search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natural Medicine"

    • தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில்தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன்,தமிழாசிரியர் சிவக்குமார், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
    • மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.

    * சளி தொல்லைக்கு மிளகை நன்றாக பொடித்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.

    * அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

    * கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

    * மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

    * மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலை பாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.

    * ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

    * மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது.

    * மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நஞ்சை முறுக்கும் தன்மை கொண்டது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார்.
    • மருத்துவர் ஜென்சி ஷைலா இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆரோக்கிய வாழ்விற்கான இயற்கை மருத்துவமும், அணுகுமுறைகளும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். இளம் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிருந்தா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன் மற்றும் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் பனிமாதா இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் ஜென்சி ஷைலா இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து எடுத்துக்கூறினார். முடிவில், இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் கிரிஜா நன்றி கூறினார். இதில் அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கை மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக், கடலூர் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழினி சங்கம் இணைந்து “தமிழ் மருத்துவம் இனிய மருத்துவம்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
    • அக்குபஞ்சர்-ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவருமான டாக்டர் உஷாரவி கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கை மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக், கடலூர் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழினி சங்கம் இணைந்து "தமிழ் மருத்துவம் இனிய மருத்துவம்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    சகாயமேரி தலைமையில் சுசிலாதேவி முன்னிலையில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கையின் பொறுப்பாளரும் தி சுசான்லி அக்குபஞ்சர்-ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவருமான டாக்டர் உஷாரவி கலந்து கொண்டனர்.

    இயற்கை மருத்துவத்தின் அவசியத்தையும், அதனால் உடலுக்குக் கிடைக்கக் கூடிய பயன்களையும் எடுத்துரைத்ததுடன் மாணவிகளுக்கு அபாயக் கால முதலுதவிக்கான அக்குபிரஷர் புள்ளிகள் கற்றுக் கொடுத்தனர்.

    முன்னதாக சிவகாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கே. அன்னப்பூரணி மற்றும் புனிதவதி பேசினர். முடிவில் பி.அன்னப்பூரணி நன்றி கூறினார்.

    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #InternationalYogaDay2018
    சென்னை:

    சர்வதேச யோகா தினத்தை யொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    யோகா என்பது உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் அறிவியல் பூர்வ கலையாகும்.

    மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதட்டம் போன்றவற்றை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.


    தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் மூலம் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன.

    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் இவ்வசதிகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #InternationalYogaDay2018
    ×