என் மலர்
இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த காட்சி
திருப்பதி கோவிலில் பாதுகாப்பு குறைபாடு கண்டித்து ஆர்ப்பாட்டம்
- 4 நாட்கள் ஆகியும் கோவிலை வீடியோ எடுத்த பக்தர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.
- ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி தேவஸ்தானத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் உடைமைகள் ஸ்கேன் செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் திருப்பதி கோவில் பகுதியில் பயங்கரவாதி புகுந்ததாக கடிதம் வந்தது. இது போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் ஆனந்த நிலையம், உள்ளிட்ட பகுதிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டார்.
பேனா கேமரா மூலம் அவர் வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. பக்தரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்தனர். 4 நாட்கள் ஆகியும் கோவிலை வீடியோ எடுத்த பக்தர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன்பு தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி தேவஸ்தானத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பையும் மீறி பக்தர் ஒருவர் கோவிலுக்குள் எப்படி கேமரா எடுத்துச் சென்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் அலட்சியப்போக்கு இந்த சம்பவத்திற்கு காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






