என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில அறிகுறிகள் ஆபத்தை ஏற்படுத்தும்.
    கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலில் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தில் இதிக எடையுள்ள பொருட்களை தூக்கக்கூடாது. சில உணவுகளை உண்ணக் கூடாது மேலும் சில பாதிப்புகள் கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்றது. இதை சாதரணமாக நினைத்து விடக்கூடாது இதை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

    கால்வீக்கம் - கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடை குழந்தையை சுமப்பதற்காக அதிகரிக்கும். அப்போது அதிகரிக்கும் போது கால்கள் பெண்ணின் எடையை சுமக்கும் போது கெண்டைக் கால்கள் வீங்கி விடுகின்றது. இதை சாதரணமாக மருந்துகளைப் போட்டு தேய்த்து சரிசெய்து விடலாம். மீண்டும் வலி நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

    கடுமையாக இரத்த சோகை - கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்து பகிரப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் தாய்க்கு ஊட்டச்சத்து குறைந்து இரத்தச் சோகை ஏற்படும் நல்ல பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கவேண்டும். இரத்தச்சோகையால் உடல் சோர்வாகிவிடும். இதை முதலில் கவனிக்க வேண்டும்.

    இரத்தக் கசிவு - இந்த இரத்தக் கசிவு என்பது கருப்பையில் இருந்து வரக்கூடியது. மாதவிடாய்க்காலத்தில் வரும் இரத்தக் கசிவு கரு உண்டானப்பிறகு வரக்கூடாது. சிசுவிற்கு ஏதாவது பிரச்சினை என்றால் கரு சிதைந்து விடும். இரத்தக் கசிவை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    அடி வயிற்று வலி - பெண்களின் பிரச்சினையே அடி இறக்கம் தான். அதுவும் பேறு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி கர்ப்பையில் இருந்து வருவது. குறைமாத பிரசவம், அரைகுறை பிரசவம் போன்றவைகள் ஏற்பட இந்த வயிற்றுவலி தான் காரணம். வலி தாங்க முடியவில்லை என்றால் கைவைத்தியம் பலிக்காது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



    வாந்தி மற்றும் பேதி - கர்ப்பம் தரித்த முதன்மை மாதங்களில் வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை வருவது இயல்பு தான் ஆனால் கர்ப்பம் வளர்ந்தப் பின் வரும் வாந்தி மற்றும் பேதி ஆகியவை உணவு செரியாமை மற்றும் உணவில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் வரக்கூடியது.

    அடிக்கடி தலைவலி - தலைவலித்தல், தலைச்சுற்றல், வெயிலில் விரும்பி உட்கார்தல் போன்றவைகள் கடுமையான காய்ச்சலுக்கு அறிகுறிகள். உடனே சரிசெய்ய மருத்துவரை அணுக வேண்டும்.

    வலிப்பு - சிறு வயதில் தாய்மை அடைதல், போதிய சத்துக்கள் இல்லாததால் வலிப்பு நோய் வருகின்றது. இது பிரசவத்திற்கு முன்னரும் பின்னரும் வரக்கூடாது. இது இரணஜன்னி என்று பெயர் கூறுவர். இதை எக்காரணம் கொண்டும் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது தாய்க்கும் சேய்க்கும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும்.

    அசைவு - சரியாக 7 மாதத்திற்கு மேல் குழந்தையின் அசைவு ஆரம்பித்துவிடும் அசைந்து கொண்டு இருந்த குழந்தை திடீரென்று அசையாமல் இருந்தால் உடனே டாக்டரை அணுகவும் அல்லது வேகமாக அசைந்தாலோ அல்லது உதைத்தாலோ ஆபத்துதான்.

    இந்த அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித தாமதமும் இன்றி மருத்துவரை அணுகி கவனிக்கவும்.
    கர்ப்ப காலத்தில் மிகப்பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது முதுகுவலி. உங்களது அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாக கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம்.
    கர்ப்ப காலத்தில் மிகப்பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது முதுகுவலி. உங்களது அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாக கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம். சில எளிய பயிற்சிகளும் வலியிலிருந்து விடுதலை தரும்.

