என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
    • கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    நந்தியாலா:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆத்ம கூறு, கும்மடாபுரம் கிராம வனப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு 4 பெண் புலி குட்டிகள் இருந்தன.

    இதனை வனத்துறை அதிகாரிகள் ஆத்மா கூறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    குட்டி புலிகளை தாய் புலியுடன் சேர்க்கும் பணி முழு வீச்சில் நடந்தது. கும்மடாபுரம் நல்லமல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் சுமார் 70 டிராப் கேமராக்கள் உதவியுடன் 300 பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் தாய் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக தாய் புலியை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தாயை விட்டு பிரிந்து உள்ளதால் புலிக்குட்டிகள் சரிவர உணவு அருந்தாமல் சோர்வாக காணப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 4 புலி குட்டிகளையும் நேற்று இரவு திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

    மேலும் கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    விரைவில் தாய் புலியை கண்டுபிடித்து அதனுடன் குட்டிகள் ஒன்று சேர்க்கப்படும் என தெரிவித்தனர்.

    • திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி சேவை செய்ய தினமும் ஆயிரக்கணக்கான ஆண், பெண், பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.
    • ஸ்ரீ வாரி சேவைக்கு எந்த நேரம் ஒதுக்கினாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி சேவை செய்ய தினமும் ஆயிரக்கணக்கான ஆண், பெண், பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

    ஏழுமலையானுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண் பெண் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படும் ஆன்லைனில் தங்களது ஆதார் அட்டையை பதிவு செய்ய வேண்டும்.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கான தேதியை சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு தெரிவிக்கின்றனர். ஸ்ரீவாரி சேவை செய்ய தேவஸ்தானம் அனுமதிக்கும் பக்தர்கள் தொடர்ந்து 7 நாட்கள் திருமலையில் தங்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்குவதற்கு இடம் உணவு வழங்கப்படும். சேவை செய்ய வரும் பக்தர்கள் வெள்ளை நிற வேட்டி, சட்டை அல்லது வெள்ளை நிற பேண்ட் எடுத்து வர வேண்டும்.

    ஸ்ரீ வாரி சேவகர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், லட்டு பிரசாதம் பிடித்தல், டைரி காலண்டர் விற்பனை செய்தல், பக்தர்கள் தரிசன வரிசையை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் எந்த நேரம் ஒதுக்கினாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். கட்டாயம் ஒரு வாரம் தங்கி இருக்க வேண்டும்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் 16-ந் தேதி வரை சென்னையை சேர்ந்த ஆண் சேவகர்கள் மட்டும் ஒரு வாரம் தங்கி ஏழுமலையானுக்கு சேவை செய்ய 30 முதல் 40 பேருக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.

    ஸ்ரீவாரி சேவை செய்ய விருப்பம் உள்ள 60 வயதிற்கு உட்பட்ட ஆண் பக்தர்கள் மட்டும் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆன்லைனில் தங்களது ஆதார் அட்டையை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

    • ஜகைய்யா பேட்டை செருவு பஜாரை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் ஷில்பாவுடன் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டில் 4 குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்.
    • மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் ஜக்கையா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலம், பிரமணி மாவட்டம் பாலம் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் இதுவரை 17 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருந்தது. போலீசார் விசாரணையில் 2 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் காணாமல் போனதாக தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் சங்கீதா ஆனந்த். இவர் மும்பையை சேர்ந்த ருக்சன் சந்த் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டை தானம் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார்.

    சங்கீதா தனது கணவரை சந்திக்க அடிக்கடி மும்பைக்கு சென்று வந்தார். அப்போது மகாராஷ்டிராவில் குழந்தைகளை கடத்தி விற்கும் சுல்தானா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுல்தானா கடத்தி வரப்படும் குழந்தைகளை விற்க இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி சங்கீதா தனக்கு தெரிந்த விஜயவாடாவை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பகடலாவை சேர்ந்த ஷிரவாணியை சந்தித்து குழந்தை இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டு கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

    இதேபோல் ஜகைய்யா பேட்டை செருவு பஜாரை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் ஷில்பாவுடன் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டில் 4 குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர். வட்சவாய், தூக்கு பாலத்தில் 2 குழந்தைகளும், ஜக்கைய்யா பேட்டையில் ஒரு குழந்தையும், விசன்னானா பேட்டையில் ஒரு குழந்தையும், ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அதன்படி சரண், சையத் சுபானி, சயத் அயன் ஆகிய 3 குழந்தைகள் மீட்கப்பட்டது.

    மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் ஜக்கையா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டதால் வழக்கு பதிவு செய்து பின்னர் குழந்தைகளை ஒப்படைக்கப்படும் என போலீசார் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து குழந்தைகள் விற்பனை செய்ததாக தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் ஷிரவாணி, ஷில்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த 5-ந்தேதி ஒரு சிறுவன் மற்றும் இரண்டு குழந்தைகள் அடையாளம் கண்டு மீட்கப்பட்டு மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மேலும் ஜக்கையா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கீதா, மும்பையை சேர்ந்த சுல்தானா ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • அருண் ராமச்சந்திர பிள்ளை கவிதாவின் பினாமியாக உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.
    • அமலாக்க துறை அதிகாரிகள் கோர்ட்டில் பல குற்றச்சாட்டுகளை அறிக்கையாக முன் வைத்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா. இவர் தற்போது எம்எல்சியாக உள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க பிரிவு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்கிய சவுத் குரூப் இன்டோஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் எம்எல்சி கவிதா சார்பில் அருண் பங்குதாரராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த வருமானம் ரூ.296 கோடியாக இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதில் சில தொகை அருண் ராமச்சந்திர பிள்ளையின் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் அருண் ராமச்சந்திர பிள்ளையிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தி இரவில் அவரை கைது செய்தனர்.

    நேற்று சிபிஐ அதிகாரிகள் அவரை டெல்லியின் ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அருண் ராமச்சந்திர பிள்ளை கவிதாவின் பினாமியாக உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

    மேலும் கோர்ட்டு அவரை ஒரு வாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

    இந்த விசாரணையின்போது அமலாக்க துறை அதிகாரிகள் கோர்ட்டில் பல குற்றச்சாட்டுகளை அறிக்கையாக முன் வைத்தனர்.

    டெல்லி மதுபான வழக்கில் சரத்சந்திர ரெட்டி, மகுண்ட சீனிவாசலு ரெட்டி, மகுண்ட ராகவ், எம்.எல்.சி. கே. அருண் ராமச்சந்திர பிள்ளை, எம்.எல்.சி. கவிதா ஆகியோர் முக்கிய நபர்கள் என தெரிவித்துள்ளனர்.

    அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயின்பள்ளி, புச்சிபாபு ஆகியோர் வெளியில் புரோக்கர்களாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    மதுபான முறைகேடு வழக்கில் அருணுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கும் இடையே அரசியல் ஒப்பந்தம் ஏற்படுத்த அருண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நபர்களுடன் இணைந்து பணியாற்றி எல்-1 உரிமம் பெற்ற இன்டோ ஸ்பிரிட்சில் அருண் பிள்ளை 32.5 சதவீதமும், பிரேம் ராகுலு 32.5 சதவீதம் மற்றும் இன்டோ ஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெடில் 35 சத பங்குகளை வைத்ததாக கோர்ட்டில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கவிதா டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நாளை மறுதினம் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நள்ளிரவு 2 மணி அளவில் பிரோஜா கான் திடீரென அலறி கூச்சலிட்டபடி படுக்கையில் மயங்கி விழுந்தார்.
    • 20 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்கா மாவட்டம், சிலக் கலூரி பேட்டை, பசுமலை சேர்ந்தவர் பஷீர் பாஷா. இவரது மகன் பிரோஜா கான் (வயது 17).

    இவர் சிலக்கலூரி பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர் மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரோஜா கான் உள்ளிட்ட குடும்பத்தினர் உணவு அருந்திவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் பிரோஜா கான் திடீரென அலறி கூச்சலிட்டபடி படுக்கையில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் அவரது அறைக்குச் சென்று மகனை எழுப்ப முயன்றனர்.

