என் மலர்tooltip icon

    இந்தியா

    இறந்த நாய் உடலை ஊர்வலமாக கொண்டு சென்று இறுதி சடங்கு
    X

    இறந்த நாய்க்கு மலர் மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்த காட்சி.

    இறந்த நாய் உடலை ஊர்வலமாக கொண்டு சென்று இறுதி சடங்கு

    • நிலத்திற்கு கொண்டு சென்று மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வதை போல் சாஸ்திர சம்பிரதாயபடி நாய்க்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.
    • கடந்த 4 ஆண்டுகளாக நாய் எங்கள் குடும்பத்தினர் மீது காட்டிய அன்பு விலை மதிப்பற்றது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பெடபாலகாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணா. இவர் கடந்த 4 ஆண்டுகளாக செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த நாய் அவரது குடும்பத்தினருடன் மிகுந்த பாசமாக நடந்து கொண்டது.

    இந்த நிலையில் வெங்கடகிருஷ்ணா வளர்த்து வந்த நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து வெங்கடகிருஷ்ணன் நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாய் இறந்தது.

    இதையடுத்து இறந்த நாயை வீட்டிற்கு வெளியே வைத்து மாலை அணிவித்து வெங்கடகிருஷ்ணா குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாயை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    வழி நெடுகிலும் மலர் தூவிய படி கொண்டு சென்றனர். அவரது நிலத்திற்கு கொண்டு சென்று மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வதை போல் சாஸ்திர சம்பிரதாயபடி நாய்க்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக நாய் எங்கள் குடும்பத்தினர் மீது காட்டிய அன்பு விலை மதிப்பற்றது. அதன் மீது நாங்கள் வைத்திருந்த அன்பை வெளிக்காட்டவே இவ்வாறு இறுதி சடங்கு செய்தோம் என்றார்.

    Next Story
    ×