வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் சென்ற பயணி: கழிவறைக்குள் சிகரெட்டை பற்ற வைத்ததால் பீதி

ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார்.பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் சென்ற பயணி: கழிவறைக்குள் சிகரெட்டை பற்ற வைத்ததால் பீதி
Published on

திருப்பதியில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார். பின்னர் தான் வைத்திருந்த சிகரெட்டை பற்ற வைத்தார். அப்போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த தீப்பிடித்ததற்கான அலாரம் ஒலித்தது.

இதனால் பயணிகள் மத்தியில் தீ பிடித்ததாக பீதி ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் மானுபாலு என்ற ரெயில் நிலையம் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு விரைந்து சென்றனர். அலாரம் ஒலித்த கழிவறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது உள்ளே ஒருவர் கையில் சிகரெட்டுடன் இருந்ததை பார்த்தனர். உடனே அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர் நெல்லூர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com