என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மலையேறி செல்வதற்கு தேவஸ்தானம் நிர்வாகம் கட்டுப்பாடுளை விதித்துள்ளது.
    • இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார். அவர், தனது மனைவி சசிகலா மற்றும் மகள் லக்ஷிதாவுடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் வந்தார். அப்போது தனியாக நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோரை அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகளிலும் நடந்து வர அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    • நெருங்கிய தோழிகளாக பழகி வந்தாலும் மஞ்சுளா தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.
    • போலீசார் ரிஸ்வானா பேகத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஷம்சாபாத், சாய் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது45). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரிஸ்வானா பேகம் (43). இவர் தனது வீட்டின் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார்.

    இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேன்சி ஸ்டோருக்கு பொருட்களை வாங்குவதற்காக ரிஸ்வானா பேகம் மஞ்சுளாவிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.

    நெருங்கிய தோழிகளாக பழகி வந்தாலும் மஞ்சுளா தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.

    இருவருக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை மஞ்சுளா, ரிஸ்வானா பேகத்தின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் மதிய உணவு சாப்பிட்டனர்.

    அப்போது மஞ்சுளா ரிஸ்வானா பேகத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரிஸ்வானா பேகம் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து மஞ்சுளா கண்ணில் தூவினார். இதில் நிலை தடுமாறிய மஞ்சுளாவின் கழுத்தில் சேலையை கொண்டு இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் மஞ்சுளாவின் பிணத்தை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார்.

    நள்ளிரவு ரிஸ்வானா பேகம் தன்னுடைய வீட்டிலிருந்து 60 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்திற்கு மஞ்சுளாவின் பிணத்தை இழுத்து சென்றார்.

    தனது பேன்சி ஸ்டோரில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மஞ்சுளாவின் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் மஞ்சுளாவின் உடல் முழுவதும் கருகியது. அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணின் பிணம் எரிக்கப்பட்டு இருப்பது குறித்து ஷம்ஷாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மஞ்சுளாவின் கால் விரல் மோதிரம் மற்றும் மருந்து சீட்டு மட்டும் கிடைத்தது. உடல் முழுவதும் உருக்குலைந்து காணப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு கேமராவில் பதிவான காட்சியில் மஞ்சுளா, ரிஸ்வானா பேகம் வீட்டுக்குள் செல்வது தெரியவந்தது.

    இதன்மூலம் கொலையில் துப்பு துலங்கியது. போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த ரிஸ்வானா பேகம் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

    அப்போது பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் ரிஸ்வானா பேகத்தை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் மஞ்சுளாவை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ரிஸ்வானா பேகத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள் சிறுத்தை நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • நடைபாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதியில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், அவரது மனைவி சசிகலா மற்றும் மகள் லக்ஷிதாவுடன் தரிசனத்திற்கு அலிப்பிரி நடைபாதையில் வந்தார்.

    அப்போது தனியாக நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிறுமியை கொன்ற சிறுத்தை ஆவேசமாக சுற்றி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 38-வது வளைவில் சிறுத்தை நடமாடிக் கொண்டு இருந்தது.

    வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள் சிறுத்தை நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுமியை சிறுத்தை அடித்து கொன்றது சம்பந்தமாக நேற்று திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

    அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 40 அடி தூரத்திற்கு ஒரு பாதுகாவலர் என 100 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நடைபாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    டிரோன் கேமரா மூலமும் நடைபாதையை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளி கோபுரம் முதல் நரசிம்ம சாமி கோவில் வரை 2 மீட்டருக்கு ஒரு பாதுகாவலர் நிறுத்தப்பட உள்ளனர்.

    நடைபாதையில் செல்லும் பக்தர்கள் இனி தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாவலர்கள் முன்பாக குழுக்களாக செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தங்களுடன் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். குழுக்களாக வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடியபடியும் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடியும் நடைபாதையில் வரவேண்டும்.

    இதனால் வன விலங்குகள் நடைபாதையில் வருவதை தடுக்க முடியும். அலிப்பிரி மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நடைபாதையில் வனவிலங்குகள் வருவதை தடுப்பது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு வனத்துறையினருடன் இணைந்து கம்பி வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுத்தை தாக்கி இறந்த லக்ஷிதா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சமும், வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர்.
    • சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் எச்சம் கிடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், போத்தி ரெட்டி பாலத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. மகள் லக்ஷிதா (வயது 6). நேற்று இரவு திருப்பதி வந்தனர்.

    இரவு 7.30 மணி அளவில் தினேஷ் குமார் மனைவி, மகளுடன் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். நடைபாதையில் கூட்டம் இல்லை பெற்றோர் கைகளை பிடித்து வந்த சிறுமி அவர்களை விட்டு வேகமாக படியேறி சென்றார்.

    நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்றபோது லக்ஷிதா திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    நடைபாதையில் பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி பார்த்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் மகளை காணாததால் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர். மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது சிறுமி தனது பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடினர்.

    இன்று காலை 7 மணி அளவில் லக்ஷிதா நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் எச்சம் கிடந்தது. இதனால் சிறுமியை சிறுத்தை இழுத்துச்சென்று அடித்து கொன்றுள்ளது தெரியவந்தது.

    சிறுமியின் பிணத்தை கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். சாமி தரிசிக்க வந்து மகளை இழந்து விட்டதாக அழுது புரண்ட சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது.

    இதையடுத்து போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மலைப்பாதையில் பலமுறை வனவிலங்குகள் தாக்கியதில் பக்தர்கள் காயம் மட்டும் அடைந்து வந்தனர்.

    தற்போது முதல்முறையாக சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இதில் 10 சிறுத்தைகள் பக்தர்கள் நடைபாதை வரை அடிக்கடி நடமாடுகின்றன.

    தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வனவிலங்குகள் வராதபடி இரும்பிலான தடுப்பு வேலிகள் அமைத்து பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • ஒரு லாட்ஜிக்கு மாணவியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.
    • வாலிபர் தான் போலீஸ்காரர் எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்து தெரிய வந்தது.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார்.

    இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ் உடையில் கம்பீரமான போட்டோவுடன் அறிமுகமானார். அவருடன் மாணவி இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கினார்.

    அப்போது வாலிபர்தான் வாமஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். நாளடைவில் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.

    அடிக்கடி வாலிபர் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறிக் கொண்டே இருந்தார்.

    அவரது காதல் வலையில் விழுந்த மாணவி வாலிபரை காதலிக்க தொடங்கினார்.

    இருவரும் கத்ரி கோவில் மங்களூருவில் உள்ள தன்னி பாவி கடற்கரைகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து விதவிதமாக போட்டோ எடுத்தனர்.

    அந்த போட்டோக்களை தனது செல்போனில் வைத்துக் கொண்ட வாலிபர் மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்ட தொடங்கினார்இதனை கேட்டதும் மனைவி அதிர்ந்து போனார்.

    பயந்து போன மாணவி வாலிபருடன் செல்லத் தொடங்கினார். பெங்களூர் அருகில் உள்ள நெலமங்களாவில் உள்ள ஒரு லாட்ஜிக்கு மாணவியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    மேலும் மங்களூருக்கு அருகிலுள்ள கிளி கோழியில் உள்ள ஒரு லாட்ஜுக்கும் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அப்போது மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ, படம் எடுத்தார்.நாளுக்கு நாள் வாலிபர் மாணவியிடம் அத்துமீறி கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தனக்கு ரூ.1.50 லட்சம் தர வேண்டும்.

    இல்லாவிட்டால் உனது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

    மாணவி பணம் தர மறுத்ததால் மாணவியின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.அப்போதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    மாணவியை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர் உண்மையான போலீஸ்காரர் இல்லை என்பது தெரியவந்தது. அவர் ஒரு நாடக நடிகர்.

    நாடகங்களில் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் .அதனை புகைப்படமாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    மேலும் வாலிபர் தான் போலீஸ்காரர் எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்து தெரிய வந்தது.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபர் யமனூராவை கைது செய்தனர்.

    சமூக வலைதளங்களில் நட்பு வைத்துக் கொண்டு, காதல் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    பெண்கள் மற்றும் பெற்றோர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாகிஸ்தான் பெண் குறித்து ரா அமைப்பு விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • சி.எஸ்.எஸ்.எப். வீரரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    திருமலை:

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கபில் என்ற ஜெகதீஷ் பாய் முராரி (வயது 35). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சி.ஐ.எஸ்.எப் வீரராக உள்ளார். திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலையில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தமிஷா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் இருவரும் செல்போன் எண்கள் பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு தமிஷா, கபீலை தேடி விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அவருடன் கபில் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    இரவு நேரங்களில் பாகிஸ்தான் இளம்பெண் நிர்வாண வீடியோ காலில் பேசி மயக்கினார்.

    இதற்கிடையில் கபிலின் செல்போனுக்கு அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து அழைப்புகள் வருவதை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

    அவரது செல்போன் உரையாடல் குறித்து ரா அமைப்பு விசாரித்தது.

    அதில் இரும்பு உருக்காலை மற்றும் தொழில் நுட்ப ரகசியங்கள் மற்றும் இந்திய நாட்டு ரகசியங்கள் குறித்து பாகிஸ்தான் பெண்ணுக்கு கபில் உளவு சொன்னது தெரிந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பெண் குறித்து ரா அமைப்பு விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில் இளம்பெண் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவரின் தனிப்பட்ட உதவியாளர் என்பதும், கபிலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு இந்திய நாட்டு ரகசியங்களை அறிந்து தங்களது தீவிரவாத அமைப்புக்கு தெரிவித்து வந்ததும் தெரிந்தது.

