் ரூ 10 ஆயிரத்து 500க்கு கிடைக்கும் என அவரது செல்போன் என்னுடன் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்தார். தேவஸ்தான அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிய வந்தது.இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் போலி இணையதளத்தை முடக்கினர். மேலும் வாட்ஸ் அப்பில் தரிசன டிக்கெட் கிடைக்கும் என பதிவு செய்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் சில பக்தர்கள் புரோக்கர்களை நாடி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்ததாக பல புரோக்கர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 77,522 பேர் தரிசனம் செய்தனர்.32,390 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- 17-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
- 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் சிறு புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகள், சிறு புத்தகங்களை வெளியிட்டார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 19-ந்தேதி பிரம்மோற்சவத்துக்காக அங்குரார்ப்பணம் நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கின்றன.
இதேபோல் ராமநவமி விழா 30-ந்தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரையிலும், தெப்போற்சவம் ஏப்ரல் மாதம் 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரையிலும் நடக்கிறது.
- ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.
- கடந்த மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டண சேவை டிக்கெட் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசன டிக்கெட் உட்பட அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும்.
ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.
மலையேறி நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசிப்பவர்களில், சுமார் 60 சதவீதம் பேர் ஏற்கனவே விஐபி பிரேக், தர்ம தரிசன டோக்கன், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் அல்லது, ஏதாவது ஒரு ஆர்ஜித சேவா டிக்கெட் போன்றவற்றை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர்.
இவர்களில் வெறும் 40 சதவீதம் பேர்தான் எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் மலையேறி திருமலைக்கு வருகின்றனர். ஆதலால், எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் வருவோருக்கு மட்டும் திவ்ய தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அதற்காக புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ரூ. 144 கோடியே 29 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் பின்தங்கிய பகுதிகள், மீனவ கிராமங்கள் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 3000 கோவில்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அறநிலையத்துறை பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கோவில்கள் கட்டப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் இதுபோல் தேவையான ஒத்துழைப்பு கிடைத்தால் அங்கும் கோவில்கள் கட்டப்படும். தற்போது தமிழ்நாட்டில் 3 கோவில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோவில்கள் கட்டப்பட்ட திட்டம்.
- நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் பணி திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில அறநிலையத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் அரசியல் சார்பற்ற இந்து தர்ம பிரச்சார குழு ஏற்பாட்டில் இந்த கோவில் கட்டும் பணிகள் நடைபெறுவதாக ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியது குறிப்பிடத்தக்கது.
- இந்த தெப்போற்சவம் 5 நாட்கள் நடக்கிறது.
- நாதநீராஞ்ச மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும். வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
முதல் நாளான நேற்றிரவு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருடன் ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தெப்பல் உற்சவத்தில் சாமி வலம் வருவதை காண தெப்பக்குளத்தை சுற்றி தரிசனத்துக்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டபடி வணங்கினர்.
இன்று இரவு 2-வது நாள் கிருஷ்ணர், ராதா ருக்மணியுடனும், நாளை 3-வது நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் தெப்பல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
6-ந் தேதி 4-வது நாள் 5 சுற்றுக்களும், 7-ந் தேதி 5-வது நாள் 7 சுற்றுக்களும் ஏழுமலையான் உற்சவம் நடக்கிறது.
- அரசியல் செல்வாக்கு காரணமாக ஹபீஸ் பாஷா மீது போலீசார் சாதாரண வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
- அரசியல் கட்சி பிரமுகர்கள் ஹபீஸ் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹபீஸ் பாஷா. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தினார்.
இதனால் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஹபீஸ் பாஷாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் சிறுமி ஆஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அரசியல் செல்வாக்கு காரணமாக ஹபீஸ் பாஷா மீது போலீசார் சாதாரண வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
இந்தநிலையில் சிறுமிக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் களமிறங்கினர்.
அவர்கள் ஹபீஸ் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் ஹபீஸ் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து ஹபிஷ்பாஷா சென்னைக்கு தப்பி ஓடினார். போலீசார் அவரை தேடி வந்தனர்.
கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ஹபீஸ் பாஷாவை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஹபீஸ் பாஷாவை சஞ்சல்குடா ஜெயிலில் அடைத்தனர்.
- மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு கிருஷ்ணா நதிக்கரையில் மது அருந்தினர்.
- மதுபோதையில் கிருஷ்ணா நதியில் இறங்கி 3 பேரும் குளித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் காலேசா அலியாஸ் (வயது 30). இவர் விஜயவாடாவில் ஓட்டல் நடத்தி வந்தார்.
இவரது நண்பர்கள் அஜித் சிங் நகரை சேர்ந்த ரஹிம் பாஷா (30), கஸ்தூரிபா பேட்டையை சேர்ந்த கிரண் (37). காலேசா அலியாஸ் புதிய கார் ஒன்றை வாங்கினார்.
புதிய கார் வாங்கியதற்கு பார்ட்டி கொடுப்பதாக கூறி தனது நண்பர்களை காரில் அழைத்துக் கொண்டு பெனமலூர் மாவட்டம், சோட வரத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு கிருஷ்ணா நதிக்கரையில் மது அருந்தினர். பின்னர் மது போதையில் கிருஷ்ணா நதியில் இறங்கி 3 பேரும் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 3 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து தண்ணீரில் மூழ்கிய காலேசா அலியாஸ், ரஹீம் பாஷா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். கிரண் உடலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.114.29 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 34 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 682 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக் கட்டாக்களில் 24 ஆயிரத்து 291 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 32 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது.
- பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பேருந்தில் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.






