என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் முதன் முறையாக மதுவில் கலப்படத்தை தடுக்க ரூ.3 கோடியில் நவீன ஆய்வகம்
    X

    ஆந்திராவில் முதன் முறையாக மதுவில் கலப்படத்தை தடுக்க ரூ.3 கோடியில் நவீன ஆய்வகம்

    • ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் மதுவில் அதிக கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது.
    • தனியார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மது தரம் உறுதி செய்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் முதன்முறையாக நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் மதுவில் அதிக கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது.மேலும் மதுவில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    தனியார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மது தரம் உறுதி செய்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் முதன்முறையாக நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.3 கோடி செலவில் மதுவிலக்கு ஆய்வகத்தை அமைத்துள்ளனர்.

    ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் வேதியல் துறை இணைந்து இதில் பல்வேறு நவீன எந்திரங்களை நிறுவி உள்ளனர்.

    "இந்த ஆய்வகம் மதுபானங்களில் உள்ள கலப்படத்தை கண்டுபிடித்துவிடும் சாக்லேட்டுகளில் போதைப் பொருள்கள் இருப்பதையும் கண்டறிய உதவும். ஆல்கஹாலில் உள்ள எந்தப் பொருளிலும் அசுத்தங்கள் இருப்பதையும் கண்டறிய முடியும்.

    கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய இந்த வசதி உதவும் "மதுபானங்களில் கலப்படத்தைத் தடுப்பதில் இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும். மதுவில் அசுத்தங்களை அடையாளம் காணலாம்.

    அதிநவீன உபகரணங்களின் உதவியுடன் ஆல்கஹாலில் உள்ள நீரின் அளவையும் கண்டறிய முடியும்.

    மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் மற்றும் பிற பொருட்களின் சதவீதத்தைக் கண்டறிவது எளிதாகிவிடும். இதன்மூலம் மதுபான ஆலைகளில் மதுவின் தரம் பராமரிக்கப்படும்.

    இதனால் தரமான மது கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வகம் விரைவில் திறக்கப்படும்.

    விசாகப்பட்டினம் தவிர, காக்கிநாடா, குண்டூர், திருப்பதி மற்றும் கர்னூல் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×