என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    • வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

    திருப்பதி:

    திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருமலையில் கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும் அறைகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பக்தர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.

    இந்த முறையால் தங்கும் அறைகள் பெறுவதிலும் அறையை காலி செய்யும்போது அதற்கான டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதிலும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனிவரும் நாட்களில் முகத்தை ஸ்கேன் செய்யும் திட்டமே அமல்படுத்தப்படும். இதனால் இடைத்தரர்கள் பிரச்சினை இருக்காது.

    கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதே முறைதான் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவிலும் கடைப்பிடிக்கப்படும்.

    இனி ஒரு பக்தருக்கு மாதத்தில் ஒருமுறை மட்டுமே திருமலையில் அறை ஒதுக்கப்படும்.

    வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறையும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

    இதன் மூலம் பக்தர்கள் கூடுதலாக இலவச லட்டு வாங்குவது தவிர்க்கப்படும்.

    எனவே இந்த திட்டமும் இனி தொடர்ந்து செயல்படுத்தபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரமும், தரிசன நேர ஒதுக்கீடு முறையில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 63,285 பேர் தரிசனம் செய்தனர். 22,487 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ருக்மணியின் பெற்றோர் தனது மகளுக்கு முதலிரவு நடக்காததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
    • மகனை அவமானப்படுத்தியதால் அவர்களை கொலை செய்ய மகனுடன் சேர்ந்து அவரது தந்தை திட்டம் தீட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

    இவர்களின் மகன் சரவணன். அவர் பி.டெக் படித்துவிட்டு தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணனுக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலம் வனபர்த்தியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவரது மனைவி ரமாதேவி (வயது 45). இவர்களது மகள் ருக்மணி (20). சரவணனுக்கும், ருக்மணிக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது.

    இதையடுத்து திருமணம் நடந்த அன்று இரவு இருவருக்கும் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சரவணனுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாததால் அன்று முதலிரவு நடக்கவில்லை.

    2 நாட்கள் ஆகியும் சரவணன் தாம்பத்தியத்தில் ஈடுபாடு காட்டவில்லை. இதனால் அதிர்ந்துபோன ருக்மணி முதலிரவு நடக்காதது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    ருக்மணியின் பெற்றோர் தனது மகளுக்கு முதலிரவு நடக்காததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் சரவணனிடம் ஏன் முதலிரவு நடக்கவில்லை. ஆண்மை இல்லையா என கேலி செய்தனர். இதனால் சரவணனுக்கு ருக்மணி மற்றும் அவரது பெற்றோர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    மேலும் சரவணனை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்தனர். மனைவியுடன் முதலிரவு நடக்காததை அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தெரிவித்ததால் சரவணன் அவமானம் அடைந்தார்.

    இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தார்.

    மகனை அவமானப்படுத்தியதால் அவர்களை கொலை செய்ய மகனுடன் சேர்ந்து அவரது தந்தை திட்டம் தீட்டினார். திட்டத்தின் படி அவர்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வரும்படி மகனிடம் தெரிவித்தார். இதையடுத்து மனைவி மற்றும் அவரது பெற்றோரை கர்னூலுக்கு அழைத்து வந்தார்.

    ருக்மணியை மாடிக்கு அழைத்துச் சென்ற சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் வீட்டு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது மனைவி ரமாதேவியை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

    வெங்கடேஸ்வரலு உயிர் பிழைக்க ரத்த காயங்களுடன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார். ஆனால் ரமாதேவி வீட்டிற்குள் சிக்கிகொண்டார். அவரை பிரசாத் வெட்டி கொலை செய்தார்.

    வெங்கடேஸ்வரலு வீட்டில் இருந்து ரத்த காயங்களுடன் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கர்னூல் டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஸ்வரலுவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ரமாதேவி, ருக்மணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத் ஆகியோரை கைது செய்தனர்.

    • கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2012ல் கடல் நீர் வெப்பமடைந்தது.
    • சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் கடல்கள் வெப்பமடைவதால், தீவிர பேரழிவுகள் ஏற்படுகின்றன

    திருப்பதி:

    கடல் வெப்பநிலையை கணக்கிடுவது 1900ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பல தசாப்தங்களாக இந்த வெப்பம் அதிகரித்து வருகிறது. 1901க்குப் பிறகு அது மேலும் மேலும் அதிகரித்தது.

    கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2012ல் கடல் நீர் வெப்பமடைந்தது. சீன அறிவியல் அமைப்பு அமெரிக்காவில் உள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல கண்காணிப்பு மையம் போன்ற நிறுவனங்களின் பிரபல விஞ்ஞானிகள் இந்த முன்னேற்றங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

    கலிபோர்னியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள், மேலும் பேரழிவுகள் விரைவில் வரும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். மினசோட்டாவில் உள்ள செயின்ட் தாமஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் ஆபிரகாம் மெலிமி, கடல்களில் உள்ள வெப்பத்தை துல்லியமாக அளவிட முடிந்தால், கிரகம் எவ்வாறு சமநிலையற்றதாக மாறுகிறது என்பதை இன்னும் தெளிவாக அறிய முடியும் என்று கூறுகிறார்.

    புதைபடிவ எரிபொருட்களை பிரித்தெடுக்கும்போது பசுமை இல்ல வாயு (கிரீன்ஹவுஸ்) வெளியேற்றம் வெளிப்படுகிறது.

    இருப்பினும், இந்த உமிழ்வுகளில் 90 சதவீதம் கடல்களால் உறிஞ்சப்படுகிறது. எனவே, புதைபடிவ எரிபொருள்கள் பிரித்தெடுக்கப்படுவதால், பெருங்கடல்கள் தொடர்ந்து வெப்பமடைகின்றன. தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் பிற மனித நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும் பெரும்பாலான கார்பன் உமிழ்வுகள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன.

    சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் கடல்கள் வெப்பமடைவதால், தீவிர பேரழிவுகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானிகள் கடலின் மேற்பரப்பில் இருந்து கடல் வெப்பநிலையை 6501 அடி ஆழத்திற்கு ஒப்பிட்டுள்ளனர்.

    2021-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் கடல்கள் 10 மடங்கு அதிக வெப்பத்தை உறிஞ்சியுள்ளன. இது ஆண்டு முழுவதும் 40 ஹேர் ட்ரையர்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் வெப்பத்திற்கு சமம் வெப்பநிலையுடன் உப்பு அளவு அதிகரிக்கும் போது, கடல் நீர் அடுக்குகளாக மாறுகிறது.

    இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள அனைத்து முன்னணி காலநிலை ஆராய்ச்சி அமைப்புகளும் இந்தப் பிரச்சனைக்குக் காரணம், இதுவரை கண்டிராத அளவில் கடல்கள் வெப்பமடைந்து வருவதே என்று கூறி உள்ளனர்.

    இந்த செயல்முறையின் விளைவாக, கடல்களில் அமிலங்களின் அளவுகள் அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களுக்கும் கடலோர மக்களுக்கும் ஆபத்தானவையாக மாறி வருகின்றன. குறிப்பாக கடல்களில் பல்லுயிர் பெருக்கமும், சில உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

    இதனால், கடல் வாழ் உயிரினங்களை நம்பி வாழும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மனித உணவுப் பழக்கங்களில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    நவம்பரில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களைக் கட்டுப்படுத்த பல திட்டங்களைத் தயாரித்தனர். புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தும் பாரிஸ் காலநிலை ஒப்பந்த இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டது.

    பல ஆண்டுகளாக, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் தாக்கம் பெரும்பாலும் ஏழை நாடுகளில்தான் உள்ளது. இப்போது வல்லரசு அமெரிக்கா மீது மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போதைய நிலை இப்படியே நீடித்தால், 2100ம் ஆண்டுக்குள் பூடானில் 2.3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என உலக நாடுகளுக்கு ஏற்கனவே ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிப்பதால், 2100-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை தாண்டலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடல் மட்டம் வெப்பநிலை போல் உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் கொல்கத்தா, மியான்மரின் யாங்கோன், தாய்லாந்தின் பாங்காக், வியட்நாமின் ஹோசிமின் நகரம் மற்றும் பிலிப்பைன்ஸின் மணிலா ஆகிய நகரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

    உள்நாட்டு காலநிலை மோதல்கள் காரணமாக சில இடங்களில் கடல் மட்டம் 20-30 சதவீதம் உயரும் என்றும், இதனால் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டும் முயற்சியை உலக நாடுகள் கைவிட வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். குறிப்பாக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

    சஹாரா பாலைவனம் போன்ற பகுதிகளில் உலகிற்கு தேவையான சோலார் பேனல்களை நிறுவினால், அனைத்து மின்சாரத்தையும் வழங்க முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய மதிப்பீடு.

    மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு பெருமளவில் அதிகரிக்கப்பட வேண்டும். தொலைதூரப் பயணங்களுக்கு நவீன ரக வாகன வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

    குடியிருப்புகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும். அப்போது நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களின் தேவை குறையும்.

    ஆட்சியில் இருப்பவர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்திக்க வேண்டும். படிம எரிபொருட்களின் பயன்பாட்டை தடுக்க பல தீர்வுகள் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து கடல் வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் மற்றும் லக்கேஜ் எடுத்து சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெற்கு மத்திய ரெயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களிடம் இருந்து ரூ. 200.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-20-ம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.154.29 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் மற்றும் லக்கேஜ் எடுத்து சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை குடும்பத்தினர் ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    அவருக்கு வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சந்திரசேகரராவ் மருத்துவமனைக்கு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சந்திரசேகரராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாகேஸ்வரரெட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காலையில் வயிற்றில் அசவுகரியமாக இருப்பதாக சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

    அவருக்கு சி.டி., எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவருக்கு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அல்சர் பிரச்சினையில் இருந்து சந்திரசேகரராவ் விரைவில் குணமடைவார். மற்ற அனைத்து வகையான சோதனைகளும் இயல்பானவை. அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, இரவு 7.15 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சந்திரசேகர ராவ் பிரகதி பவன் சென்றார். 

    • தெலுங்கு தேசம் கட்சியினர் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
    • அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே 15 கிராம் எடையுள்ள வெள்ளிக்கட்டிகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் எடுத்துச் சென்றதாக நாடாளுமன்ற தொகுதி தலைவர் சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நாளை எம்.எல்.சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் மெஜஸ்டிக் டவரில் உள்ள 101-வது பிளாட்டில் மூட்டை மூட்டையாக ஆயிரக்கணக்கில் வெள்ளி கட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் எழுந்தது.

    இந்த பிளாட் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி வேட்பாளர் சீதம் ராஜு சுதாகரின் அலுவலகம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பரவியதால் நேற்று மாலை 6 மணி அளவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் செய்தனர். ஆனால் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் போலீசார் சுமார் 5 மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ஆனால் அவர்கள் அலுவலகத்தில் உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்தனர். இதனால் அதிகாரிகள் மீது தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தெலுங்கு தேசம் முன்னாள் எம்எல்ஏ காந்தி பாஜு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் அலுவலகத்துக்கு வெளியே குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

    இதையடுத்து இரவு 10.30 மணிக்கு ஆய்வுக்குழுவினர் வந்து அலுவலகத்திற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு வெறும் துண்டு பிரசுரங்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே 15 கிராம் எடையுள்ள வெள்ளிக்கட்டிகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் எடுத்துச் சென்றதாக நாடாளுமன்ற தொகுதி தலைவர் சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார்.

    • யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது.
    • மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி யுகாதி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21-ந் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் 22-ந் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மற்றும் விஷ்வகேஸ்வரருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 79,561 பேர் தரிசனம் செய்தனர். 36,784 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • போலி சான்றிதழ் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • தலைமறைவாக உள்ள டெல்லியை சேர்ந்த ஷிவானியை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சார்மினார், சந்திராயண குட்டா பகுதியை சேர்ந்தவர் முகமது கலிமுதீன் (வயது 45). இவரது நண்பர்கள் டெல்லியை சேர்ந்த ஷிவானி, அப்பர் பள்ளி முகமது பெரோஸ் ( 44) சார்வான் மாருதி நகரை சேர்ந்த அப்துல் பாசித் அலி ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயார் செய்துள்ளனர்.

    தயாரிக்கப்பட்ட போலி சான்றிதழ்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளனர். போலி சான்றிதழ் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    போலீசார் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் முகமது கலிமுத்தீன், ஷிவானி முகமது பிரோஸ், அப்துல் பாசித் அலி ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் பிரிண்டர் ஹார்ட் டிஸ்க் 3 செல்போன் உள்ளிட்ட ஏராளமான எலெக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டெல்லியை சேர்ந்த ஷிவானியை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.
    • மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த போச்சாரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் காலை மணமகன் வீட்டார் பத்ர்த்ரி குடேம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

    பழங்குடியின வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர்.