    ஆனால் அவரது உடல் அசைவின்றி இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரது வாயில் தண்ணீர் ஊற்றி பார்த்தனர்.

    தண்ணீர் உள்ளே இறங்காததால் சந்தேகம் அடைந்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நன்றாக படித்து வந்த தனது மகன் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருந்தார். ஆனால் திடீரென மாரடைப்பால் இறந்ததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதேபோல் ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டம், அச்சம் பள்ளி தாண்டா பகுதியை சேர்ந்தவர் தனுஜ் நாயக் (வயது 19). இவரது குடும்பத்தினர் தற்போது பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

    தனுஷ் நாயக் அனந்தபூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்மசி படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனுஜ் நாயக் கபடி விளையாடி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

    தனுஷ் நாயக்கை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் நேற்று இரவு அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் நாயக் பரிதாபமாக இறந்தார்.

    கபடி விளையாடிய போது தனுஜ் நாயக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக அவரது உறவினர்கள் கூறினார்.

    40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வந்த நிலையில், ஆந்திராவில் 20 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது.
    • கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது மகேஸ்வரி தனது மகன் சோமேஷ் உடன் வெளியே சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பெலுகுப்பா, ஜி.டி பள்ளியை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீரங்கராஜபுரத்தில் டி.ஆர்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் தாடி பத்திரி, போக சமுத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரி (வயது 30) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சோமேஷ் என்ற 1 வயது ஆண் குழந்தை இருந்தது. மகேஸ்வரி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் நாகேந்திரா மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது. கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது மகேஸ்வரி தனது மகன் சோமேஷ் உடன் வெளியே சென்றார். வெளியே சென்ற மனைவி மற்றும் மகன் இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்திட நாகேந்திரா நேற்று முன்தினம் ஸ்ரீ ரங்கராஜபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாகாலா அடுத்த நேத்திர குண்டா பகுதியில் உள்ள ஏரியில் மகேஸ்வரி தனது மகனை உடலில் கட்டியபடி பிணமாக மிதந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி நரசப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மகன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகனை உடலில் கட்டிக் கொண்டு குளத்தில் குதித்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 10 ஆண்டுகளாக நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் தென்படவில்லை.
    • நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் அதிக அளவில் நடமாட தொடங்கியுள்ளன

    திருப்பதி:

    ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக பிரகாசம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும்-நல்லமலா வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய ஓநாய்கள் காணப்பட்டது.

    வயல்களில் மின்வேலி அமைத்தல், அதிக அளவில் பூச்சிக்கொல்லி பயன்பாடு, உணவு ஆதாரங்கள் குறைதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நல்லமலாவில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் தென்படவில்லை.

    தற்போது நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் அதிக அளவில் நடமாட தொடங்கியுள்ளன. இதனை வனவிலங்கு உயிரின ஆர்வலர்கள் நேரில் கண்டு கணக்கெடுத்து உள்ளனர்.

    நல்லமலா மலைத்தொடரில் உள்ள வன அலுவலர்கள் சமீபத்தில் டோர்னாலா-அத்மகூர் எல்லைப் பகுதியில் அழிந்துவரும் இனமான இந்திய ஓநாய்கள் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படுவது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஓநாய்கள் சாத்தியமான கால்நடைகளை வேட்டையாடக் கூடியவை மற்றும் முக்கியமாக செம்மறி ஆடு மற்றும் முயல்களை உண்ணும், மிருகங்கள் போன்ற பெரிய இரையை குறிவைக்கும்போது, அவை ஜோடியாக வேட்டையாட விரும்புகின்றன.

