search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்
    X

    போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்

    • ஒரு லாட்ஜிக்கு மாணவியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.
    • வாலிபர் தான் போலீஸ்காரர் எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்து தெரிய வந்தது.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார்.

    இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ் உடையில் கம்பீரமான போட்டோவுடன் அறிமுகமானார். அவருடன் மாணவி இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கினார்.

    அப்போது வாலிபர்தான் வாமஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். நாளடைவில் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.

    அடிக்கடி வாலிபர் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறிக் கொண்டே இருந்தார்.

    அவரது காதல் வலையில் விழுந்த மாணவி வாலிபரை காதலிக்க தொடங்கினார்.

    இருவரும் கத்ரி கோவில் மங்களூருவில் உள்ள தன்னி பாவி கடற்கரைகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து விதவிதமாக போட்டோ எடுத்தனர்.

    அந்த போட்டோக்களை தனது செல்போனில் வைத்துக் கொண்ட வாலிபர் மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்ட தொடங்கினார்இதனை கேட்டதும் மனைவி அதிர்ந்து போனார்.

    பயந்து போன மாணவி வாலிபருடன் செல்லத் தொடங்கினார். பெங்களூர் அருகில் உள்ள நெலமங்களாவில் உள்ள ஒரு லாட்ஜிக்கு மாணவியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    மேலும் மங்களூருக்கு அருகிலுள்ள கிளி கோழியில் உள்ள ஒரு லாட்ஜுக்கும் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அப்போது மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ, படம் எடுத்தார்.நாளுக்கு நாள் வாலிபர் மாணவியிடம் அத்துமீறி கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தனக்கு ரூ.1.50 லட்சம் தர வேண்டும்.

    இல்லாவிட்டால் உனது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

    மாணவி பணம் தர மறுத்ததால் மாணவியின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.அப்போதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    மாணவியை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர் உண்மையான போலீஸ்காரர் இல்லை என்பது தெரியவந்தது. அவர் ஒரு நாடக நடிகர்.

    நாடகங்களில் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் .அதனை புகைப்படமாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    மேலும் வாலிபர் தான் போலீஸ்காரர் எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்து தெரிய வந்தது.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபர் யமனூராவை கைது செய்தனர்.

    சமூக வலைதளங்களில் நட்பு வைத்துக் கொண்டு, காதல் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    பெண்கள் மற்றும் பெற்றோர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×