    சி.எஸ்.எஸ்.எப். வீரரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் பேஸ்புக்கில் பாகிஸ்தான் பெண்ணுடன் செய்த எஸ்.எம்.எஸ் குறித்தும் விசாரித்தனர்.

    இதுகுறித்து விசாகப்பட்டினம் கமிஷனர் விக்ரம வர்மா உத்தரவின் பேரில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி கபில் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் கபீல் கைது செய்யப்பட்டார்.

    • ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார்.
    • பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    திருப்பதியில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார். பின்னர் தான் வைத்திருந்த சிகரெட்டை பற்ற வைத்தார். அப்போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த தீப்பிடித்ததற்கான அலாரம் ஒலித்தது.

    இதனால் பயணிகள் மத்தியில் தீ பிடித்ததாக பீதி ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் மானுபாலு என்ற ரெயில் நிலையம் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு விரைந்து சென்றனர். அலாரம் ஒலித்த கழிவறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது உள்ளே ஒருவர் கையில் சிகரெட்டுடன் இருந்ததை பார்த்தனர். உடனே அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர் நெல்லூர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    • கர்ப்பிணி பெண்ணின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 750-ஐ பறித்தனர்.
    • கர்ப்பிணி பெண்ணை வலுக்கட்டாயமாக நடைபாதைக்கு பின்புறம் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்டா பாலம் மண்டலத்தை சேர்ந்தவர் 30 வயது கர்ப்பிணிப் பெண்.

    இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி இரவு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கிருஷ்ணா மாவட்டம், நாகயலங்கா என்ற இடத்திற்கு கூலி வேலைக்கு செல்வதற்காக பாபட்லா மாவட்டம், ரேப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    இரவு நேரம் என்பதால் அங்குள்ள ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த 2 வாலிபர்கள் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை தட்டி எழுப்பினர்.

    கர்ப்பிணி பெண்ணின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 750-ஐ பறித்தனர்.

    பின்னர் கர்ப்பிணி பெண்ணை வலுக்கட்டாயமாக நடைபாதைக்கு பின்புறம் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    வாலிபர்களிடம் இருந்து தப்பிச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது குறித்து ரேப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவனை பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 25), நிகில் (20) என தெரியவந்தது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கு குண்டூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சரத் பாபு முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

    விசாரணை முடிந்து பாலியல் பலாத்கார வழக்கில் நீதிபதி சரத் பாபு நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விஜய கிருஷ்ணா மற்றும் நிகிலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.

    • இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அபரஜிதா சிங் சின்வார். இவர் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டிணம் இணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திர குமார். அபராஜிதா சிங் சின்வாரும், தேவேந்திர குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திரகுமார் நேற்று மச்சிலபட்டினம் வந்தார்.

    இவர்களது திருமணம் மச்சிலிப்பட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் குட்லவல்லேறு மண்டலம், வேமாவரத்தில் உள்ள கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

    • பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.
    • பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தோசிப்புடி நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.

    நேற்று அதிகாலை பதுக்கி வைத்திருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் விழுந்தது. இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த நிலையில் பட்டாசுகள் அங்குள்ள பெட்ரோல் பம்ப் மீது விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    பெட்ரோல் பங்கில் இருந்து தீப்பிழம்பு வானத்தை முட்டும் அளவு கிளம்பியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என எண்ணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    தீயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது. வெடி சத்தம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசு பதுக்கி வைத்தவர்கள் யார்? குடோனில் பட்டாசு வைக்க அனுமதி வாங்கி உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபர் ஆத்திரமடைந்து இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.
    • பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார்.

    திருப்பதி:

    ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் இருந்து 28 வயது இளம்பெண் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வெளியே வந்தார்.

    அப்போது வழியில் மது போதையில் இருந்த மாரய்யா (வயது 38). என்பவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இதனை வாலிபரின் தாய் அருகில் இருந்து வேடிக்கை பார்த்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் மாரய்யாவை தாக்க முயன்றார்.

    இதில் வாலிபர் ஆத்திரமடைந்து இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார். அவரையும் வாலிபர் தாக்கினார்.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலமுறை கெஞ்சியபோதும் மது போதையில் இருந்த மாரய்யா அவரை சுமார் 15 நிமிடங்கள் நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

    பின்னர் மாரய்யா அங்கிருந்து கிளம்பியதும் சிலர் அருகில் இருந்த பிளக்ஸ் பேனர்களை எடுத்து அந்த இளம்பெண் மீது போர்த்தினர். மேலும் ஜவகர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரய்யாவை நேற்று கைது செய்தனர்.

    ×