    "ஓநாய்களைப் பாதுகாக்க சில சிறப்பு நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் நல்லமலா வனப்பகுதியின் சுற்றுச்சூழல், வன விலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே நரசிம்ம ராஜு உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
    • வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கணபவரம், கொல்லலடியப்பா பகுதியை சேர்ந்தவர்கள் நரசிம்ம ராஜு (வயது 70). இவரது தம்பி ராமகிருஷ்ண ராஜு (68). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர்கள் இறந்து விட்டதால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    விவசாய கூலி வேலை செய்து வந்த நரசிம்மராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    மேலும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நரசிம்மராஜு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தனது தம்பியிடம் அழுது புலம்பினார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமகிருஷ்ண ராஜு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டை விட்டு போக வேண்டியது தானே. வீட்டில் இருந்து கொண்டு ஏன் தொல்லை கொடுக்கிறாய் என கூறினார்.

    இதனால் தம்பி மீது கோபத்தில் இருந்த நரசிம்மராஜு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த தம்பியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராமகிருஷ்ணராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ஆத்திரத்தில் தம்பியை குத்திக்கொலை செய்ததை எண்ணி வருத்தப்பட்டு 30 மணி நேரம் தம்பியின் பிணத்தின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

    நேற்று பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நரசிம்ம ராஜு அங்கிருந்தவர்களிடம் தம்பியை குத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமகிருஷ்ணராஜுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மராஜுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேகர் மின்கம்பத்தில் ஏறிய போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சேகர் மின் கம்பத்தில் ஏறி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா மின்கம்பத்தில் ஏறி மாமியாரை மிரட்டுவது என கேலியாக பேசி சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேதக் நகரை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தாய் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

    மாமியார் வீட்டிற்கு செல்லும் சேகர் தனக்கு சீர்வரிசையாக நகைகள் போட வேண்டுமென அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது மாமியார் சேகரின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் நேற்று மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்று நகைகள் போட வேண்டுமென வற்புறுத்தினார். இதற்கு சேகரின் மாமியார் மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சேகர் வீட்டை விட்டு வெளியே வந்து அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி உச்சிக்குச் சென்று உட்கார்ந்து கொண்டார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சேகரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சேகர் தனது மாமியார் நகைகள் போடுவதாக உறுதி அளித்தால் மட்டுமே கீழே வருவேன் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சேகரை சமாதானப்படுத்தி கீழே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் சேகருக்கு அறிவுரைகளை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    சேகர் மின்கம்பத்தில் ஏறிய போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேகர் மின் கம்பத்தில் ஏறி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா மின்கம்பத்தில் ஏறி மாமியாரை மிரட்டுவது என கேலியாக பேசி சென்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.
    • தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டம், ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வம்சி. ஆட்டோ டிரைவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் வம்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருப்பதி அருகே உள்ள முஸ்லிம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவர் தனது ஆட்டோவை வம்சிக்கு வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனால் அன்வர் வம்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது வம்சியின் மனைவிக்கும் அன்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.

    கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவி அன்வருடன் குடும்பம் நடத்தி வருவது வம்சிக்கு தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வம்சி உள்ளூரில் வசிக்க பிடிக்காமல் பெங்களூருக்கு சென்று ஆட்டோ ஓட்டி வந்தார்.

    அப்போது அன்வர் வம்சியின் மனைவியுடன் இருக்கும் போட்டோக்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. இதனை கண்ட வம்சி இருவரும் இறந்துவிட்டதாகவும் உங்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும் ரிப்ஸ் என பதிவிட்டு இருந்தார்.

    இதனை கண்டு ஆத்திரமடைந்த அன்வர் கடந்த மாதம் 8-ந் தேதி பெங்களூருக்கு சென்று வம்சியை கடத்தி திருப்பதிக்கு கொண்டு வந்தார். மறுநாள் திருப்பதி அருகே உள்ள ராயலாபுரத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று வம்சிக்கு மொட்டை அடித்தார்.

    வம்சிக்கு மொட்டை அடிக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் வம்சிக்கு மொட்டை அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கருதி ஆட்டோ டிரைவர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வம்சி பெங்களூரில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
    • திருப்பதியில் 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 522 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 390 பக்தர்கள் தலை முடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது.

    அதில் ரூ.73.66 கோடி காணிக்கை யாக கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 14 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,799 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 522 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 390 பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது.

    அதில் ரூ.73.66 கோடி காணிக்கையாக கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 14 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,799 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×