    1. கை மற்றும் கால்களைத் தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள். உங்கள் முதுகின் மீது ஒரு கண்ணாடித் தட்டை நீங்கள் நிலை நிறுத்தியிருப்பதாக கற்பனை செய்து கொண்டு முதுகை நேராக வையுங்கள். இப்போது உங்கள் சுவாசத்தைப் பிடித்துக்கொண்டு முதுகுத் தசைகளாலேயே அந்தத் தட்டை உந்தித் தள்ள வேண்டும். இது உங்கள் அடிவயிற்றுத் தசைகளை மேல்நோக்கி இழுத்தாலே முடியும். மீண்டும் சமநிலைக்குத் திரும்பி இப்பயிற்சியை 6 முதல் 8 முறை செய்யுங்கள். ஒவ்வொரு நிலையையும் 5 நொடிகளுக்கு மாறாமல் வைத்திருங்கள்.

    2. சுவரைப் பார்த்து நின்று கொண்டு ஒரு காலின் முன்னால் மறுகாலை வைத்து நில்லுங்கள். கைகளை மடித்து முழங்கை முனைகளால் சுவரைத் தொடுங்கள். இவ்வாறு செய்யும்போதே சற்றே முன்னால் சரிந்து உங்கள் உள்ளங்கைகளை தலைக்குப் பின்னால் கொடுத்து விட்டு அடிவயிற்றைப் பின்னால் இழுத்துக் கொள்ளுங்கள். 5 வரை எண்ணுங்கள், பிறகு சமநிலைக்குத் திரும்புங்கள். இதே போல் 6 முதல் 8 முறை செய்யுங்கள். பிறகு அடுத்த காலை முன்னால் வைத்து மீண்டும் இதே பயிற்சியை செய்யுங்கள்.



    3. ஒவ்வொரு தோள்பட்டையையும் முன்னால் திருப்பி 5 முறை பின்னால் திருப்பி 5 முறை பயிற்சி செய்வது, மேல் முதுகு வலியைப் போக்கும் (கனமான மார்பகங்கள் முதுகுவலியை உண்டாக்கும் - உங்கள் பிரா போதுமான அளவு தாங்குகிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்).

    பின்வருபவை ஏற்படும் பட்சத்தில் உங்கள் மருத்துவரை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்...

    *  மிகச்சிவந்த நிறத்தில் பிறப்புறுப்பிலிருந்து ரத்தக்கசிவு...
    *  தண்ணீர் குடத்திலிருந்து கசிவது (திடீரென வருவது அல்லது மெல்லக் கசிவது)...
    *  அடிவயிறில் அல்லது பக்கவாட்டில் நிலைத்திருக்கும் வலி...
    *  கண்கூசும் ஒளிவிளக்குகளைக் காணும்போது - இருளும் அல்லது மங்கலாகும் பார்வை, மோசமான தலைவலி, தலை சுற்றல், முகம் அல்லது உடல் வீக்கம்...
    *  குளிர்க்காய்ச்சல்...
    *  சிறுநீர் கழிக்கையில் வலி...
    *  சிசு அசையாமல் இருப்பது...
    நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும்.
    ஆண்கள் எப்போதும் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொள்வதில் குறியாய் இருப்பார்கள். ஆனால், உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட, சில சமயம்தானே உருவாகும் நேரங்களில் நீங்கள் கட்டாயம் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் உங்கள் மனமும், வாழ்க்கையும் சாந்தியடையும்.

    தாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலமாக உடல்திறன் அதிகரிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. தாம்பத்தியம் வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மற்றும் மனது இலகுவாகிறது.

    இதனால் உங்கள் உடல்சோர்வும், மன சோர்வும் விலகும். அதிலும் நீங்கள் காலை வேளைகளில், உங்களது கடுமையான நாட்களில், உடற்பயிற்சி செய்த பின்னர், நீங்கள் மனஇறுக்கமாக உணரும் போது போன்ற சில தருணங்களில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும்போது நீங்கள் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். இதனால் உங்களது மனநிலை நல்ல மாற்றம் அடையும். இதுபோல சில தருணங்களில் நீங்கள் தாம்பத்தியம் மேற்கொள்வது உங்கள் நலத்திற்கு நல்லது…

    நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும். நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்கு போகும் முன்னர் அல்லது நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் முக்கியபோட்டிகளில் பங்குப் பெறும் முன்னர் தாம்பத்தியம் கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும், மனஅழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்லமுறையில் செயல்பட தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உதவும்.