    நேற்று முன்தினம் மாலை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

    திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர்.

    நேற்று காலை மணமகன் திருமண உடையில் மணமேடைக்கு வந்தார். ஆனால் மணமகள் வீட்டார் யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    அப்போது மணப்பெண் மண்டபத்திற்கு வர மறுத்தார். கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.

    மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை. மணமகளின் முடிவு குறித்து திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனால் திருமணம் நின்றது. களைகட்டி இருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை இது குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பினரும் தாங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்தனர்.

    பின்னர் மணமகளுக்கு வரதட்சணையாக கொடுத்திருந்த ரூ.2 லட்சத்தை மணமகன் வீட்டார் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வெளியில் எடுக்கப்பட்ட கற்களை எண்ணி பார்த்தபோது அந்த எண்ணிக்கை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என அதிகரித்து 3 ஆயிரத்தில் முடிவடைந்தது.
    • 3 ஆயிரம் கற்களையும் முதியவர் ஒருவரின் கிட்னியில் இருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில் வெளியில் எடுத்த டாக்டர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

    அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் சேர்த்தனர். முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருடைய கிட்னியில் கற்கள் இருப்பதை அறிந்தனர்.

    எனவே அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கீ ஹோல் முறைப்படி ( சிறிய ஓட்டை போட்டு அதன்மூலம் கற்களை எடுப்பது) சிகிச்சை அளித்து கற்களை டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். வெளியில் எடுக்கப்பட்ட கற்களை எண்ணி பார்த்தபோது அந்த எண்ணிக்கை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என அதிகரித்து 3 ஆயிரத்தில் முடிவடைந்தது.

    இதனால் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    3 ஆயிரம் கற்களையும் முதியவர் ஒருவரின் கிட்னியில் இருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில் வெளியில் எடுத்த டாக்டர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    அந்த முதியவர் இப்போது உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இது தவிர நேரடி இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 4 ½ மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதியில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் அலிபிரி ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    டோக்கன் பெரும் பக்தர்கள் அன்றே தரிசனம் செய்துவிட்டு வரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். சனி ஞாயிறு திங்கள் புதன் ஆகிய நாட்களில் 25 ஆயிரம் டோக்கன்கள், செவ்வாய் வியாழன் வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    அலிப்பிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபாதை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஆனால் அவர்களுக்கு தரிசன டோக்கன் வழங்கப்படுவதில்லை.நடந்து செல்லும் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் 24 மணிநேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்கின்றனர் .

    ஏற்கனவே வழங்கப்பட்டது போல நடைபாதையில் செல்பவர்களுக்கான திவ்ய தரிசனம் டோக்கன்களை மீண்டும் வழங்க வேண்டும் என நடைபாதை பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 63 ஆயிரத்து 443 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26,741 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.8 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • மகள், மருமகனை விஜயவாடாவிற்கு அனுப்பி வைக்க தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை துவாரக நாத் ஏற்பாடு செய்து இருந்தார்.
    • திருமண சடங்குகள் முடிந்த பிறகு நேற்று மாலை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மணமக்களை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் முக்குல துவாரக நாத். இவர் நகர்ப்புற வளர்ச்சி கழக தலைவராக உள்ளார்.

    இவரது மகள் உஷா ஸ்ரீ. இவருக்கும் விஜயவாடாவை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    நேற்று முன்தினம் மாலை நெல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்து இருந்தனர். பாட்டுக் கச்சேரி ஆடல் பாடலுடன் வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.

    இதையடுத்து நேற்று காலை மணமகன் பிரசாந்த் மணமகள் உஷா ஸ்ரீ கழுத்தில் தாலி கட்டினார்.

    பின்னர் தனது மகள், மருமகனை விஜயவாடாவிற்கு அனுப்பி வைக்க தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை துவாரக நாத் ஏற்பாடு செய்து இருந்தார்.

    அதன்படி திருமண சடங்குகள் முடிந்த பிறகு நேற்று மாலை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மணமக்களை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் விஜயவாடா சென்றதும் மணமகன் வீட்டார் ஆரத்தி எடுத்து அழைத்து சென்றார்.

    பாசமான தனது மகளை மாமியார் வீட்டிற்கு தந்தை ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ×