என் மலர்
ஆந்திர பிரதேசம்
- திருக்கல்யாண உற்சவம் ஜூன் 4-ந் தேதி தொடங்கி ஜூலை 23-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.
- திருக்கல்யாணம் அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் நடத்தப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் திருக்கல்யாணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திருக்கல்யாணம் நடந்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் ஜூன் மாதம் 4-ந் தேதி தொடங்கி ஜூலை 23-ந் தேதி வரை அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் நடத்தப்படுகிறது.
திருக்கல்யாணம் உற்சவம் குறித்த சுவரொட்டிகளை முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலையில் தாடி பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டனர்.
அமெரிக்கா, கனடாவில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவதை அந்தந்த மாநகர நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கல்யாண உற்சவத்திற்கு தேவையான பூஜை பொருட்கள், பூக்கள், வேத பண்டிதர்களை நியமிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 67,853 பேர் தரிசனம் செய்தனர். 33,381 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3. 19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இலவச தரிசனத்தில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- கேமரா காட்சியில் பக்தர் ஒருவர் தனது செல்போனில் கோவிலை வீடியோ எடுத்தது பதிவாகி இருந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 7-ந்தேதி தரிசனத்திற்கு வந்த பக்தர் ஒருவர் பலத்த பரிசோதனையும் மீறி கோவிலுக்குள் தனது செல்போனை கொண்டு சென்றார்.
மூலவர் மீதுள்ள ஆனந்த நிலையம் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பலத்த சோதனையை மீறி அவர் எப்படி கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களின் மெத்தனபோக்கால் இந்த சம்பவம் நடந்ததா? என விசாரணை நடத்தி வந்தனர்.
வீடியோ படம் பிடித்த பக்தர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பக்தர் ஒருவர் தனது செல்போனில் கோவிலை வீடியோ எடுத்தது பதிவாகி இருந்தது.
அவரின் தரிசன டிக்கெட்டில் இருந்த ஆதார் எண்ணை கொண்டு தெலுங்கானாவை சேர்ந்த பக்தரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் செல்போன் எப்படி கொண்டு சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 நாட்கள் ஆகியும் கோவிலை வீடியோ எடுத்த பக்தர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.
- ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி தேவஸ்தானத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் உடைமைகள் ஸ்கேன் செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் திருப்பதி கோவில் பகுதியில் பயங்கரவாதி புகுந்ததாக கடிதம் வந்தது. இது போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் ஆனந்த நிலையம், உள்ளிட்ட பகுதிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டார்.
பேனா கேமரா மூலம் அவர் வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. பக்தரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்தனர். 4 நாட்கள் ஆகியும் கோவிலை வீடியோ எடுத்த பக்தர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன்பு தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி தேவஸ்தானத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பையும் மீறி பக்தர் ஒருவர் கோவிலுக்குள் எப்படி கேமரா எடுத்துச் சென்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் அலட்சியப்போக்கு இந்த சம்பவத்திற்கு காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.
திருப்பதி:
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது.
இதனை தடுக்க ஆந்திர மாநில சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தள்ளம்பள்ளி என்ற இடத்தில் நாயுடு பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
காரில் 5 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தங்கம் கடத்தி வந்த 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காருடன் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் ஆந்திராவில் சென்னையில் இருந்து கடத்தப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு கடத்தி வந்த 7.3 கிலோ தங்க கட்டிகள் ஆந்திராவில் பிடிப்பட்டது.
தொடர் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பவன், சரண் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
- அனக்கப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரபு பாலம் பகுதியை சேர்ந்தவர் கங்கு நாயுடு. ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் பவன் (வயது 8), சரண் (7).
இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் மகன்களுக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டும் என கங்கு நாயுடு முடிவு செய்தார்.
இதையடுத்து அனக்கா பள்ளி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றார். முதல் நாள் பயிற்சியாளர் உதவியுடன் நீச்சல் பழக கற்றுக் கொடுத்தார்.
நேற்று மாலை 2-வது நாளாக மகன்களை நீச்சல் குளத்துக்கு கங்கு நாயுடு தனது மகன்களுடன் சென்றார். நீச்சல் குளத்தில் நீச்சல் பழக மகன்களை இறக்கி விட்டார்.
அப்போது பவன், சரண் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கங்கு நாயுடு நீச்சல் குளத்தில் இறங்கி 2 மகன்களையும் வெளியே கொண்டு வந்தார். அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறுவன் பவன் இறந்து விட்டார். இதனை கண்டு கங்கு நாயுடு அழுது துடித்தார். 2-வது மகன் சரண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அனக்கப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடியோவில் கொட்டும் மழையில் ஆனந்த நிலையமானது, தங்க பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் மின்னுகிறது.
- ஞாயிற்றுக்கிழமை, திருப்பதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. இதனால் 2 மணி நேர மின்தடை ஏற்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பாதுகாப்பு கருதி செல்போன்கள் உள்பட எந்த மின்னணு சாதனத்தையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து 2 கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். சோதனைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய கேமரா மூலம் சென்று ஆனந்த நிலையம் மற்றும் கருவறைக்குச் செல்லும் வழி உள்ளிட்டவற்றை வீடியோ பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவில் கொட்டும் மழையில் ஆனந்த நிலையமானது, தங்க பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் மின்னுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது திருப்பதி-திருமலை கோவில் நிர்வாகத்துக்குத் தெரிய வந்தது.
உடனடியாக கோவில் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆனந்த நிலையத்தின் காட்சிகளைப் பதிவுசெய்து ஆன்லைனில் பகிர்ந்த பக்தர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.
"ஞாயிற்றுக்கிழமை, திருப்பதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. இதனால் 2 மணி நேர மின்தடை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் ஒரு பக்தர் பேனா கேமராவைப் பயன்படுத்தி விமான கோபுரத்தின் வீடியோவை பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி எர்ரம்மாவை வெட்டி சாய்த்தார்.
- தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், சரவகோடா பகுதியை சேர்ந்தவர் ராமராவ். இவரது மனைவி எர்ரம்மா (வயது 40).
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
கள்ளக்காதலை கைவிடுமாறு ராமாராவ் அவரது மனைவியிடம் பலமுறை எச்சரித்தார். கணவரின் எச்சரிக்கையை மீறி எர்ரம்மா, சந்தோஷ் குமாருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று காலை சந்தோஷ்குமார் அங்குள்ள பம்பு செட்டில் குளித்துக் கொண்டு இருந்தார். இந்த தகவல் அறிந்த ராமராவ் பைக்கில்அங்கு சென்றார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குளித்து கொண்டிருந்த சந்தோஷ் குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இருப்பினும் ஆத்திரம் தீராத ராமாராவ் ரத்த கரையுடன் அதே கத்தியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி எர்ரம்மாவை வெட்டி சாய்த்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ராமராவை தேடி வருகின்றனர்.
- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
- எடப்பாடி பழனிசாமிக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
திருப்பதி:
தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி மலைக்கு காரில் வந்தார்.
அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து புஷ்கரணி அருகே உள்ள வராக சாமி கோவில் மற்றும் மாட வீதியில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். எடப்பாடி பழனிசாமிக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
இதையடுத்து கார் மூலம் வேலூர் வழியாக சேலத்திற்கு சென்றார். வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
- திருப்பத்தமா திடீரென எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனைக் கண்ட அவரது சகோதரிகள் சந்தியா, தீபிகா இருவரும் அக்காவை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகள் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், வனபர்த்தி மாவட்டம் தடிபாமுலாவை சேர்ந்தவர் கந்தம் குருமன்னா. இவருடைய மகள்கள் திருப்பத்தம்மா (வயது 12), சந்தியா (9), தீபிகா (7) ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிறுமிகள் 3 பேரும் வீரா சமுத்திரம் பகுதியில் உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றனர்.
அப்போது திருப்பத்தமா திடீரென எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனைக் கண்ட அவரது சகோதரிகள் சந்தியா, தீபிகா இருவரும் அக்காவை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
அப்போது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சிறுமிகள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
அப்பகுதி வாலிபர்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 சிறுமிகளின் பிணங்களை மீட்டனர்.
சிறுமிகளின் பிணத்தைப் பார்த்து அவரது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகள் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருமலையில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி பக்தர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
- கடந்த 7-ந்தேதி திருமலையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோவிலுக்குள் மின்சார மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் குற்றமாகும்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மர்மநபர் யாரோ கோவிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்கக் கோபுரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார்.
இது, பக்தர்கள் மற்றும் ஆன்மிக வட்டாரத்திலும், திருப்பதி தேவஸ்தானத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷம நபர்களின் இச்செயலுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி, ஏழுமலையான் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் எந்த மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. திருமலையில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி பக்தர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கக்கூடாது.
கடந்த 7-ந்தேதி திருமலையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. அப்போது பக்தர் ஒருவர் விமான கோபுரத்தை பேனா கேமரா மூலம் வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எல்லா நெறிமுறைகளும் தெரிந்திருந்தும், அந்தப் பக்தர் மூலவர் தங்கக் கோபுரமான ஆனந்த நிலையம் விமானத்தை வீடியோ எடுத்து, நெறிமுறைகளை மீறி சமூக வலைதளங்களில் வைரலாகப் பதிவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
அந்தத் தவறு செய்தவரைக் கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டியின் உத்தரவுப்படி, இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் மதுவில் அதிக கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது.
- தனியார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மது தரம் உறுதி செய்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் முதன்முறையாக நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் மதுவில் அதிக கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது.மேலும் மதுவில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தனியார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மது தரம் உறுதி செய்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் முதன்முறையாக நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.3 கோடி செலவில் மதுவிலக்கு ஆய்வகத்தை அமைத்துள்ளனர்.
ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் வேதியல் துறை இணைந்து இதில் பல்வேறு நவீன எந்திரங்களை நிறுவி உள்ளனர்.
"இந்த ஆய்வகம் மதுபானங்களில் உள்ள கலப்படத்தை கண்டுபிடித்துவிடும் சாக்லேட்டுகளில் போதைப் பொருள்கள் இருப்பதையும் கண்டறிய உதவும். ஆல்கஹாலில் உள்ள எந்தப் பொருளிலும் அசுத்தங்கள் இருப்பதையும் கண்டறிய முடியும்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய இந்த வசதி உதவும் "மதுபானங்களில் கலப்படத்தைத் தடுப்பதில் இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும். மதுவில் அசுத்தங்களை அடையாளம் காணலாம்.
அதிநவீன உபகரணங்களின் உதவியுடன் ஆல்கஹாலில் உள்ள நீரின் அளவையும் கண்டறிய முடியும்.
மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் மற்றும் பிற பொருட்களின் சதவீதத்தைக் கண்டறிவது எளிதாகிவிடும். இதன்மூலம் மதுபான ஆலைகளில் மதுவின் தரம் பராமரிக்கப்படும்.
இதனால் தரமான மது கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வகம் விரைவில் திறக்கப்படும்.
விசாகப்பட்டினம் தவிர, காக்கிநாடா, குண்டூர், திருப்பதி மற்றும் கர்னூல் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த சிறுவனின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஐதராபாத்:
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூர் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவரது மகன் பிரவீன் சவுத்ரி (வயது 7).
தெலுங்கானா மாநிலம் கதவ்வால் மாவட்டத்தில் உள்ள அய்சா பகுதியில் இவர்களது உறவினர் திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க வம்சி கிருஷ்ணா அவரது மகனை அழைத்து வந்திருந்தார்.
அங்கு சென்ற பிறகு சிறுவன் தனது வயதுக்கேற்ற குறும்புத்தனத்துடன் ஓடி ஆடி விளையாடினான்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கீழே விழுந்தான். இதில் இடது கண் ஓரமாக அடிபட்டது. வலியால் துடித்து சிறுவன் அலறினான்.
இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர்கள், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் பெவி குவிக்கை தடவி விட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன பெற்றோர்கள் டாக்டரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் சாக்கு போக்கு சொல்லி சமாளிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்தது.
முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.