    காலை பொழுதுகளில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது மற்றும் மனஅழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்.



    தாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, சாதாரண காய்ச்சல், சளிபோன்ற சாதாரண நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.

    பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20 % பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

    உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

    ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளி வர தாம்பத்தியம் வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.

    சிலதருணங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக நீங்கள் அச்சப்படநேரிடும். அதுபோன்ற உணர்வுகளில் இருந்து எளிதாக வெளி வரவேண்டும் எனில் தாம்பத்தியத்தில் ஈடுப்படுவது சரியான தீர்வு என கூறப்படுகிறது.
    பெண்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
    மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.

    இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்து இதை குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும்.



    மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வில்வ இலை ஒருபிடி எடுத்து பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஆறிய பின்னர் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து குடித்தால் அதிக உதிரப்போக்கு சரியாகும். காலை, மாலை என 3 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

    மாதவிலக்கு சீராக இருப்பது அவசியம். அதிக உதிரப்போக்கால் உடல் பலவீனம் ஏற்படும். 3 நாட்கள் வரவேண்டிய மாதவிலக்கு அதிகநாட்கள் தொடரக்கூடாது. இப்பிரச்னைக்கு வில்வ இலை அற்புத மருந்தாகிறது. ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். அருகம்புல் சாறு கால் டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் காலையில் குடித்துவர அதிக உதிரப்போக்கு சரியாகும்.

    வாழைப் பூவை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வாழைப் பூவை பொரியல் செய்வது போன்று சுத்தப்படுத்தி நீர் விடாமல் பசையாக அரைக்கவும். ஒரு ஸ்பூன் வாழைப்பூ பசையுடன் ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வெள்ளைப்போக்கிற்கு இட்லி பூ மருந்தாகிறது. இதை தேனீராக்கி குடிப்பதால் வெள்ளைப்போக்கு பிரச்சனை சரியாகும்.
    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது களைப்பு மற்றும் சோர்வு அடிக்கடி ஏற்படும். இப்போது கர்ப்பிணிகளின் சோர்வை போக்கும் உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.
    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது களைப்பு மற்றும் சோர்வு அடிக்கடி ஏற்படும். அதிலும் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு சோர்வு ஒரு பெரும் தொந்தரவாக இருக்கும். ஏனெனில் விரும்பிய படி எதையும் செய்ய முடியாதவாறு இருக்கும். எப்போது பார்த்தாலும், சோம்பேறித்தனமாக, மயக்க நிலையில், உடலில் சக்தியின்றி சோர்வுடன் இருக்க நேரிடும். பெரும்பாலும், இந்த பிரச்சனை முதல் மூன்று மாதங்களிலும், இறுதி மூன்று மாதங்களிலும் தான் இருக்கும்.

    அதிலும் முதல் மூன்று மாதங்களில் ஏற்படுவதற்கு பெரும் காரணம், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் அதிகப்படியான புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சுரப்பு போன்றவை சோர்வை ஏற்படுத்துகின்றன. மேலும் இறுதி மூன்று மாதத்தில் ஏற்படுவதற்கு அதிகப்படியான உடல் எடை தான். அதுமட்டுமல்லாமல் முதுகு வலி, போதிய தூக்கமின்மை, தசை பிடிப்புகள் மற்றும் கால் வலி போன்றவையும் ஏற்படுவதால், விரைவில் உடலானது சக்தியின்றி சோர்ந்து விடுகிறது.

    எனவே கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன் கவனமாகவும், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அவ்வப்போது சிறு உடற்பயிற்சிகளான நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் சக்தி கிடைத்து, புத்துணர்வுடன் இருக்கலாம். இப்போது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் சில உணவுகளை சிலவற்றை பார்ப்போம்.

    கடல் உணவுகளில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அதே சமயம் அதில் மெர்குரி அதிக அளவில் இருப்பதால், இதனை அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அது தீங்கை விளைவிக்கும்.

    தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆரோக்கியமான ப்ரோ-பயோடிக் பாக்டீரியாவும் நிறைந்திருப்பதால், இது சோர்வை தடுக்கும்.

    கீரைகளில் பசலைக் கீரையில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் புரோட்ஐன்கள் நல்ல அளவில் உள்ளன. அதே சமயம் இதில் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சோர்வை நிச்சயம் தடுக்கலாம்.

    வாழைப்பழத்தில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இந்த ஆசிட் உடலில் ஹீமோகுளோபினின் எண்ணிக்கையை அதிகரித்து, உடல் வலி மற்றும் பிரச்சனையில்லாத பிரசவத்தைக் கொடுக்கும்.



    கர்ப்பமாக இருக்கும் போது உடல் வலிமையின்றி இருக்கும். எனவே நன்கு வலிமையோடும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் சோர்வு நீங்குவதோடு, எலும்புகள் நன்கு வலிமைபெறும். இத்தகைய கால்சியம் வெந்தயக் கீரையில் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் இந்த கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது.

    சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிக அளவில் உள்ளன. எனவே சோர்வினை நீக்குவதற்கு, பெண்கள் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

    பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரத்தச் சோகையினால், சோர்வு ஏற்படும். எனவே இரத்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காராமணியை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

    டோஃபுவில் கலோரி மற்றும் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. மேலும் இதில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் சோர்வினைப் போக்குவதற்கு, டோஃபுவை அதிகம் சாப்பிட வேண்டும்.

    பார்லியில் இரும்புச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதுவும் சோர்விலிருந்து விடுதலை தரக்கூடிய உணவுகளில் ஒன்றாகும்.

    கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் சோர்வை உணரும் போது கேரட்டை ஜூஸ் போட்டு குடித்தால், சோர்வை தவிர்க்கலாம்.

    கர்ப்பத்தன் போது கால்சியம் குறைபாடு இருந்தால், அது சோர்வை உண்டாக்கும். எனவே இத்தகைய குறைபாட்டை போக்குவதற்கு, நூல்கோல் கீரையை சாப்பிட்டால், சோர்வு நீங்கி, உடல் வலிமையோடு இருக்கும்.
    பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமான 3 முக்கிய பிரச்சனைகள் பற்றியும் அதனை எளிய முறையில் தீர்ப்பதற்கான வழிகளை பற்றியும் பார்க்கலாம்.
    குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு… பெரும்பாலும் நம்மிடமே இருக்கிறது. நம்முடைய உடல்நலத்தை தகுந்தபடி பேணுவதோடு, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் அக்கறை காட்டினால், இத்தகைய பிரச்னைகளில் இருப்பவர்களில் 80 சதவிகிதத்தினருக்கும் மேல், குழந்தைப்பேறு அடைய முடியும்.

    பெரும்பாலான கருத்தரிப்பு பிரச்னைகளை சிகிச்சையின்றியே தீர்த்துக்கொள்ளலாம். கருத்தரித்தலுக்கான முக்கியக் காரணமான மாதவிடாய் சிக்கல் ஏற்பட, நீர்க்கட்டிகளே பிரதான காரணம். சத்து இல்லாத ‘ஜங் ஃபுட்’ உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமான இனிப்புகள் உண்பது, எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடப்பது, நேரங்காலமில்லாமல் உண்பது, உரிய நேரத்தில் உண்ணாமல் இருப்பது… இதுபோன்ற காரணங்களால் நீர்க்கட்டிகள் ஏற்படலாம். தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் சேர்த்து, முறையாக யோகா செய்தாலே போதும்… நீர்க்கட்டிகளைத் தவிர்க்கலாம். பெற்றோர்களே… இதை கண்டிப்பாக உங்கள் பெண் பிள்ளைகளிடம் அறிவுறுத்துங்கள்.

    ஏற்கெனவே நீர்க்கட்டி இருப்பவர்கள், அதிலிருந்து குணம்பெற தினமும் 45 நிமிடம் வேகமான நடைபயிற்சி செய்யலாம்; 30 நிமிடங்கள் யோகா செய்யலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதுடன் சிறுதானியம், கீரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும் இனிப்பையும் அறவே தவிர்க்க வேண்டும். சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பவருக்கு சர்க்கரை மற்றும் தைராய்டு பிரச்சனை இருக்கும்பட்சத்தில், சுயமருத்துவமின்றி சித்த மருத்துவரை அணுகி தீர்வுகாண வேண்டும்.

    அடுத்த பிரச்சனை, சினைப்பை அடைப்பு. இதற்கு மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே, மற்ற சிகிச்சைகள் எடுப்பதற்கு முன் கவுன்சலிங் எடுத்துக்கொண்டு, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே, அடைப்பு தானாக நீங்கிவிடும். அதேபோல் வெள்ளைப்படுதல் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக மாதவிடாய்க்கு 4 நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், துர்நாற்றம் வீசக்கூடிய அளவுக்கு அடிக்கடி வந்தாலோ… பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.



    இதிலிருந்து விடுபட, வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு வைத்து சாப்பிடலாம். வெள்ளைப்பூசணி சாறு எடுத்துக்கொள்வதும் நல்லது. கண்டிப்பாக கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். சோற்றுக்கற்றாழை சாற்றை, உணவுக்கு முன் காலையில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சோற்றுக்கற்றாழை லேகியம் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்று இருக்கும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகுதல் நல்லது.

    கருமுட்டையானது சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவையும் பெண்களைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

    ஆண்களைப் பொறுத்தவரை, விந்தணு உற்பத்தி எண்ணிக்கை குறைவு, விந்தணு உற்பத்தியில்லாத ஆண்மைக் குறைவு, விந்தணுவின் இயக்கத்தில் குறைபாடு ஆகியவை முக்கியக் காரணங்கள். ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் அருந்த வேண்டும். பயறு வகைகளையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    திருமணத்திற்கு முன் அழகாக தோன்ற வேண்டும் என்று கவனம் செலுத்தும் பெண்கள் திருமணத்திற்கு பின் அதை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதனால் பெண்களின் உடல் எடை அதிகரித்துவிடும்.
    திருமண கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் புகுந்த வீட்டில் புதிய விதிமுறைகள் எல்லாம் இருக்கும், சிலவற்றை அனுசரித்து போக வேண்டியிருக்கும். பலர் திருமணத்திற்காக உடல் எடையை குறைத்திருப்பார்கள். ஆனால் சில காரணங்களால் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்துவிடும். பெரும்பான்மையான பெண்கள், திருமணத்திற்கு முன்னர் துரும்பு போல இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு குண்டாகிவிடுவார்கள்.

    தம்பதிகள் திருமணம் முடிந்து நிறைய விருந்துகளுக்கு செல்வார்கள். அங்கு நிறைய சாப்பிட சொல்வார்கள், பின்னர் தேன்நிலவு செல்வார்கள். நிச்சயம் வெளியிடங்களில் தான் சாப்பிட்டாக வேண்டும். இதனால் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வார்கள். புது வீட்டில் பெண்ணுக்கு சில மன அழுத்தம், பயம் இருக்கும் அதனுடன் அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்துவிடும். மேலும் வைட்டமின் குறைபாடுகளும் உடல் எடை அதிகரிக்க காரணமாகும்.

    சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுவதும் ஒரு காரணம். தாய் வீட்டில் ஒரு மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடித்திருப்பார்கள், ஆனால் புகுந்த வீட்டில் வேறு மாதிரியான உணவு பழக்கம் இருக்கும். அவர்களை கவர்வதற்காக புகுந்த வீட்டு உணவு பழக்கத்திற்கு பெண்கள் மாறிவிடுவார்கள். இதனால் உடல் எடை கூடும்.



    திருமணமான புதிதில் அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுதல். உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என அனைவரும் வீட்டிற்கு அழைப்பார்கள். வார இறுதியில் அல்லது வார நாட்களில் கூட இது நடைபெறும். வெளியில் சாப்பிடும் உணவுகளில் அதிக கலோரிகளும், குறைந்த சத்துகளும் இருக்கும். இதனால் உடல் எடை கூடும்.

    திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டில் பெண்ணுக்கு பிடித்தது போல சாப்பிடுவார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்களது கணவருக்கு பிடித்த உணவுகளை சமைப்பார்கள். மிச்சமாகிவிட கூடாது என்று அதிகமாக சாப்பிட்டுவிடுவார்கள்.

    திருமணத்திற்கு முன்னால் பெண்கள் அழகாக தோன்ற வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என சில விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அதை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதனால் பெண்களின் உடல் எடை அதிகரித்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.
    அதிகப்படியான பெண்கள் இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.

    ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.

    ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது. இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும். ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் தொற்றுக்களும், புண்களும் உண்டாகும். ஆனால் துணி நாப்கின்களில் இயற்கையான பஞ்சு உபயோகப்படுத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

    ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் பஞ்சு, பிளாஸ்டிக் என எந்த மெட்டிரியல்களால் செய்யப்பட்டிருந்தாலும் கூட இதில் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும். ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.

    துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான். ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.

    இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
    ஏதோ சில காரண்களுக்காக கணவன் - மனைவி இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவதால் உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.
    திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதோ சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.

    1. கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    2. படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.



    3. நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.

    4. நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.

    5. உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.

    6. உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
    சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய சிறு நீராகப்பாதைத் தொற்றை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன் எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.

    தடுப்பு முறைகள்:- வருமுன்காப்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான, உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். கொக்கோ கோலா, காபி, சாக்லேட் அருந்தக்கூடாது.

    2. வெள்ளைப்படுதல்:- வளர் இளம் பெண்கள் வெள்ளப்படுவதை ஒரு பெரும் வியாதியாக நினைத்து பயப்படுகிறார்கள். இதைப்பற்றிய விழிப்புணர்வு வளர் இளம் பெண்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். வெள்ளைப்படுவது என்பது வாயில் உழிழ்நீர் சுரப்பது போன்ற பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் போன்ற திரவம் ஆகும். நாம் எவ்வாறு உமிழ்நீர் சுரப்பை ஒரு வியாதியாக கருதவில்லையோ அதேபோல் பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவத்தையும் (வெள்ளைப்படுதல்) ஒரு நோயாக கருதக்கூடாது.எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்றால்;



    a. பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவமானது துர்நாற்றம் அடித்தாலோ,

    b. பிறப்பு உறுப்பில் ஊரல் எடுத்தாலோ,

    c. பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவமானது நிறம்மாறி வந்தாலோ (பச்சை, மஞ்சள்)

    d. நாப்கின் வைக்கும் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ.

    3. obesity& pcod மற்றும் முன்மாதவிடாய் சிக்கல்கள் - இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்

    1. மாறுபட்ட நாகரீக வாழ்கை முறை

    2. துரித உணவுகள் உட்கொள்ளுதல்

    3. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

    மாறுபட்ட நாகரீக வாழ்க்கை முறை:- தற்பொழுது உடல் உழைப்பு, விளையாட்டு ஏதுமின்றி வளர் இளம் பெண்கள் டிவி, கம்யூட்டர், செல்போன்,செல்பி என்றுதான் இருக்கிறார்கள். முன்பு போல கிணற்றில் நீர் இறைக்க, அம்மி ஆட்டுக்கல் அரைக்க, அதிகாலையி்ல் எழுந்து குனிந்து கோலம் போட, மாலையில் விளையாட்டு என்ற இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

    பூப்பெய்திய பருவத்தில் கிடைக்கும் உளுந்தங்களி, வெந்தயக்களி, போன்ற உணவுகள் எல்லாம் தற்காலக இளம்பெண்கள் சாப்பிடுவதில்லை. இவையெல்லாம் சினை உறுப்பு வளர்ச்சி, கருப்பை மற்றும் இடுப்பெலும்பு விரிவடைய உதவும்.

    இவ்வாறின்றி தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையால் உடல் அதிக எடை அடைதல், சினை உறுப்பு வளர்ச்சியின்றி அவற்றில் நீர் கோர்த்து கருமுட்டை வளராது, வெடிக்காது, pcod உண்டாதல். இதனால் ஒழுக்கமற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மையை உண்டாகிறது.
    தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
    பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம்கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

    வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.

    இப்போது மட்டுமல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள் தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்துவிட்டார்கள். 70 சதவிகித பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பதுதான் வேதனை.

    இன்றைய காலகட்டத்திலோ, பெண்கள் நினைத்தால்கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டாலும், பெண்களுக்குத்தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்கமுடியாத நிஜம். வேலைகளை முடித்துவிட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே படுத்துவிடுவதும்கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்குதான்.



    இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி. இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக்கொள்ளாது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ‘மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம், இது குறைவாக சுரப்பதுதான்!

    இந்தச் செயல்பாட்டைத் தலைகீழாக மாற்றும்போது, உடல்நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள்.

    தூக்கமின்மை காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும்.

    ஆண்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுகிறார்கள். பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார்கள். ‘நான் ஆறு மாசமா தலைவலியால அவதிப்படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்துகிறேன் டாக்டர்’ என்பவர்களை ஆராய்ந்தால், தூக்கம்தான் பெரும் பிரச்சனையாக இருக்கும். தூக்கமின்மை என்பது, நம் உடல்நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.
    கணவன், மனைவிக்குள் சில விஷயங்களை விட்டு கொடுத்து சென்றால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். இன்று கணவர் மனைவியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கணவன், மனைவிக்குள் சில விஷயங்களை விட்டு கொடுத்து சென்றால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். கணவன் மனைவியை அடிமை போல் நடத்தாமல் அன்புடன் நடத்த வேண்டும். அப்போது தான் குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகள் இல்லாமல் சந்தோஷமாக அமையும்.

    உங்கள் மனைவி உங்களிடம் பேசும் போது அவர்கள் சொல்வதை நன்றாக கவனியுங்கள்.. (தங்கள் சொல்லிற்கு மதிப்பு தருவதில் பெருமிதம் கொள்வார்கள்..)

    குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.. (அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது..!)

    உங்கள் மனைவியிடம் உள்ள தனித்திறமையை உணர்ந்து, மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.. (பெண்கள் தங்களை பாராட்டுவதையும் புகழ்வதையும் அதிகம் நேசிப்பார்கள்..)

    உங்கள் மனைவியிடம் பொய் சொல்வதை தவிருங்கள்.. (கணவன் சொல்லும் பொய்களை அவர்கள் விரும்புவதில்லை…)

    உங்கள் மனைவியிடம் அடிக்கடி குற்றம் கண்டுப்பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள்..(அதிலும் குழந்தைகள் முன் தங்களை குறைக்கூறுவதை பொதுவாகவே பெண்கள் விரும்புவதில்லை..)

    உங்கள் மனைவியின் ஆடை அலங்காரத்தை ரசித்து வர்ணியுங்கள்.. (உங்கள் வார்த்தைகள் தரும் மகிழ்ச்சி, அவர்கள் மன நிறைவிற்கு வித்திடும்..)



    உங்கள் மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவர்களுக்கு உதவுங்கள்.. (அவர்கள் அதை எதிர்ப்பார்க்காவிட்டாலும், ரசிப்பார்கள்..)

    எவ்வளவு பிரச்சனை வந்தாலும், மனைவியின் பிறந்த வீட்டினரை அவமானப்படுத்தும்படி பேசாதீர்கள்.. (இதனால் அவர்கள் மனதில் உங்கள் வீட்டினரை பழி வாங்கும் வெறுப்புணர்ச்சியாக மாறி விடக்கூடும்..)

    உங்கள் மனைவியின் பிறந்த நாளையும், உங்கள் திருமண நாளையும் நினைவில் வைத்து, அந்த நாட்களில் அவர்களை கோவிலுக்கோ அல்லது அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல மறவாதீர்கள்.. (மற்ற நாட்களை விட, இதுப் போன்ற நாட்களில் கணவனுடன் இருப்பதை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்..)

    உங்கள் மனைவி குழந்தை பெற்றுத் தரும் இயந்திரம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுங்கள். (தன்னை மதிக்கும் கணவனுக்கு பணிவிடை செய்வதில் முதலிடம் தருபவர்களும் அவர்களே..)

    உங்கள் மனைவி எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு பிடித்த சேலை மற்றும் சுரிதாரை பரிசாக அளித்து அவர்களை மகிழ்வித்து மகிழுங்கள்..!
    ×